June 30, 2020

அறிய வேண்டியவை-பதிவு-65


                ஜபம்-பதிவு-557
        (அறிய வேண்டியவை-65)

கிருஷ்ணன் :
“ஒருவரால் என்ன
விஷயத்தைச் சொல்ல
முடியுமோ அந்த
விஷயத்தைத் தான்
நான் சொல்லச்
சொல்வேன்
கர்ணனுடைய வீரத்தைப்
பற்றி சொல்லுங்கள் “

குந்தி :
“கர்ணனுடைய வீரம்
உலகம் அறிந்த விஷயம்
ஆயிற்றே கிருஷ்ணா
அதை நான் சொல்லி
இந்த உலகம் அறிந்து
கொள்ள வேண்டிய
அவசியம் இல்லையே
கர்ணனுடைய வீரத்தில்
மறைத்து வைக்கப்பட்ட
விஷயம் என்ன
இருக்கிறது
கர்ணனுடைய வீரத்தில்
என்ன ரகசியம் இருக்கிறது”

கிருஷ்ணன் :
“ஒருவருக்கு தெரிந்த
விஷயம் மற்றொருவருக்கு
தெரிந்திருக்க வேண்டிய
அவசியம் இல்லை
எல்லோருக்கும் எல்லா
விஷயங்களும்
தெரிந்திருக்கும் என்றும்
சொல்லவும் முடியாது”

“உங்களுக்கு தெரிந்த
விஷயம் எனக்குத்
தெரியாது - எனக்குத்
தெரிந்த விஷயம்
உங்களுக்குத் தெரியாது
நம் இருவருக்கும்
தெரிந்து விஷயம்
இங்குள்ளவர்கள்
யாருக்கும் தெரியாது”

“ஒரு விஷயம்
அனைவருக்கும்
தெரிந்திருக்கும் என்று
சொல்லவும் முடியாது
தெரிந்த விஷயம்
அனைவரும்
தெரிந்திருக்க வேண்டிய
அவசியமும் கிடையாது
அனைத்து விஷயங்களும்
அனைவருக்கும்
தெரிந்திருக்க வேண்டிய
கட்டாயமும் கிடையாது”

“எந்த விஷயம்
யாருக்கு தெரிய
வேண்டுமோ அவர்களுக்கு
அந்த விஷயம்
தெரிந்தால் போதும்”

“அதனால் தான்
சொல்கிறேன் அத்தை
கர்ணனின் வீரத்தைப்
பற்றி எந்த அளவிற்கு
உங்களுக்குத் தெரியுமோ
அந்த அளவிற்கு
சொல்லுங்கள் என்றேன்”

குந்தி :
“கர்ணனைப் பற்றி
எனக்கு என்ன தெரியுமோ?
அதைப் பற்றி
சொல்கிறேன் கேள்
அர்ஜுனா! “

“கர்ணன் பிறக்கும்
போதே தங்கத்தால் ஆன
கவசகுண்டலத்துடன்
பிறந்தவன் இந்த
உலகத்தில் யாருமே
அவ்வாறு தங்கத்தால் ஆன
கவசகுண்டலத்துடன்
பிறக்கவில்லை
உலகத்திலேயே சிறந்த
வீரர்களாகக் கருதப்படும்
பரசுராமர் பீஷ்மர்
ஏன் குரு துரோணர்
கூட தங்கத்தால் ஆன
கவசகுண்டலத்துடன்
பிறக்கவில்லை “

“கர்ணன்
கவசகுண்டலத்துடன்
இருக்கும் வரை
அவனை உலகத்தில்
உள்ள எந்த ஒரு
அஸ்திரத்தாலும்
அழிக்க முடியாது
என்பதை உணர்ந்த
காரணத்தினால் தான்
அர்ஜுனா உன்னைக்
காப்பாற்ற
வேண்டும் என்ற
நோக்கத்தினால் தான்
கர்ணனுடைய
கொடைத்திறனைப்
பயன்படுத்தி கர்ணனுடைய
கவசகுண்டலங்களை
யாசகமாக பெற்றுக்
கொண்டு சென்று விட்டால்
உன்னை காப்பாற்றி
விடலாம் என்று சூது
செய்து ஏமாற்றுவதற்காக
கர்ணனிடம் கையேந்தி
யாசகம் கேட்டான்
இந்திரன் “

“தன்னிடம் யாசகம்
கேட்க வந்திருப்பது
கடவுளான இந்திரன்
என்பது தெரிந்திருந்தும்;
தன்னை காக்கும்
கவசமாக
கவச குண்டலங்கள்
இருக்கிறது என்பது
தெரிந்திருந்தும்;
கவச குண்டலங்கள்
தன்னிடம் இருக்கும்
வரை தன்னை
எந்த ஒரு
அஸ்திரத்தாலும்
வீழ்த்த முடியாது
என்பது தெரிந்திருந்தும்;
அதை கழட்டி இந்திரனுக்கு
தானமாகக் கர்ணன்
கொடுத்திருக்கிறான்
என்றால் - அது
கர்ணன் தன்னுடைய
திறமையின் மேல்
வைத்த நம்பிக்கையைக்
காட்டுகிறது ;
கவசகுண்டலங்கள்
இல்லாமல் கூட
தன்னால் வெல்ல
முடியும் என்ற
தன்னம்பிக்கை அவனை
ஒரு சிறந்த
வீரனாகக் காட்டுகிறது ;
கர்ணன் செய்த
இச்செயல் அவனுடைய
கொடைத்
தன்மையைக் காட்டுகிறது ;”

“அர்ஜுனா! நீ காட்டில்
பிறந்தாலும் உனக்கு
ஒரு இளவரசனுக்கு
உரிய சர்வ வசதிகளும்
கிடைத்தது உனக்கு
சிறந்த கல்வியை
போதிக்க சிறந்த
குரு துரோணர்
கிடைத்தார்
உனக்கு அறிவுரைகள்
கூறவும் உன்னை
வாழ்க்கையை
மேம்படுத்துவதற்கும் ;
உன்னை
நல்வழிப்படுத்துவதற்கும் ;
உன்னை மேல்நிலைக்கு
கொண்டு வருவதற்கும் ;
வழிகாட்டுவதற்காக
உயர்ந்த வழிகாட்டிகளாக
பீஷ்மர் கிருபர்
விதுரர் போன்றவர்கள்
இருந்தார்கள்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment