ஜபம்-பதிவு-554
(அறிய
வேண்டியவை-62)
(அர்ஜுனன்
பாணங்களைக்
கூர்
தீட்டிக்
கொண்டிருக்கிறான்
அருகில்
கிருஷ்ணன்
அமர்ந்து
கொண்டு
இருக்கிறார்)
பீமன்
:
“என்ன
செய்து
கொண்டிருக்கிறாய்
அர்ஜுனா!
பாணங்கள்
கூர்மையாகத்
தானே
இருக்கிறது
பிறகு
எதற்கு
அந்த
பாணங்களை
மீண்டும்
மீண்டும்
கூர் தீட்டிக்
கொண்டிருக்கிறாய்?”
அர்ஜுனன்
:
“நாளை
நான்
கர்ணனோடு
நேருக்கு
நேராக
மோதப் போகிறேன்
கர்ணனுக்கு
சாதாரண
பாணங்கள்
போதாது
அதனால்
தான்
பாணங்களை
மீண்டும்
மீண்டும்
கூர் தீட்டிக்
கொண்டிருக்கிறேன்”
பீமன்
:
“பீஷ்மர்
துரோணாச்சாரியார்
போன்றவர்களுடன்
போரிடும்
போது கூட
நீ
பாணங்களைக் கூர்
தீட்டவில்லையே
அர்ஜுனா”
அர்ஜுனன்
:
“பீஷ்மர்
துரோணர்
போன்றவர்கள்
சேனாதிபதியாக
இருந்த
கெளரவர்கள்
படையில்
கர்ணன்
சேனாதிபதியாகி
இருக்கிறான்”
“உலகத்திலேயே
சிறந்த
மாவீரர்களான
கருதப்படும்
பீஷ்மர்
துரோணர்
போன்றோர்
சேனாதிபதியாகி
வழிநடத்திய
கௌரவர்கள்
படைக்கு
கர்ணனை
துரியோதனன்
சேனாதிபதியாக்கி
இருக்கிறான்
என்றால்
கர்ணணின்
வீரத்தை
கர்ணனுடைய
திறமையை
நாம்
குறைவாக
மதிப்பீடு
செய்யக்
கூடாது
அண்ணா!”
பீமன்
:
“பீஷ்மர்
துரோணர்
போன்றவர்களுடன்
போரிடும்
போது
கூட
நீ இப்படி
பயப்படவில்லையே
அர்ஜுனா!”
“தாழ்ந்த
குலத்தில்
பிறந்த
கர்ணனைப்
பார்த்தா
நீ இப்படி
பயப்படுகிறாய்”
கிருஷ்ணன்
:
“பிறப்பை
வைத்து
ஒருவரை
இழிவாகப்
பேசக்கூடாது
பீமா!”
“தாழ்ந்த
குலத்தில்
பிறந்ததால்
திறமை
இல்லாமல்
இருப்பார்கள்
என்று
நினைப்பதும் ;
உயர்ந்த
குலத்தில்
பிறந்ததால்
திறமை
கொண்டு
இருப்பார்கள்
என்று
நினைப்பதும் ;
தவறான
செயலாகும்”
“எக்குலத்தில்
பிறந்தவருக்கும்
திறமை
என்பது
இருக்கத்
தான் செய்யும்”
“திறமை
என்பது
ஒருவருடைய
பிறந்த
குலத்தை
வைத்து
வருவதல்ல”
“பிறந்த
குலத்தைக்
கடந்து
தான் திறமை”
“ஒருவருடைய
பிறந்த
குலத்தைப்
பார்த்தால்
திறமை
தெரியாது ;
திறமையைப்
பார்த்தால்
ஒருவருடைய
பிறந்த
குலம்
தெரியாது ; ”
“ஒருவருடைய
திறமையைப்
பார்க்கக்
கற்றுக் கொள்
பிறந்த
குலத்தைப்
பார்க்கக்
கற்றுக்
கொள்ளாதே
பீமா!
“எதிரியினுடைய
பிறந்த
குலத்தையே
பார்த்துக்
கொண்டிருப்பவனால்
எதிரியினுடைய
திறமையை
சரியாக
மதிப்பீடு
செய்ய
முடியாமல்
போய்
விடுகிறது
இதனால்
எதிரியிடம்
தோல்வியடையும்
நிலையும்
ஏற்பட்டு
விடுகிறது
நீயும்
அந்த தவறைச்
செய்யாதே
பீமா!”
“எதிரியினுடைய
பிறந்த
குலத்தை
வைத்து
ஒருவருடைய
திறமையை
மதிப்பீடு
செய்வது
உன்னைப்
போல ஒரு
வீரனுக்கு
அழகல்ல”
“உண்மையான
வீரன்
என்பவன்
எதிரியினுடைய
திறமையை
மட்டும்
தான்
பார்ப்பான்
பிறந்த
குலத்தை
பார்க்க
மாட்டான்”
“கர்ணனுடைய
பிறந்த
குலத்தை
வைத்து
கர்ணனை
மதிப்பீடு
செய்வதை
நிறுத்தி விடு”
“கர்ணனுடைய
பிறந்த
குலத்தை
வைத்து
அவனை
இழிவு படுத்தாதே”
“நீ
இழிவு படுத்துவது
கர்ணனுடைய
பிறந்த
குலத்தை
அல்ல
கர்ணனுடைய
வீரத்தை
கர்ணனுடைய
திறமையை”
“நீ
கர்ணனுடைய
பிறந்த
குலத்தை
இழிவு
படுத்தும் போது
நீ
கர்ணனுடைய
வீரத்தை
மட்டுமல்ல
கர்ணனுடைய
திறமையை
மட்டுமல்ல
இந்த
உலகத்தில் உள்ள
அனைத்து
வீரர்களின்
வீரத்தையும்,
திறமையையும்
சேர்ந்தே
இழிவு
படுத்துகிறாய்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
30-06-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment