ஜபம்-பதிவு-562
(அறிய
வேண்டியவை-70)
கிருஷ்ணன்
:
“அர்ஜுனா!
என்ன ஆனது
அர்ஜுனா!
நீ விடும்
பாணங்களை
விட
கர்ணன்
தன்னுடைய
பாணங்களை
மிக
விரைவாக
விடுகிறான்
ஏன்
உன்னால்
கர்ணனைக்
காட்டிலும்
விரைவாக
உன்னால்
பாணங்களை
விட
முடியவில்லை”
அர்ஜுனன்
:
“நான்
எவ்வளவோ
முயற்சி
செய்தும்
கர்ணனை
விட வேகமாக
என்னால்
பாணங்களை
விட
முடியவில்லை”
(போரில்
ஒருவர்
மாறி
ஒருவர் என்று
அவர்களுடைய
கை
ஓங்கி
இருக்கும்
ஆனால்
கர்ணனுக்கும்
அர்ஜுனனுக்கும்
இடையே
நடைபெற்ற
போரில்
கர்ணனுடைய
கையே
நாள்
முழுவதும்
ஆதிக்கத்தில்
இருந்தது
கர்ணன்
அர்ஜுனனைப்
பார்த்து
பேசத்
தொடங்குகிறான்)
கர்ணன்
:
“உலகத்திலேயே
சிறந்த
வில்லாளி
என்று
தலைக்கனத்தில்
அலைந்து
கொண்டிருக்கும்
அர்ஜுனா
அந்த
பெயருக்கு
தகுதியானவன்
நீ
கிடையாது
அந்த
பெயர் உனக்கு
கிடைக்க
வேண்டும்
என்பதற்காக
எவ்வளவு
சதித்திட்டங்கள்
தீட்டப்பட்டது
என்று
உனக்குத்
தெரியுமா?”
“உன்னை
விட பல
வகையிலும்
தலைசிறந்த
வில்லாளியாகவும்
;
வில்
வித்தையில்
கை
தேர்ந்தவனாகவும் ;
வில்
வித்தையில்
பல
நுணுக்கங்களை
அறிந்தவனாகவும்
;
துரோணரையே
வில்
வித்தையை
காட்டி
பயமுறுத்தியவனாகவும்
;
அண்ட
சராசரங்களையே
தன்னுடைய
வில்
வித்தையின்
மூலம்
கதிகலங்கச்
செய்யக்
கூடியவனாகவும்
;
வீரத்தில்
சிறந்தவன்
என்று
போற்றப்
படக்கூடியவனாகவும்
;
இருந்த
ஏகலைவனின்
கட்டை
விரலை
பெற்றுத்
தான்
உன்னுடைய
குரு
துரோணர்
உனக்கு
உலகத்திலேயே
சிறந்த
வில்லாளி
என்ற
பெயரை
பெற்றுத்
தந்திருக்கிறார் “
“நீ
கற்ற வித்தையை
காட்டி
மக்களிடம்
ஏமாற்று
வித்தை
புரிந்து
கொண்டிருந்த
போது
உன்னுடன்
சண்டையிட்டு
என்னுடைய
வீரத்தை
நான்
காட்ட முயற்சி
செய்த
போது
துரோணர்
மட்டும்
அன்று
என்னை
தடுத்து
உன்னை
காப்பாற்றி
இருக்கா
விட்டால்
என்னை
தடுத்திருக்கா
விட்டால்
அன்றே
தெரிந்திருக்கும்
உலகத்திலேயே
சிறந்த
வில்லாளி
நீ
இல்லை என்பது
என்னை
தடுத்துத்
தான்
உனக்கு
உலகத்திலேயே
சிறந்த
வில்லாளி
என்ற
பெயரை
பெற்றுத்
தந்திருக்கிறார் “
“ஏகலைவனின்
கட்டை
விரலை
பெற்றதின்
மூலமும்
என்னை
உன்னுடன்
சண்டை
செய்ய
விடாமல்
தடுத்ததின்
மூலமும்
மட்டுமல்லாமல்
இன்னும்
எவ்வளவோ
சதிகள்
செய்யப்பட்டுத்
தான்
உலகத்திலேயே
சிறந்த
வில்லாளி
என்ற
பெயரை
பெற்றுத்
தந்திருக்கிறார்கள்
உன்மேல்
விருப்பம்
கொண்டவர்கள்
“
“உலகத்திலேயே
சிறந்த
வில்லாளி
யார்
என்பதை
- இன்று
நடந்த
போரில்
நீ
தெரிந்து
கொண்டிருப்பாய்
;
உண்மையிலேயே
நீ
உண்மையான
வீரனாக
இருந்தால்
உலகத்திலேயே
சிறந்த
வில்லாளி
யார்
என்பதை
நீ
ஏற்றுக்
கொள்வாய்”
“சூரியன்
அஸ்தமிக்கப்
போகிறது
இன்று
உன்னுடைய
உயிர்
தப்பியது”
“உனக்கு
உயிர் பிச்சை
தருகிறேன்
பிழைத்துக்
கொண்டு
செல்”
“நாளை
உன் உயிர்
உன்
உடலில்
இருக்காது
செல்”
(பாண்டவர்களின்
கூடாரம்
அர்ஜுனன்
சோகத்தில்
உட்கார்ந்து
கொண்டிருந்தான்
கிருஷ்ணன்
அவன்
அருகில்
வந்தார் )
கிருஷ்ணன்
:
“அர்ஜுனா!
என்ன
ஆனது
ஏன் சோகத்தில்
இருக்கிறாய்?”
அர்ஜுனன்
:
“உனக்கு
தெரியாதது
போல்
கேட்கிறாயே
பரந்தாமா!
என்னை
வார்த்தைகளால்
எவ்வளவு
இழிவு
படுத்த
முடியுமோ
அவ்வளவு
இழிவு படுத்தி
விட்டான்
கர்ணன்
அவன்
சொன்ன இழிவான
வார்த்தைகளைக்
கேட்டு
விட்டு
என்னால்
நிம்மதியாக
இருக்க
முடியவில்லை”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
30-06-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment