ஜபம்-பதிவு-931
மரணமற்ற
அஸ்வத்தாமன்-63
(கடவுளுக்கே
சாபம்
கொடுத்தவனின்
கதை)
அவர்களை
பொருட்படுத்தினால்
தங்களுடைய
நிம்மதி
போய்விடும்
முன்னேற
முடியாது
என்று
காரணத்தினால்
முன்னேறத்
துடிப்பவர்கள்
திறமையற்றவர்களின்
பேச்சுக்களைப்
புறந்தள்ளி
விட்டு
தங்கள்
வேலைகளைச்
செய்து
கொண்டிருக்கின்ற
காரணத்தினால்
தான்
அந்தத்
திறமைசாலிகள்
தங்களுடைய
திறமையை
வெளிப்படுத்தும்
துறையில்
நுழைந்து
தங்களுக்கென்று
ஒரு
இடத்தை
பிடிக்க
முடிந்தது
அந்த
இடத்தையும்
தக்க
வைத்துக்
கொள்ள
முடிந்தது
திறமையில்லாமல்
சுற்றிக்
கொண்டிருக்கும்
இந்தத்
திறமையற்றவர்களின்
பேச்சுக்களைக்
கேட்டுக்
கொண்டு
திறமைசாலிகள்
வருத்தப்பட்டுக்
கொண்டு
இருந்திருப்பார்களேயானால்
திறமைசாலிகளால்
எந்த
ஒருவேலையையும்
செய்திருக்க
முடியாது.
திறமைசாலிகள்
எப்போதும்
இந்த
உலகத்தில் தாமரை
இலைத்
தண்ணீர்
போலத்
தான் இருப்பார்கள்
இந்த
உலகத்தில்
வாழ்ந்து
கொண்டு
தான்
இருப்பார்கள்
தனியாக
இருப்பார்கள்
தனிப்பட்ட
முறையில்
நடந்து
கொள்வார்கள்
தங்களுடைய
செயலை
தொடர்ந்து
செய்து
கொண்டிருப்பார்கள்
திறமையற்றவர்கள்
திறமைசாலிகளை
இழிவுபடுத்துவதற்குக்
காரணம்
திறமைசாலிகளைப்
போல்
தங்கள்
திறமையை
வளர்த்துக்
கொள்ள
முடியாததே
ஆகும்
திறமைசாலிகளை
நாம்
புரிந்து
கொள்ள
வேண்டும்
என்றால்
நாமும்
திறமைசாலிகளாக
ஆக
வேண்டும்
நாம்
திறமைசாலிகளாக
ஆகாமல்
திறமைசாலிகளைப்
புரிந்து
கொள்ள
முடியாது
துரியோதனன் :
யாரைத்
திறமைசாலி
என்கிறீர்கள்
துரோணர் :
இதில்
என்ன சந்தேகம்
அர்ஜுனனைத்
தான்
துரியோதனன் :
எதை
வைத்து அர்ஜுனனை
திறமைசாலி
என்கிறீர்கள்
துரோணர் :
வைக்கப்பட்ட
போட்டிகள்
அனைத்திலும்
அர்ஜுனன்
வெற்றி
பெற்று
இருக்கிறானே
அதை
வைத்துத் தான்
துரியோதனன் :
அவன்
திறமைசாலிகளுடன்
சண்டையிடவில்லை
துரோணர் :
நீ
சண்டையிடுகிறாயா
துரியோதனன் :
அர்ஜுனனை
கதாயுதம்
எடுத்துக்
கொண்டு
வரச்
சொல்லுங்கள்
நான்
சண்டையிடுகிறேன்
துரோணர் :
ஏன்
நீ வில் அம்பு
வைத்துக்
கொண்டு
சண்டையிட
மாட்டாயா
துரியோதனன் :
உடல்
முழுவதும்
கவசங்களை
மாட்டிக்
கொண்டு
எங்கேயோ
நின்று
கொண்டு
அம்பு
விடுவது
எனக்கு
பிடிக்காது
கவசம்
எதுவும்
இல்லாமல்
களத்தில்
இறங்கி
நேருக்கு
நேர் நின்று
கதாயுதத்தால்
ஒருவரை
ஒருவர்
தாக்கிக் கொண்டு
சண்டையிடுவது
தான்
எனக்கு பிடிக்கும்
துரோணர் :
அப்படி
என்றால்
அர்ஜுனனுடன்
சண்டையிட
மாட்டேன்
என்கிறாய்
துரியோதனன் :
நான்
அப்படி
சொல்லவில்லை
அர்ஜுனன்
கதாயுதம்
எடுத்துக்
கொண்டு
வந்தால்
சண்டையிடுகிறேன்
என்கிறேன்
துரோணர் :
அர்ஜுனனுடன்
சண்டையிடுவதைத்
தவிர்க்க
இப்படி
சொல்கிறாயா
துரியோதனன் :
ஏன்
நான் தான்
வில்
அம்பு வைத்து
சண்டையிட
வேண்டுமா
அர்ஜுனன்
கதாயுதம்
வைத்துக்
கொண்டு
சண்டையிட
மாட்டானா
துரோணர் :
ஏன்
அவ்வாறு
சொல்கிறாய்
------ஜபம்
இன்னும் வரும்
------K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்
&
பேச்சாளர்
-----18-02-2023
-----சனிக்
கிழமை
//////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment