ஜபம்-பதிவு-810
(சாவேயில்லாத
சிகண்டி-144)
ஸ்தூணாகர்ணன் :
உன்னைப் போல்
உலக அனுபவம்
பெற்ற ஒருவர்
எனக்கு பிள்ளையாக
இருப்பதில் எனக்கு
மகிழ்ச்சி தான்
ஆனால்
உன்னைப் பற்றி ஒரு
சில விஷயங்கள்
மட்டுமே எனக்குத் தெரியும்
அதை வைத்துக்
கொண்டு உனக்கு
என்னால் எப்படி
உதவிகள் செய்ய முடியும்
கஷ்டத்தில்
இருக்கும் போது
உதவி வேண்டும்
என்று கேட்டு வருபவர்கள்
உதவியைப் பெற்று
மகிழ்ச்சியை அடைந்தவுடன்
உதவி செய்தவர்களை
மறந்து விடுகிறார்கள்
உதவியைப் பெறும்
வரை கால் பிடித்து
வாழ்கிறார்கள்
உதவியைப் பெற்றவுடன்
காலை வாரிவிட்டு
சென்று விடுகிறார்கள்
உதவி பெற்றவர்கள்
உதவி செய்தவர்களை
மறந்தாலும் பரவாயில்லை
ஆனால்
உதவி பெற்றவர்கள்
உதவி செய்தவர்களை
இழிவு படுத்தும்
வேலைகளைச்
செய்கின்றனர்
உதவி செய்தவர்களுடைய
மனம் வருந்தக் கூடிய
செயல்களைச் செய்கின்றனர்
அதனால் தான்
உதவி செய்ய வேண்டும்
என்று நினைப்பவர்களும்
உதவி செய்வதில்லை
இதை எல்லாம் மனதில்
கொண்டு தான்
நானும் யோசிக்கிறேன்
சிகண்டினி :
செய்த உதவியின்
நன்றியை மறப்பவர்கள்
எப்போதும் நன்றியை
மறக்கத் தான்
செய்வார்கள்
அவர்களை மாற்றவே
முடியாது
அதற்காக
உதவி பெறுகிறவர்கள்
அனைவருமே
நன்றியை மறப்பார்கள்
என்று சொல்ல முடியாது
இந்த உலகத்தில்
உள்ள அனைவரும்
ஒரே மாதிரியான
குணத்தைத் தான்
பெற்று இருப்பார்கள்
என்றும் சொல்ல முடியாது
பொய்யானவர்களால்
பாதிக்கப்பட்டதால்
உண்மையானவர்களை
ஏற்க மறுக்கிறீர்கள்
பாதிப்படைந்தவர்களின்
மனம் எந்த
ஒன்றைப் பார்த்தாலும்
யாரைப் பார்த்தாலும்
சந்தேகம் கொள்ளத்
தான் செய்யும்
உங்கள் பக்கத்தில்
இருந்து பார்க்கும் போது
அதைத் தவறு என்று
சொல்ல முடியாது
ஆனால் ஒன்று
அனைவரையுமே
சந்தேகக் கண்
கொண்டு பார்த்தால்
உண்மையானவர்களை
இழந்து விடுவோம்
ஸ்தூணாகர்ணன் :
நான் உனக்கு
செய்யப் போகும் உதவியை
நீ சாகும் வரை
மறக்க மாட்டேன்
என்கிறாயா
சிகண்டினி :
நான் அப்படி
சொல்ல வரவில்லை
ஸ்தூணாகர்ணன் :
பிறகு என்ன
சொல்ல வருகிறாய்
சிகண்டினி :
விதி வகுத்த வழியில்
செல்லக் கூடியவன்
மனிதன்
விதியை மாற்றிக்
கொண்டு செல்ல
மனிதனால் முடியாது
நாளை என்ன நடக்கும்
என்று யாராலும்
சொல்ல முடியாது
நீங்கள் செய்யப்போகும்
உதவியை வருங்காலத்தில்
நான் மறந்தும் விடலாம்
உங்களுக்கு எதிரே
எதிரியாகவும் நிற்கலாம்
உங்களுக்கு எதிராகவும்
செயல்படலாம்
உங்களை இழிவு
படுத்தும் வேலைகளையும்
செய்யலாம்
உங்கள் மனம்
வருத்தப்படும்
செயல்களையும் செய்யலாம்
அல்லது
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழு.த்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----20-07-2022
-----புதன் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment