June 30, 2020

அறிய வேண்டியவை-பதிவு-63


             ஜபம்-பதிவு-555
       (அறிய வேண்டியவை-63)

“பிறப்பின் ரகசியங்கள்
என்பவை அர்த்தம்
நிறைந்தவை
பிறப்பில் உள்ள
அர்த்தங்களைப்
புரிந்து கொள்பவர்களால்
மட்டுமே
பிறப்பின் ரகசியங்களை
புரிந்து கொள்ள முடியும்”

“பிறப்பின் ரகசியங்கள்
தெரியாதவர்கள் தான்
இந்த உலகத்தில்
அதிகம் வாழ்ந்து
கொண்டு இருக்கிறார்கள்
பிறப்பின் ரகசியத்தை
அறிந்து கொள்வதற்கு
பெரும்பாலானவர்கள்
முயற்சி செய்வதேயில்லை”

“பிறப்பின் ரகசியத்தை
அறிந்து கொள்ள
பல பேர் முயற்சி
செய்கின்றனர்
அதிலும் ஒரு சிலரே
வெற்றி பெறுகின்றனர்”

“பிறப்பின் ரகசியத்தை
அறிந்து கொண்ட
சில பேருக்கு
பிறப்பின் ரகசியம்
சாதாரணமானதாக
இருக்கும் - ஆனால்
சிலருக்கோ
பிறப்பின் ரகசியம்
வாழ்க்கையின்
அஸ்திவாரமாக இருக்கும்”

“பிறப்பின் ரகசியத்தை
பாண்டவர்களாகிய
நீங்கள் எவ்வவு
தூரம் அறிந்து
வைத்திருக்கிறீர்களோ
தெரியாது
ஆனால் கர்ணன்
தன்னுடைய பிறப்பின்
ரகசியத்தை தெரிந்து
வைத்திருக்கிறான்”

“தன்னுடைய பிறப்பு
எவ்வாறு நிகழ்ந்தது
என்பதை அறிந்து
வைத்திருக்கிறான்
பிறப்பின் காரணத்தைப்
புரிந்து வைத்திருக்கிறான்
பிறப்பின் ரகசியதை
தெரிந்து
வைத்திருக்கிறான்”

“பிறப்பின் ரகசியங்கள்
தெரியாத வரை தான்
மனிதனால் நிம்மதியாக
இருக்க முடியும்
எந்த செயலையும்
குழப்பம் இல்லாமல்
செய்ய முடியும்”

“தன்னுடைய பிறப்பின்
ரகசியத்தில் உள்ள
உண்மைகளைத்
தெரிந்து கொண்ட
பின்பும்
எந்தவிதமான
குழப்பமும் இல்லாமல்
கர்ணன்
செயல்படுகிறான்
என்றால்
அவனுடைய
மன உறுதியைப்
பாராட்டத்
தான் வேண்டும்”

“மன உறுதி
கொண்டவர்களால்
மட்டுமே
சிறந்த வீரனாக
இருக்க முடியும்
அதனால் சொல்கிறேன்
கர்ணன் உலகத்திலேயே
சிறந்த வீரன் என்று”

“குருஷேத்திரப் போர்
முடிந்து பாண்டவர்கள்
வெற்றி பெற்றால்
இறந்தவர்களின்
உடலின் மீதும் ;
கணவனை இழந்த
விதவைகளின்
கண்ணீரின் மீதும் ;
தந்தையை இழந்த
குழந்தைகளின்
ஓலத்திலும் மீதும் ;
தான் தர்மர் அரியணை
ஏற வேண்டி வரும் “

“தன்னைச் சுற்றி
நடக்கும் சூழ்நிலைகளை
பார்த்துக் கொண்டு
தர்மர் அரியணை ஏறி
அரசாட்சி செய்வதற்குத்
தயங்குவார்”

“ஆனால் கெளரவர்கள்
சேனை முழுவதும்
அழிந்தாலும் ;
கௌரவர்கள் படையில்
ஒருவர் கூட
உயிரோடு இல்லை
என்று சொல்லும்
வகையில் அனைவரும்
இறந்தாலும்  ;
சுற்றி இருந்த உறவுகள்
அனைத்தும் மடிந்தாலும் ;
கர்ணன் அரியணை
ஏறி அரசாட்சி
செய்யக்கூடிய
நிலை ஏற்பட்டால்
அவன் எந்தவிதமான
தயக்கமும் இல்லாமல்
அரியணையில் அமர்ந்து
அரசாட்சி செய்வான் ;”

“ஏனென்றால் க‌ஷ்டங்கள்
கவலைகள் துன்பங்கள்
அவமானங்கள்
துரோகங்கள்
வாக்குறுதிகள் சாபங்கள்
ஆகியவற்றை நெஞ்சில்
சுமந்து கொண்டு
வாழ்ந்து கொண்டிருக்கும்
கர்ணனால் மட்டுமே
எத்தகைய இக்கட்டான
சூழ்நிலை ஏற்பட்டாலும்
மனஉறுதியை
இழக்காமல் தலைமை
ஏற்க முடியும்”

“இக்கட்டான
சூழ்நிலைகளில்
மற்றவர்களுடைய
துயரங்களைப் புரிந்து
கொண்டு அரசாட்சி
செய்ய முடியும்
இக்கட்டான
சூழ்நிலைகளில்
எதையும் ஏற்று
செயல்படுத்த முடியும்
இக்கட்டான
சூழ்நிலைகளில்
சரியான முடிவை
எடுக்க முடியும்
இக்கட்டான
சூழ்நிலைகளில்
உறுதி குலையாமல்
இருக்க முடியும்
கௌரவர்கள் படையில்
அஸ்தினாபுரத்தை
அரசாட்சி செய்யும்
தகுதி கர்ணன்
ஒருவனுக்கே இருக்கிறது”

“மனதில் எந்தவிதமான
துயரங்களும்
இல்லாமல் போர்
புரிவதும் அரசாட்சி
செய்வதும் எளிது
ஆனால் மனதில்
ஆயிரக்கணக்கான
துயரங்களை
வைத்துக் கொண்டு
போர் புரிவதும்
அரசாட்சி செய்வதும்
அவ்வளவு
எளிதான காரியமல்ல”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 30-06-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment