June 30, 2020

அறிய வேண்டியவை-பதிவு-66


               ஜபம்-பதிவு-558
        (அறிய வேண்டியவை-66)

“ஆனால் கர்ணன்
பிறந்தது முதல்
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
இந்த சமுதாயத்தால்
ஒதுக்கி
வைக்கப்பட்டான்
தனக்கு கல்வி
போதிக்க வேண்டும்
என்று பலபேரிடம்
சென்று கேட்டும்
அவன் தாழ்நத
குலத்தில் பிறந்தவன்
என்பதைக்
காரணம் காட்டி
கர்ணனுக்கு யாரும்
கல்வி
போதிக்கவில்லை
துரோணர் கூட
கர்ணனுக்கு கல்வி
போதிக்க
மறுத்துவிட்டார்”

“உலகமே தன்னை
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
இகழ்ந்தாலும் ;
தாழ்ந்த குலத்தில்
பிறந்தவன் என்று
ஒதுக்கி வைத்தாலும் ;
இந்த உலகம் செய்த
அத்தனை
இழிவுகளையும்
தாங்கிக் கொண்டு
தன்னுடைய
தன்னம்பிக்கையாலும்
திறமையாலும்
மன உறுதியாலும்
சகல கலைகளிகலும்
தேர்ச்சி பெற்று
வீரமான கர்ணனாக
உன் முன்னால் வந்து
சரிசமமாக நிற்கிறான் “

“அர்ஜுனா! உன்
ஒருவனால் மட்டுமல்ல
நீங்கள்
ஐவரும் சேர்ந்து
கர்ணனை எதிர்த்தாலும்
அவனை
வீழ்த்த முடியாது
தன்னந்தனியாக
நின்று கொண்டு
உனக்கு எதிராக
போரிடும் கர்ணனை
நீ தன்னந்தனியாக
நின்று போர் புரிந்து
வெற்றி பெற
முடியாது என்ற
காரணத்தினால் தான்
உன்னுடைய தேரின்
கொடியில் உள்ள
அனுமன் உன்னை
காக்கும் கவசமாக
இருக்கிறார்
பரந்தாமன் கிருஷ்ணன்
உனக்கு சாரதியாக
இருந்து கொண்டு
உன்னைக்
காப்பாற்றுவதற்காக
கவசமாக இருந்து
கொண்டு செயல்பட்டுக்
கொண்டிருக்கிறார்”

“இவர்கள் இருவரும்
உன்னை காப்பாற்றும்
கவசமாக இருக்கின்றனர் “

“ஆனால் தன்னை
காக்கும் கவசமாக
தன்னிடம் இருந்த
கவச குண்டலங்களை
தானம் செய்து விட்டு
எவ்வித கவசங்களும்
இல்லாமல்
சாபங்கள் வாக்குறுதிகள்
சூழ்ச்சிகள் துரோகங்கள்
ஆகியவற்றால்
சூழப்பட்டு
தன்னந்தனியாக
உன்னை
எதிர்ப்பதற்காக
வருகிறான் “

“இதிலிருந்து
கர்ணனுடைய
வீரம் உனக்கு
புரியவில்லையா?”

“கர்ணனுடைய
விஜய தனுசு
கர்ணனுடைய கரத்தில்
இருக்கும் வரை
கர்ணனை எவராலும்
வெல்ல முடியாது
கர்ணனை எவராலும்
கொல்ல முடியாது
என்பதை நீ
கர்ணனுடன் போர்
செய்யும் போது
புரிந்து கொள்வாய்”

“அஸ்திரங்களில்
வல்லமை மிக்க
பிரம்மாஸ்திரத்தினால்
கூட - இந்த
விஜய தனுசை கையில்
பிடித்திருப்பவரை
வீழ்த்த முடியாது”

“கர்ணன் விஜயதனுசை
கையில்
பிடித்திருக்கும் வரை
உன்னால் கர்ணனைக்
கொல்ல முடியாது
விஜய தனுசு
கர்ணன் கையில்
இல்லாதபோது தான்
கர்ணனை உன்னால்
கொல்ல முடியும்
என்பதை நினைவில்
கொள் அர்ஜுனா”

“கர்ணன் கையில்
வைத்திருக்கும்
விஜய தனுசு
நீ  கையில்
வைத்திருக்கும்
காண்டீபத்தை விட
உயர்வானது;
காண்டீபத்தில்
நாண் கயிற்றை
அறுக்க முடியும் ;
ஆனால் கர்ணன்
வைத்திருக்கும்
விஜய தனுசுவின்
நாண் கயிற்றை
அறுக்க முடியாது ;”

“தனக்கு எதிரில்
நிற்கும் எதிரி
எத்தகைய
தன்மைகளைக்
கொண்டவன்
எத்தகைய வீரனாக
இருக்கக் கூடியவன்
என்பதை அறியாமல்
நீ போரிடச் செல்வது
எனக்கு வியப்பாக
இருக்கிறது”

“எதிரியின் வீரத்தைப்
பற்றி முதலில்
புரிந்து கொள்ள
முயற்சி செய்
பிறகு போரிட செல்
இல்லை என்றால்
போரில் நீ
கர்ணனுடைய
கையால்
தோல்வியைத் தான்
தழுவ நேரிடும்
என்பதை
நினைவில் கொள்”

பீமன் :
“தாயே கர்ணனைப்
பற்றி யாருக்கும்
தெரியாத இவ்வளவு
விஷயங்களைத் தெரிந்து
வைத்திருக்கிறார்களே”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment