ஜபம்-பதிவு-932
மரணமற்ற
அஸ்வத்தாமன்-64
(கடவுளுக்கே
சாபம்
கொடுத்தவனின்
கதை)
துரியோதனன் :
ஏனென்றால்
எனக்கு
கதாயுதம்
பிடிக்கும்
அதில்
எனக்கு
திறமை
இருக்கிறது
அதனால்
சொல்கிறேன்
துரோணர் :
அதைத்
தான்
நானும்
சொல்கிறேன்
அர்ஜுனனுக்கு
வில்
அம்பு பிடிக்கும்
அதில்
அவன்
திறமைசாலி
என்கிறேன்
துரியோதனன் :
நான்
இல்லை
என்கிறேன்
துரோணர் :
அர்ஜுனன்
திறமைசாலி
என்பதை
நிரூபிக்க
அவன்
யாருடன்
சண்டையிட
வேண்டும்
என்கிறாய்
துரியோதனன் :
அஸ்வத்தாமன்
துரோணர் :
ஏன்
அஸ்வத்தாமனைச்
சொல்கிறாய்
உன்னுடைய
நண்பன்
என்பதாலா
துரியோதனன் :
திறமைசாலி
என்பதால்
துரோணர் :
திறமைசாலி
என்பதால்
உன்னுடைய
நண்பனாக
இருக்கிறானா
அல்லது
உன்னுடைய
நண்பனாக
இருப்பதால்
திறமைசாலி
என்கிறாயா
துரியோதனன் :
திறமைசாலிகள்
தான்
நண்பர்களாக
இருக்க
வேண்டும்
என்றால்
இந்த
உலகத்தில்
யாரும்
யாருடனும்
நண்பர்களாக
இருக்க
முடியாது
துரோணர் :
அஸ்வத்தாமனை
அர்ஜுனனுடன்
சண்டையிட
வைக்கலாம்
என்கிறாய்
அப்படித்தானே
துரியோதனன் :
ஆமாம்
துரோணர் :
துரியோதனனே
கூறி
விட்ட பிறகு
மறுப்பதற்கு
எதுவுமில்லை
(துரோணர்
அர்ஜுனனைப்
பார்த்து
கேட்கிறார்)
அர்ஜுனா
நீ
அஸ்வத்தாமனுடன்
சண்‘டையிடுகிறாயா
அர்ஜுனன் :
தங்கள்
சித்தம்
குருதேவா
(துரோணர்
அஸ்வத்தாமனைப்
பார்த்து
கேட்கிறார்)
துரோணர் :
அஸ்வத்தாமா
நீ
அஸ்வத்தாமன் :
காத்திருக்கிறேன்
துரோணர் :
அர்ஜுனனும்
அஸ்வத்தாமனும்
சண்டையிடப்
போகிறார்கள்
(ஆரவாரம்
கேட்கிறது)
என்ன
சண்டை
என்பதை
நான்
சொல்கிறேன்
துரியோதனன் :
வில்
சண்டை தானே
துரோணர் :
இல்லை
துரியோதனன் :
வில்
சண்டை இல்லையா
துரோணர் :
குதிரை
சண்டை
துரியோதனன் :
வித்தியாசமாக
இருக்கிறது
துரோணர் :
வித்தியாசமானது
தான்
துரோணர் :
இந்த
குதிரை
அடங்காத
குதிரை
இது
வரை
இந்தக்
குதிரையை
யாரும்
அடக்கியதில்லை
அடக்கச்
சென்றவர்களை
இந்தக்
குதிரை எட்டி
உதைத்து
இருக்கிறது
தன்
மீது அமர
முயற்சி
செய்தவர்களை
கீழே
தள்ளி
மண்ணைக்
கவ்வ
வைத்திருக்கிறது
காயங்களை
உண்டாக்கி
அனுப்பி
வைத்திருக்கிறது
அனைவரையும்
தோல்வி
அடையச்
செய்து இருக்கிறது
இந்தக்
குதிரையை அடக்கி
இதன்
மேல் ஏறி அமர்ந்து
இந்த
மைதானத்தை
ஒரு
சுற்றி வர வேண்டும்
இது
தான் சண்டை
------ஜபம்
இன்னும் வரும்
------K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்
&
பேச்சாளர்
-----18-02-2023
-----சனிக்
கிழமை
//////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment