June 30, 2020

அறிய வேண்டியவை-பதிவு-72


                ஜபம்-பதிவு-564
          (அறிய வேண்டியவை-72)

“சூரியன்
அஸ்தமிக்கும் நேரம்
தான் பாணம்
விடும் வேகம்
பாணம் அர்ஜுனனாகிய
உன்னை
வந்தடையும் தூரம்
ஆகியவற்றைக்
கணக்கிட்டு
பார்த்துத் தான் கர்ணன்
சூரியன்
அஸ்தமிக்கவில்லை
என்பதற்காக
பாணத்தை விட்டால்
பாணம் உன்னை
வந்தடையும் போது
சூரியன் அஸ்தமித்து
விடும் என்பதை
உணர்ந்தான் கர்ணன்”

“அதனால்
தான் கர்ணன்
பாணத்தை உன்
மேல் செலுத்தாமல்
உயிர் பிழைத்துக்
கொள் என்று
உனக்கு உயிர்ப்பிச்சை
அளித்து
சென்றிருக்கிறான்”

“காலத்தைக் கணக்கிட்டு
பாணத்தை செலுத்தக்
கூடியவன் கர்ணன்
என்பதை இப்போதாவது
உணர்ந்து கொள்
அர்ஜுனா!”

“காலத்தை கணக்கிடத்
தெரிந்தவனிடம்
காலமும் கைகட்டி
தான் நிற்கும்
என்பதை
மறந்து விடாதே
காலத்தை
வசப்படுத்தியவனிடம்
சகலமும் வசப்படும்
என்பதை
மறந்து விடாதே”

“கர்ணன் தர்மத்தை
கடைபிடித்த
காரணத்தினால் தான்
அவன் உன் மேல்
பாணங்களை
விடவில்லை
அது மட்டுமல்ல
தர்மத்தின் வழி
நின்று தான்
உன்னைக் கொல்வேன்
அதர்மத்தைப் பின்பற்றி
உன்னைக்
கொல்ல மாட்டேன்
என்பதை உனக்கு
உணர்த்தி விட்டு
சென்றிருக்கிறான்”

“இதுவரை
நடந்தவைகளைப் பற்றி
எனக்குத் தெரியாது
ஆனால் நான்
இப்போது
கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருக்கிறேன்
நான் கௌரவர்களின்
சேனாதிபதியாக
இருக்கும் வரை
எந்தவிதமான
அதர்மச் செயலும்
என்னுடைய
தலைமையில்
நடப்பதற்கு நான்
துணைபுரிய மாட்டேன்”

“நானும் அதர்மத்தின்
வழி நிற்க மாட்டேன்
தர்மத்தைப் பின்பற்றித்
தான் நடப்பேன்
தர்மத்தைப் பின்பற்றித்
தான் உன்னைக்
கொல்வேன்
அதர்மத்தின் வழி
நின்று உன்னைக்
கொல்ல மாட்டேன்
என்ற விஷயத்தை
உனக்கு உணர்த்தி
விட்டு
சென்றிருக்கிறான்”

அர்ஜுனன் :
“அப்படி என்றால்
பாண்டவர்கள் தர்மத்தை
பின்பற்றாதவர்களா
பாண்டவர்கள்
தர்மத்தை
பின்பற்றாதவர்கள்
என்று நினைத்து
விட்டானா கர்ணன்”

கிருஷ்ணன் :
“தர்மம் எது ?
அதர்மம் எது ? என்று
ஆராய்ச்சி செய்வதை
விட்டு விட்டு
நாளைய போரில்
கர்ணனைக் கொல்வது
எப்படி என்று
சிந்தனை செய்
அனைத்தையும் மறந்து
விட்டு அமைதியாக
இருந்து கர்ணனைக்
கொல்வது எப்படி
என்பதை யோசிக்க
முயற்சி செய் “

(கௌரவர்கள் பாசறை
கர்ணனைத் தேடி
துரியோதனன் வந்தான்)

துரியோதனன் :
“அருமை நண்பா
என்ன காரியம்
செய்து விட்டாய்
அர்ஜுனனைக்
கொல்வதற்கு
சரியான சந்தர்ப்பம்
கிடைத்தும் கூட
ஏன் நீ அர்ஜுனனைக்
கொல்லவில்லை
சூரியன் அஸ்தமிக்காமல்
இருக்கும் போது
ஏன் நீ அர்ஜுனன்
மேல் பாணங்களை
விட்டு அவனைக்
கொல்லவில்லை
அர்ஜுனனுக்கு
உயிர்ப்பிச்சை அளித்து
அவனை ஏன்
போக அனுமதித்தாய்”

கர்ணன் :
“அருமை நண்பா
துரியோதனா”

“சூரியன்
அஸ்தமிக்கவில்லை
என்பதற்காக நான்
அர்ஜுனன் மேல்
பாணங்களை
விட்டிருந்தால்
நான் விட்ட பாணம்
அர்ஜுனனுடைய
நெஞ்சை
துளைக்கும் போது
சூரியன்
அஸ்தமித்து விடும்
இது போர்
விதிகளுக்கு மாறானது
போர் விதிகளை
நான் மீறியவனாவேன்
தர்மத்தைக் கடை
பிடிக்காதவனாவேன்”

“அதனால் தான் நான்
அர்ஜுனன் மேல்
பாணங்களைச்
செலுத்தாமல்
உயிர் பிழைத்துச் செல்
என்று அர்ஜுனனுக்கு
உயிர்ப்பிச்சை அளித்து
இன்று உயிரோடு இரு
என்று அவனை
அனுப்பி வைத்தேன்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment