ஜபம்-பதிவு-808
(சாவேயில்லாத
சிகண்டி-142)
சிகண்டினி :
காலத்தின் மூலம்
கர்மா என்ற திரை
எப்போது விலகும்
ஸ்தூணாகர்ணன் :
காலத்தின் மூலம்
கர்மா என்ற திரை
எப்போது விலகும் என்று
என்னால் சொல்ல
முடியாது
அது கர்மாவின்
விளைவினைப் பொறுத்தது
அது காலத்தைப்
பொறுத்தது
ஆனால்
அந்த காட்சிகள் உனக்கு
எதற்காக தெரிகிறது
என்று என்னால்
சொல்ல முடியும்
சிகண்டினி :
சொல்லுங்கள்
ஸ்தூணாகர்ணன் :
போன ஜென்மத்தில்
நீ செய்த செயல்கள்
உனக்கு காட்சிகளாக
வந்து போகிறது
சிகண்டினி :
எனக்கு வரும் காட்சிகள்
போன ஜென்மத்தின்
காட்சிகள் தான் என்று
எப்படி சொல்ல முடியும்
போன ஜென்மத்திற்கு
முந்தின ஜென்மத்தில்
நான் செய்த
செயல்களாக இருக்கலாம்
அதற்கு முந்தின
ஜென்மத்தில்
நான் செய்த
செயல்களாக இருக்கலாம்
அல்லது
அதற்கு பல
ஜென்மங்களுக்கு முன்னால்
நான் செய்த
செயல்களாகக் கூட
இருக்கலாம்
அல்லவா
ஸ்தூணாகர்ணன் :
இல்லை
நீ கண்ட காட்சிகள்
அனைத்தும் போன
ஜென்மத்தின் காட்சிகள்
மட்டுமே
சிகண்டினி :
போன ஜென்மத்தின்
காட்சிகள் என்று
எப்படி உறுதியாகச்
சொல்கிறீர்கள்
ஸ்தூணாகர்ணன் :
ஒரு ஜென்மத்தில்
கண்டிப்பாக
செய்து முடித்தே தீர
வேண்டும் என்று
ஆரம்பித்த செயலை
தொட்டு விட்டு
ஒரு சில காரணங்களால்
அந்த ஜென்மத்தில்
அந்த செயலை
முடிக்காமல்
விட்டு விட்டு வந்தால்
அடுத்த ஜென்மத்தில்
எந்த செயலை தொட்டு
விட்டு விட்டு வந்தோமோ
அந்த செயலை
முடிப்பதற்கான
காலம் வரும் போது
அந்த செயல் நமக்கு
கொஞ்சம் கொஞ்சமாக
வெளிப்படும்
உனக்கு வந்து
செல்லும் காட்சிகள்
போன ஜென்மத்தில்
கண்டிப்பாக செய்து
முடித்தே தீர
வேண்டும் என்று
நீ தொட்டு
விட்டு விட்டு
வந்த செயல்களின்
காட்சிகள் தான்
இந்த காட்சிகள்
எப்போதிலிருந்து உனக்கு
தெரிய ஆரம்பித்தது
சிகண்டினி :
(சிகண்டினி யோசிக்கிறாள்)
எனக்கு ஞாபகம்
வந்து விட்டது
அரண்மனையை விட்டு
வெளியே வரும் போது
அரண்மனை
வாயிலில் மாட்டி
வைக்கப்பட்டிருந்த
வாடாத தாமரை மாலையை
என்னுடைய கழுத்தில்
மாட்டியதிலிருந்து தான்
இந்த காட்சிகள்
எனக்குத் தெரிகிறது
ஸ்தூணாகர்ணன் :
அப்படி என்றால்
உனக்கும் அந்த மாலைக்கும்
ஏதோ ஒரு
சம்பந்தம் இருக்கிறது
மாலையைப் பற்றிய
ரகசியத்தைக்
கண்டுபிடித்தாலே
உனக்கு வரும்
காட்சிகள் எதற்காக
வருகிறது
என்ன காரணத்திற்காக
வருகிறது
எந்த விஷயதைச்
சொல்ல வருகிறது
என்பது தெரிந்து விடும்
மாலையைப் பற்றி
யாருக்கேனும்
தெரிந்து இருந்தால்
அவர்களிடம் கேட்டும்
ரகசியத்தைத் தெரிந்து
கொள்ளலாம்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----20-07-2022
-----புதன் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment