June 30, 2020

அறிய வேண்டியவை-பதிவு-67


               ஜபம்-பதிவு-559
        (அறிய வேண்டியவை-67)

“மறைவான விஷயங்கள்
வெளிப்படும் போது
அது விஸ்வரூபமாக
இருக்கும் என்று
பரமாத்மா சொன்னது
உண்மை தான் என்பது
நீங்கள் கர்ணனைப்
பற்றி சொல்லும் போது
உண்மையாகிறது தாயே!”

(கிருஷ்ணன் மறைவான
விஷயம் என்று சொன்னது
கர்ணன் குந்தி தேவியின்
மகன் என்ற விஷயத்தை
ஆனால் பீமன்
மறைவான விஷயம்
என்று நினைத்துக்
கொண்டு சொன்னது
கர்ணனைப் பற்றி
தன்னுடைய தாய்
சொன்ன விஷயங்களை
அதனால் தான்
குந்தியைப் பார்த்து
கிருஷ்ணன் சிரித்தார்

கடவுளின்
வார்த்தையில் உள்ள
அர்த்தங்களை
இந்த உலகத்தில் உள்ள
பெரும்பாலானவர்களால்
புரிந்து கொள்ள
முடியாது என்பதற்கு
பீமன் சொல்லிய
வார்த்தைகளே
சாட்சி என்பதை
குந்தி தேவி
அறிந்து கொண்டாள்
கிருஷ்ணனின்
சிரிப்பில் உள்ள
அர்த்தங்களை
புரிந்து கொண்டாள்
கிருஷ்ணனின் சிரிப்பு
இதைத் தான்
வெளிப்படுத்துகிறது
என்பதைத் தெரிந்து
கொண்டாள் குந்தி )

குந்தி :
(குந்தி தன்னுடைய
பேச்சைத் தொடர்ந்தாள்)

“வீரனாக இருக்கின்ற
நீங்கள் அனைவரும்
தான் இதை
எல்லாம் தெரிந்து
வைத்திருக்க வேண்டும்
ஆனால் - நீங்கள்
யாரும் இதைத் தெரிந்து
வைத்திருக்கவில்லை”

“அதனால் வீர
மகன்களைப்
பெற்றெடுத்த
காரணத்தால்
வீரத்தாயாக
நான் இவைகள்
எல்லாவற்றையும்
தெரிந்து
வைத்திருக்கிறேன்”

“கர்ணனைப் பற்றி
இந்த உலகத்தில்
உள்ள வீரர்கள்
அனைவரும்
அறிந்து வைத்திருக்கும்
செய்தியைத் தான்
நான் உனக்கு
சொன்னேன்”

“கர்ணன் பிறக்கும்
போதே கவச
குண்டலங்களுடன்
பிறந்தவன் ;
பரசுராமரின் சீடன் ;
மகாதேவரின்
விஜய தனுசைக்
கொண்டவன் ;
பரசுராமர் பீஷ்மர்
துரோணர்
போன்றவர்களுக்கு
இணையான வீரன்
மட்டுமல்ல அவர்களை
மிஞ்சிய வீரன் ;
ஜெராசந்தனை
வென்றவன் ;
நான்கு திக்
விஜயங்களைச்
செய்தவன் ;
தன்னுடைய ஒரு
பாணத்தால் லட்சம்
பாணங்களை
உருவாக்குவதில்
திறமை பெற்றவன் ;
பிரம்மாஸ்திரத்தையே
தன்னுடைய
சாதாரண
பாணங்களால்
வீழ்த்தும் வல்லமை
பெற்றவன் ;
காலனுக்கே
காலன் அவன் ;
தர்மத்திற்கு
காவலன் அவன் ; “

“இது வரை நீ
ஒரு உண்மையான
வீரனுடன் போரிட்டு
இருக்க மாட்டாய் ;
இது வரை நீ
ஒரு உண்மையான
வீரனை சந்தித்து
இருக்க மாட்டாய் ;
கர்ணனுடன் போரிடும்
போது தான் நீ
ஒரு உண்மையான
வீரனை சந்திப்பாய் ;
வீரம் என்றால் என்ன
என்பதை கர்ணனுடன்
போரிடும் போது
தெரிந்து கொள்வாய் ;
கர்ணன் எவ்வளவு
உயர்ந்த வீரன்
என்பதைப்
புரிந்து கொள்வாய் ; “

“கர்ணனுடன் போரிடும்
போது தான்
பீஷ்மர் துரோணர்
ஆகியோர்
கர்ணனுடைய
வீரத்திற்கு
ஈடாக மாட்டார்கள்
என்பதையும் ;
கர்ணனுடைய
வீரத்திற்கு
சமமானவர்கள் யாரும்
இல்லை என்பதையும் ;
கர்ணனுடைய
வீரத்திற்கு
முன்னால் இந்த
உலகத்தில் யாரும்
இல்லை என்பதையும் ;
தெரிந்து கொள்வாய் “

“குருஷேத்திரப்
போர்க்களத்தில்
கர்ணனுடைய வீரத்தைப்
பார்த்து கலங்கி
நின்று விடாதே ;
கோழையைப் போல்
அஞ்சி விடாதே ;
பயத்தை உன்னுடைய
விழிகளில்
காட்டி விடாதே ;
பயத்தை மட்டும்
உன்னுடைய கண்களில்
கர்ணன் பார்த்து விட்டால்
கர்ணன் உன்னுடன்
போர் புரிய மாட்டான் “

“ஏனென்றால்
கர்ணன் தன்னுடன்
சமமானவர்களுடனும்
தன்னை விட வீரத்தில்
உயர்ந்தவர்களுடனும்
தான் போரிடுவான்
கர்ணன்
கோழைகளுக்கு
உயிர் பிச்சை
அளிப்பானே தவிர
அவர்களுடன்
போரிட மாட்டான்
ஆகவே கர்ணனின்
முன்னால் உன்னுடைய
பயத்தை மட்டும்
காட்டாதே “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment