February 19, 2023

ஜபம்-பதிவு-935 மரணமற்ற அஸ்வத்தாமன்-67 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-935

மரணமற்ற

அஸ்வத்தாமன்-67

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் :

உயிரினங்கள் மீது

அன்பைக் காட்டினால்

அவைகள் நம்முடன்

நட்பாகி நாம் என்ன

சொல்கிறோமோ

அதன்படி கேட்டு நடக்கும்

 

ஆணவத்தைக் காட்டி

அடிமைப்படுத்த

முயன்றால்

உயிரினங்கள்

நம்மை எதிர்க்கும்

 

அர்ஜுனன் குதிரையை

அன்பைக் காட்டி

நட்பாக்கி தன்

சொற்படி கேட்டு

நடக்க வைக்க வேண்டும்

என்று நினைக்கவில்லை

குதிரையின் மீது

ஆணவத்தைக் காட்டி

அதை அடிமையாக்க

நினைத்தான்

அதனால் குதிரை

அவனை எதிர்த்தது

 

தன்னை சிறந்த

திறமைசாலி என்றும்

விற்போரில் தன்னை

வெல்ல இந்த

உலகத்தில் யாரும்

இல்லை என்றும்

அர்ஜுனன் தன்னை

நினைத்துக் கொண்டு

இருக்கின்ற காரணத்தினால்

அவன் கண்ணை

மறைத்துக் கொண்டு

இருக்கும் ஆணவம்

அவனை யோசிக்காமல்

இருக்கும்படிச்

செய்து விட்டது

இதனால்,

உயிரினங்களின் மீது

அன்பு காட்டி

நட்பாக்கினால் மட்டுமே

உயிரினங்கள் நம்

சொற்படி கேட்கும்

என்ற சிந்தனை

அவனுக்கு தோன்றாமல்

போய் விட்டது

அதனால் தான்,

அவன் குதிரையின்

மீது தன்னுடைய

ஆணவத்தைக் காட்டி

அந்தக் குதிரையை

தனக்கு அடிமையாக்க

நினைத்தான்

அதனால் தான்,

அந்தக் குதிரை

அவனை எதிர்த்தது

 

நான் என்னுடைய

அன்பைக் காட்டி

குதிரையை நட்பாக்கி

என்னுடைய சொல்படி

கேட்டு நடக்க வைக்க

வேண்டும்

என்று நினைத்தேன்

அதனால்,

குதிரையிடம்

நாம் இருவரும்

நண்பர்கள் என்றேன்

என்னுடைய உணர்வுகளை

வெளிப்படுத்தினேன்

என்னுடைய அன்பை

புரிந்து கொள்ளும்படி

பேசினேன்

நண்பர்களாக இருப்பவர்கள்

தங்கள் அன்பை

பரிமாறிக் கொள்ள

வேண்டும் என்றேன்

 

குதிரை என்னுடைய

அன்பை புரிந்து கொண்டது

என்னுடைய நட்பை

ஏற்றுக் கொண்டது

குதிரை தன் மேல்

என்னை அமர விட்டது

என்னை சுமந்தது

மைதானத்தை

சுற்றி வந்தது

 

அன்பைக் காட்டி

குதிரையை நட்பாக்கிய

காரணத்தால் குதிரை

என் சொல்படி கேட்டது

ஆனால் அர்ஜுனன்

ஆணவத்தைக் காட்டி

குதிரையை

அடிமையாக்க முயன்றான்

அதனால்

குதிரை அவனை

ஏற்றுக் கொள்ளவில்லை

அவனை காலால்

எட்டி உதைத்து

மண்ணில் விழ வைத்தது

மண்ணைக் கவ்வ வைத்தது

 

அன்பைக்காட்டி

குதிரையை நான்

நட்பாக்கிய காரணத்தால்

நான் வெற்றி பெற்றேன்

ஆவணத்தைக் காட்டி

குதிரையை

அடிமையாக்க முயன்ற

காரணத்தால் அர்ஜுனன்

தோல்வி அடைந்தான்

 

உயிரினங்களிடம் அன்பைக்

காட்டினால் மட்டுமே

நம்முடன் நட்பாகி

நம் சொற்படி கேட்கும்

உயிரினங்களிடம்

ஆவணத்தைக் காட்டி

அடிமையாக்க

முயற்சி செய்தால்

அவைகள் எதிர்க்கத்

தான் செய்யும்

 

அர்ஜுனன் தோற்றதற்கும்

நான் வெற்றி பெற்றதற்கும்

இது தான் காரணம்

 

அஸ்வத்தாமன்

பேசி முடித்ததும்

துரியோதனனின் தம்பிகள்

அனைவரும்

ஒன்றாகச் சேர்ந்து

அஸ்வத்தாமனை தோள்

மேல் தூக்கி

வைத்துக் கொண்டு

அஸ்வத்தாமன் வாழ்க

அர்ஜுனன் ஒழிக என்ற

கோஷத்தை

எழுப்பிய படியே

வகுப்பை விட்டு சென்று

கொண்டிருந்தனர்

 

துரியோதனன் அவர்கள்

முன்னால் நடந்து சென்று

கொண்டிருந்தான்

 

துரோணர் எழுந்து நின்றார்

அவர் அருகில்

அர்ஜுனன் உட்பட

பாண்டவர்கள் ஐவரும்

தலை குனிந்தபடி

நின்று கொண்டு இருந்தனர்

 

அஸ்வத்தாமனின்

வெற்றிப் பயணம்

ஆரம்பமாகி விட்டது

 

------ஜபம் இன்னும் வரும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர் &

   பேச்சாளர்

 

-----18-02-2023

-----சனிக் கிழமை

//////////////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-934 மரணமற்ற அஸ்வத்தாமன்-66 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-934

மரணமற்ற

அஸ்வத்தாமன்-66

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

அமைதி

அமைதியாக இருங்கள்

 

வெற்றி பெறுவது

சாதாரண விஷயம் இல்லை

இடம் நேரம்

காலம் சூழ்நிலை

ஆகியவற்றைப் பொறுத்து

எந்த செயலை

எப்படி செய்ய

வேண்டுமோ

அப்படி செய்தால்

மட்டுமே வெற்றி

பெற முடியும்

 

வெற்றி பெறுவது

சாதாரண விஷயம் இல்லை

எவ்வளவு தான்

அறிவாளியாக இருந்தாலும்

எவ்வளவு தான்

உழைப்பைக்

கொடுத்தாலும்

வாழ்க்கையில்

ஏற்படக்கூடிய

அவமானங்கள்

ஏளனங்கள்

அசிங்கங்கள்

இழப்புகள்

கஷ்டங்கள்

சோதனைகள்

எதிர்ப்புகள்

ஆகிய எல்லாவற்றையும்

கடந்து வந்தால் தான்

வெற்றி பெற முடியும்

 

வெற்றி பெறுவது

சாதாரண விஷயம் இல்லை

மற்றவர்களால்

செய்ய முடியாததை

நாம் செய்தால் மட்டுமே

நம்மால் வெற்றி

பெற முடியும்

மற்றவர்கள்

செய்தைதையே

நாம் மீண்டும்

செய்தால்

நம்மால் தோல்வி

தான் அடைய

முடியும்

 

வெற்றி பெற்றதால்

ஒருவர் திறமைசாலி

என்றோ

தோல்வியுற்றதால்

ஒருவர் திறமைசாலி

இல்லை

என்றோ சொல்லி

விட முடியாது

 

இருவருமே வெற்றி

பெறுவதற்காக கடினமாக

உழைத்தவர்கள் தான்

இருவருமே

திறமைசாலிகள் தான்

இருவருமே

அறிவாளிகள் தான்

வெற்றி பெற்றவருக்கு

உழைப்புக்கேற்ற

ஊதியம்

பரிசாகக்

கிடைத்திருக்கிறது

தோல்வி

அடைந்தவருக்கு

உழைப்புக்கேற்ற ஊதியம்

கிடைக்கவில்லை

என்று தான்

சொல்ல வேண்டும்

 

வெற்றியும் தோல்வியும்

நிரந்தரம் அல்ல

இன்று வெற்றி பெற்றவர்

நாளை தோல்வி அடைவார்

இன்று தோல்வி

அடைந்தவர்

நாளை வெற்றி பெறுவார்

 

வெற்றி பெற்றவர்

தன்னுடைய வெற்றியைத்

தக்க வைத்துக்

கொள்வதற்கு

தன்னுடைய திறமையை

மேலும் வளர்த்துக்

கொள்ள வேண்டும்

 

தோல்வியுற்றவர்

தன்னுடைய

தோல்விக்கான

காரணத்தை

அறிந்து அதை நீக்கி

வெற்றி பெறுவதற்கான

பயிற்சிகளைச்

செய்ய வேண்டும்

 

வெற்றி பெறுவது

கடினம் தான்

அதை விட கடினம்

பெற்ற வெற்றியைத்

தக்க வைத்துக் கொள்வது

 

சமுதாயத்தில் பலர்

போராடி வெற்றி

பெறுகிறார்கள்

அவர்கள் மக்களால்

புகழப் படுகிறார்கள்

ஆனால் வெற்றி

பெற்றவர்களால்

தாங்கள் பெற்ற

வெற்றியை

தக்க வைத்துக்

கொள்ள முடிவதில்லை

சமுதாயத்தில் காணாமல்

போய் விடுகிறார்கள்

 

வெற்றி பெறுவது

மட்டும் முக்கியமில்லை

பெற்ற வெற்றியைத்

தக்க வைத்துக்

கொள்வதும் முக்கியம்

 

சண்டையிட்ட

இருவரில் வெற்றி

பெற்றவரால் மட்டுமே

தோல்வி

அடைந்தவர் ஏன்

தோல்வி அடைந்தார்

என்று சொல்ல முடியும்

 

தோல்வி அடைந்தவர்

எதைப் பயன்படுத்தாத

காரணத்தால்

தோல்வி அடைந்தார்

என்று சொல்ல முடியும்

 

எதைப் பயன்படுத்தி

இருந்தால் வெற்றி

பெற்று இருக்க முடியும்

என்பதைச்

சொல்ல முடியும்

 

தோல்வி அடைந்தவரிடம்

என்ன குறை இருந்தது

என்பதைச்

சொல்ல முடியும்

 

வேடிக்கை பார்ப்பவர்களால்

சொல்ல முடியாது

வேடிக்கை பார்ப்பவர்கள்

சொன்னால்

அது விமர்சனமாக

இருக்குமேயொழிய

உண்மையானதாக இருக்காது

 

அஸ்வத்தாமா

அர்ஜுனனிடம்

சண்டையிட்டவன் நீ தான்

 

அர்ஜுனன் ஏன் தோற்றான்

நீ எப்படி வெற்றி

பெற்றாய் என்பதை

நீ தான் சொல்ல வேண்டும்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர் &

   பேச்சாளர்

 

-----18-02-2023

-----சனிக் கிழமை

//////////////////////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-933 மரணமற்ற அஸ்வத்தாமன்-65 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-933

மரணமற்ற

அஸ்வத்தாமன்-65

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரியோதனன் :

சண்டை என்றீர்கள்

இது சண்டை கிடையாது

போட்டி தானே

 

துரோணர் :

ஒருவொருக்கொருவர்

நேருக்கு நேராக

நின்று கொண்டு

சண்டையிட்டால் மட்டும்

சண்டை இல்லை

தனித்தனியாக

நின்று கொண்டு

ஒவ்வொருவரும்

தங்களுடைய திறமையை

நிரூபித்தாலும்

சண்டை தான்

 

துரியோதனன் :

இதை நீங்கள் முன்பே

சொல்லவில்லை

 

துரோணர் :

அடுத்து என்ன

நடக்கும் என்பது

இந்த உலகத்தில் உள்ள

யாருக்கும் தெரியாது

அடுத்து என்ன நடந்தாலும்

அதை எதிர்கொள்வது

தான் ஒரு

வீரனுக்கு அழகு

 

அடுத்து என்ன

நடந்தாலும் அதை

எதிர்கொள்வதற்கு

அர்ஜுனன் தயாராக

இருந்தான்

நீ தயாராக இல்லை

 

துரியோதனன் :

பரவாயில்லை

நான் இல்லை

என்றால் என்ன

என்னுடைய நண்பன்

அஸ்வத்தாமன் இருக்கிறான்

அவன் பார்த்துக்

கொள்வான் அர்ஜுனனை

 

துரோணர் :

யார் யாரை பார்க்கப்

போகிறார்கள் என்பது

சண்டை முடிந்த

பிறகு தான் தெரியும்

 

துரியோதனன் :

இந்த உலகம் தான்

பார்க்கப் போகிறதே

 

துரோணர் :

அர்ஜுனா வா உன்

திறமையை நிரூபி

 

(அர்ஜுனன் வருகிறான்

குதிரையை அடக்க

முயல்கிறான்

அதன் மேல் ஏறி

அமர முயற்சி

செய்கிறான்

அமர முயற்சி

செய்தவனை குதிரை

கீழே தள்ளி விடுகிறது

கீழே விழுந்து

விடுகிறான்

குதிரை அவனை

எட்டி உதைக்கிறது

குதிரையை அவனால்

அடக்க முடியவில்லை

 

இக்காட்சியைக்

கண்டவர்களில்

பாண்டவர்கள் தவிர்த்து

அனைவரும்

சிரிக்கின்றனர்

அவமானத்தால்

தலை குனிந்தபடி

அர்ஜுனன் செல்கிறான்

 

நடந்த நிகழ்வைக்

கண்டு துரோணர்

அதிர்ச்சியுற்றார்

அதிர்ச்சியை அவர்

வெளிக்காட்டக் கூடாது

என்று

எவ்வளவு முயற்சி

செய்தும்

அவரால் தன்னுடைய

உணர்ச்சியை

வெளிக்காட்டாமல்

இருக்க முடியவில்லை

 

அதனை சமாளித்துக்

கொண்டு,

அஸ்வத்தாமனை

அழைக்கிறார்

 

அஸ்வத்தாமன் வருகிறான்

 

குதிரையை மெதுவாக

தடவி விடுகிறான்

கண்ணோடு

கண் பார்க்கிறான்

அதன் காதில் பேசுகிறான்

அதன் உடல் முழுவதும்

தடவிக் கொண்டே

இருக்கிறான்

குதிரை புரிந்து

கொண்டது போல்

தலையை ஆட்டுகிறது

அஸ்வத்தாமன்

குதிரையின் மேல்

ஏறுகிறான்

அதன் மூச்சு

அனைவருக்கும் கேட்கும்

வகையில் அது

மூச்சு விடுகிறது

அஸ்வத்தாமன்

அதன் மேல்

அமர்கிறான்

துள்ளிக்

குதிக்கிறது குதிரை

அஸ்வத்தாமன் கீழே

விழாமல்

அமர்ந்து இருக்கிறான்

சிறிது நேரம்

குதித்தப் பிறது

அமைதியாகி விடுகிறது

குதிரை

 

குதிரையின் மேல்

அமர்ந்து கொண்டு

அந்த மைதானத்தை

மூன்று முறை

சுற்றி வருகிறான்

அஸ்வத்தாமன்

 

அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமன்

என்ற பெயரை

அனைவரும்

உச்சரிக்கின்றனர்

 

கரகோஷமும் ஆரவாரமும்

விண்ணைப் பிளக்கிறது

கரவொலி எழுப்புகின்றனர்

 

அர்ஜுனனைத் தோற்கடித்த

அஸ்வத்தாமன் வாழ்க

என்று பாண்டவர்களைத்

தவிர்த்து அனைவரும்

கோஷம் எழுப்பினர்

 

அர்ஜுனன் உட்பட

பாண்டவர்கள் ஐவரும்

தலைகுனிந்தபடி

இருந்தனர்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர் &

   பேச்சாளர்

 

-----18-02-2023

-----சனிக் கிழமை

//////////////////////////////////////////////////////////