February 19, 2023

ஜபம்-பதிவு-930 மரணமற்ற அஸ்வத்தாமன்-62 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-930

மரணமற்ற

அஸ்வத்தாமன்-62

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

(குருகுலத்தில்

பாண்டவர்களும்,

கெளரவர்களும்

அமர்ந்து கொண்டு

இருக்க

துரோணர் அவர்களுக்கு

பாடங்களைக்

கற்றுக் கொடுத்துக்

கொண்டு இருக்கிறார்)

 

துரோணர் :

இந்த உலகத்தில்

உள்ளவர்களில்

பெரும்பாலானவர்கள்

திறமைசாலிகளைப்

பார்க்கும் போது

அவர்களைப் போல

நாமும் ஆக

வேண்டும்

என்ற எண்ணம்

கொண்டு

அதற்கான செயல்களில்

ஈடுபடுவதில்லை

 

மாறாக அவர்களை

இழிவு படுத்தும்

வேலைகளைத்

தான் செய்து

கொண்டிருக்கின்றனர்

அவமானப்படுத்தும்

செயல்களைத்

தான் செய்து

கொண்டிருக்கின்றனர்

குறைகளை சொல்லிக்

கொண்டு தான் திரிந்து

கொண்டிருக்கின்றனர்

 

தன்னை திறமை

இல்லாதவன் என்பதை

இந்த உலகம் தெரிந்து

கொள்ளக் கூடாது

என்பதற்காகவும்

தனக்கு அறிவில்லை

என்பதை

இந்த உலகம் புரிந்து

கொள்ளக் கூடாது

என்பதற்காகவும்

தனக்கு ஒன்றும்

தெரியாது என்பதை

இந்த உலகம் அறிந்து

கொள்ளக் கூடாது

என்பதற்காகவும் தான்

திறமையில்லாமல்

இருப்பவர்கள்

திறமைசாலிகளை

அவமானப்படுத்துகிறார்கள்

 

திறமைசாலிகளையே

இழிவுபடுத்துகிறார்கள்

என்றால் இவர்கள்

திறமைசாலிகளாகத்

தான் இருக்க வேண்டும்

என்று இந்த உலகம்

நம்ப வேண்டும்

என்பதற்காக

திறமையில்லாமல்

இருப்பவர்கள்

திறமைசாலிகளை

இழிவு படுத்துகின்றனர்.

 

பிரச்சினையைக்

கண்டு எதிர்த்து

நின்று போராடத்

தெரியாதவர்களும்

வாழ்க்கையை

வாழ்க்கையாக வாழத்

தெரியாதவர்களும்

தன் குடும்பம்

தன்னுடைய மனைவி

தன்னுடைய குழந்தைகள்

என்று சுயநலத்துடன்

அலைந்து

கொண்டிருப்பவர்களும் தான்

திறமைசாலிகளை

இழிவாக பேசிக்

கொண்டு திரிந்து

கொண்டிருக்கிறார்கள்

 

ஒருவர் தன்னுடைய

திறமை என்ன

என்பதைக் கண்டறிந்து

அந்தத் திறமையை

வெளிப்படுத்தும் துறை

என்ன என்பதைத்

தேர்ந்தெடுத்து

அந்தத் துறைக்குள்

நுழைந்து

தனக்கென்று ஒரு

இடத்தைப் பிடித்து

அந்த இடத்தைத்

தக்க வைத்துக்

கொள்வதற்காக

பல்வேறு

எதிர்ப்புகளைக் கடந்து

விரோதிகளை எதிர்த்து

துரோகிகளை வேரறுத்து

கடினமாக உழைத்து

போராடி தன்னுடைய

திறமையை வெளிப்படுத்தி

தான் தேர்ந்தெடுத்த

துறையில் முன்னேறி

உயர்ந்த நிலையை

அடைவர்

 

இத்தகைய திறமை

படைத்தவர்களைத் தான்

திறமையில்லாதவர்கள்

இழிவு படுத்துவார்கள்

 

திறமையில்லாதவர்கள்

யார் என்று பார்த்தால்

தனக்கென்று எந்த

ஒரு திறமையும்

இல்லாத காரணத்தினால்

தனக்கென்று தனிப்பட்ட

ஒரு துறையைத்

தேர்ந்தெடுத்து

அந்தத் துறையில்

தன்னுடைய திறமையை

வெளிப்படுத்த முடியாமல்

அனுதினமும்

வாழ்க்கையை

நடத்துவதற்காக

காலை

வேலைக்கு சென்று

மாலை

வேலை முடித்து

வேலைக்கான கூலியைப்

பெற்றுக் கொண்டு

தொடர்ந்து வேலை

செய்து கொண்டு

தங்களுடைய வாழ்க்கையை

ஓட்டிக் கொண்டு

இருப்பவர்கள் தான்

திறமைசாலிகளை

இழிவு படுத்தும்

வேலைகளைச் செய்து

கொண்டிருகின்றனர்

 

திறமைசாலிகளும்

இவர்களுடைய

அவமானங்களை

பொருட்படுத்தாமல்

தங்களுடைய

வேலைகளைச் செய்து

கொண்டிருக்கின்றனர்

வேலையற்றதுகள்

செய்யும்

தேவையற்ற வேலை

என்பதால்

திறமைசாலிகள்

அவர்களை

பொருட்படுத்துவதில்லை

 

------ஜபம் இன்னும் வரும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர் &

   பேச்சாளர்

 

-----18-02-2023

-----சனிக் கிழமை

//////////////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment