ஜபம்-பதிவு-560
(அறிய
வேண்டியவை-68)
“அர்ஜுனா
கர்ணனுடன்
போரிடும்
போது
மிகவும்
ஜாக்கிரதையுடன்
போரிடு
கிருஷ்ணன்
தான்
உன்னுடைய
உயிரை
காப்பாற்ற
வேண்டும்
கிருஷ்ணனிடம்
சென்று
சரணடைந்து
விடு
உன்னுடைய
உயிரைக்
காப்பாற்றிக்
கொள்வதற்கு
இது
ஒன்று
தான் வழி”
கிருஷ்ணன்
:
“போருக்கு
செல்பவனுக்கு
அறிவுரை
சொல்ல
சொன்னால்
பயமுறுத்துகிறீர்கள்
அத்தை”
குந்தி
:
“கர்ணனைப்
பார்த்து
பயந்து
விடக்கூடாது
என்ற
காரணத்தினால் தான்
யாரைப்
பார்த்து
பயப்பட
வேண்டும்
எதற்காக
பயப்பட
வேண்டும்
- எந்த
காரணத்திற்காகப்
பயப்பட
வேண்டும்
என்று
சொல்லிக்
கொடுத்துக்
கொண்டிருக்கிறேன்
“
“எதிரியின்
வீரத்தைப்
பற்றி
தெரிந்து
கொண்டு
போரிட்டால்
மட்டுமே
அச்சம்
இல்லாமல்
போரிட
முடியும்
அர்ஜுனன்
கர்ணனைக்
கண்டு
அச்சப்படாமல்
போரிட
வேண்டும்
என்ற
காரணத்திற்காகத்
தான்
நான்
கர்ணனைப்
பற்றி
நான்
அறிந்தவைகளைச்
சொன்னேன்”
அர்ஜுனன்
:
“தாயே!
எங்களுக்கு
கர்ணனைப்
பற்றித்
தெரியாத
எவ்வளவு
விஷயங்கள்
உங்களுக்குத்
தெரிந்து
இருக்கிறது
தங்களுடைய
அறிவுரைகளை
- நான்
மனதில்
கொண்டு
போரிடுகிறேன்
தாயே!”
என்னை
ஆசிர்வதியுங்கள்
குந்தி
:
“நலமுடன்
வாழ்க மகனே! “
(குருஷேத்திரப்
போர்க்களம்
கர்ணனும்
அர்ஜுனனும்
நேருக்கு
நேராக
போரிடுவதற்கு
தயாராக
நின்றனர்
இருவருடைய
தேரும்
நேருக்கு
நேராக நின்று
கொண்டிருந்தது)
(அர்ஜுனன்
ஒரு
பாணத்தை
எடுத்து
மந்திரங்கள்
சொல்லி
கர்ணனுடைய
தேரை
300
அடி தூரம் வரை
பின்னோக்கி
தள்ளி
விட்டான்
மீண்டும்
பழைய
நிலைக்கே
வந்த கர்ணன்
அர்ஜுனன்
விட்ட
அதே
பாணத்தைப் போல
ஒரு
பாணத்தை எடுத்து
மந்திரத்தை
சொல்லி
அர்ஜுனனுடைய
தேரை
30
அடி தூரம்
பின்னோக்கி
தள்ளி
விட்டான் )
கிருஷ்ணன்
:
“அற்புதம்
கர்ணா
அற்புதம்”
அர்ஜுனன்
:
“பரந்தாமா
நான்
கர்ணனுடைய
தேரை
300
அடி தூரம்
பின்னோக்கி
தள்ளினேன்
அதை
நீங்கள்
பாராட்டவில்லை
ஆனால்
கர்ணன்
நம்முடைய
தேரை
30
அடி தூரம்
வரை
தான்
பின்னோக்கி
தள்ளினான்
ஆனால்
நீங்கள்
கர்ணனை
பாராட்டுகிறீர்கள்
நீங்கள்
பாராட்டியதற்கான
அர்த்தம்
எனக்கு
விளங்கவில்லை
எதற்காக
கர்ணனை
பாராட்டினீர்கள்
பரந்தாமா”
கிருஷ்ணன்
:
“அர்ஜுனா!
கர்ணனுடைய
தேரை
நீ 300 அடி
தூரம்
வரை
பின்னோக்கி
தள்ளியது
பெரிய
விஷயமில்லை
ஆனால்
கர்ணன்
நம்முடைய
தேரை
30
அடி தூரம்
தள்ளியது
பெரிய
விஷயம்”
“நம்முடைய
தேரில்
கொடியில்
இருக்கும்
ஆஞ்சநேயர்
தன்னுடைய
உடல்
பலத்தை
எல்லாம்
பூமியில்
அழுத்தி
தேரை
நகர விடாமல்
செய்து
கொண்டிருந்தார்
கிருஷ்ணனா
நானும்
என்னுடைய
சக்தியை
எல்லாம்
ஒன்றாகத்
திரட்டி
தேரை
நகர
விடாமல்
செய்து
கொண்டிருந்தோம்
நாங்கள்
இருவரும்
ஒன்றாக
சேர்ந்து
எங்களுடைய
உடல்
வலிமை
எல்லாவற்றையும்
பயன்படுத்தி
தேரை
நகர
விடாமல்
செய்து
கொண்டிருந்தோம்
நாங்கள்
இருவரும்
ஒன்றாகச்
சேர்ந்து
தேரை
நகர
விடாமல்
தடுத்து
நிறுத்தியும்
கர்ணன்
தன்னுடைய
பாணங்களால்
நம்முடைய
தேரை
30
அடி தூரம் வரை
பின்னோக்கி
நகர்த்தினான்”
“எந்தவித
ஆதரவும்
இல்லாமல்
தன்னந்தனியாக
நின்று
கொண்டிருந்த
கர்ணனுடைய
தேரைத்
தான் நீ
300
அடி தூரம்
பின்னோக்கி
தள்ளினாய்
ஆனால்
ஆஞ்சநேயருடைய
ஆதரவும்
என்னுடைய
ஆதரவும்
இருந்தும்
கர்ணன்
நம்முடைய
தேரை
30 அடி தூரம்
பின்னோக்கி
தள்ளி
இருக்கிறான் “
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
30-06-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment