ஜபம்-பதிவு-561
(அறிய
வேண்டியவை-69)
“இப்போது
தெரிந்து
கொள்
கர்ணன்
எவ்வளவு
பெரிய
வீரன்
என்று
கர்ணன்
தான் வீரன்
என்பதை
இந்த ஒரு
பாணத்திலேயே
காட்டி
விட்டான்
இனி
மேலாவது
கர்ணன்
மேல் உள்ள
குறைவான
மதிப்பீட்டை
விட்டு
விட்டு
ஒரு
வீரனுடன்
போராடப்
போகிறோம்
என்பதை
உணர்ந்து
போரிடு”
(அர்ஜுனனும்
கர்ணனும்
மாறி
மாறி
தொடர்ந்து
பாணங்களை
விட்டுக்
கொண்டிருந்தனர்)
(அர்ஜுனன்
மேல்
நாகாஸ்திரத்தை
கர்ணன்
விட
கிருஷ்ணன்
தேரை
பூமியில்
அழுத்தியதால்
நாகாஸ்திரம்
அர்ஜுனனுடைய
கிரீடத்தை
தள்ளி
விட்டுச்
சென்றது
நாகாஸ்திரத்தை
மீண்டும்
எடுத்து
அர்ஜுனன்
மேல்
விடுவதற்கு
கர்ணன்
யோசித்த
போது
நகாஸ்திரத்தை
ஒரு
முறைக்கு
மேல்
மறுமுறை
அர்ஜுனன்
மேல்
செலுத்தக்
கூடாது
என்று
தன்னுடைய
தாய்
குந்தி
தேவிக்கு
அளித்த
வாக்குறுதியின்
ஞாபகம்
கர்ணனுடைய
நினைவிற்கு
வந்தது
நாகாஸ்திரத்தை
மீண்டும்
செலுத்தாமல்
அதை
வணக்கம்
செலுத்தி
விட்டு கீழே
போட்டு
விட்டான்
இதனால்
நாகாஸ்திரம்
எங்கிருந்து
வந்ததோ
அங்கேயே
மீண்டும்
திரும்பிச்
சென்றது)
(தொடர்ந்து
கர்ணனுக்கும்
அர்ஜுனனுக்கும்
இடையே
கடுமையான
போர்
நடைபெற்றது
கர்ணன்
அர்ஜுனனுடைய
நாண்
கயிற்றை
அறுக்கும்
போது
அர்ஜுனன்
மின்னல்
வேகத்தில்
வேறு
நாண்களைப்
பூட்டினாலும்
மின்னலை
விட
வேகமாக
அதனை
அறுத்துக்
கொண்டிருந்தான்
கர்ணன்
- இவ்வாறு
அர்ஜுனனுடைய
நாண்
கயிற்றை
ஒரு
முறை
கிடையாது
இரு
முறை
கிடையாது
நூறு
முறைக்கு மேல்
கர்ணன்
அறுத்தான்)
(கர்ணன்
வைத்திருக்கும்
விஜய
தனுசின்
நாணை
அறுக்க
எவ்வளவோ
முயற்சி
செய்தும்
அர்ஜுனனால்
அறுக்க
முடியவில்லை)
(அப்போது
தான்
தாய்
குந்தி சொன்னது
அர்ஜுனனுடைய
நினைவிற்கு
வந்தது
தான்
வைத்திருக்கும்
காண்டீபத்தை
விட
கர்ணன்
வைத்திருக்கும்
விஜய
தனுசு
உயர்ந்தது
என்பதையும்
காண்டீபத்தின்
நாணை
அறுக்க
முடியும்
என்பதையும்
கர்ணன்
வைத்திருக்கும்
விஜய
தனுசின்
நாணை
அறுக்க
முடியாது
என்பதையும்
உணர்ந்து
கொண்டான்)
(கர்ணனுடைய
மின்னல்
வேகத்திற்கு
ஈடு
கொடுக்க
முடியாமல்
தடுமாறிக்
கொண்டிருந்தான்
அர்ஜுனன்
கர்ணனுடைய
பாணங்களுக்கு
பதிலடி
தர
முடியாமல்
திணறிக்
கொண்டிருந்தான்
அர்ஜுனன்
கர்ணனுடைய
வீரத்திற்கு
முன்னால்
தன்னுடைய
வீரம்
ஒன்றும்
இல்லை
என்பதை
கொஞ்சம்
கொஞ்சமாக
உணரத்
தொடங்கினான்
அர்ஜுனன்)
(உலகத்திலேயே
சிறந்த
வில்லாளி என்று
போற்றப்படக்
கூடிய
அர்ஜுனன்
கர்ணனுடைய
பாணங்களுக்கு
தன்னால்
ஈடு
கொடுக்க
முடியவில்லை
என்பதையும்;
கர்ணனுடைய
வேகத்திற்கு
சமமாக
தன்னால்
போரிட
முடியவில்லை
என்பதையும்;
பீஷ்மர்
துரோணர்
ஆகியோருடன்
போரிடும்
போது
கூட
அவர்களிடம்
இவ்வளவு
வேகத்தையும்
வீரத்தையும்
அவர்களிடம்
காணவில்லை
என்பதையும்;
சூரிய
அஸ்தனம்
நிகழ்ந்தால்
மட்டுமே
தன்னால்
தப்பிக்க
முடியும்
என்பதையும்;
இறப்பு
தன்னை
நெருங்காமல்
இருக்க
வேண்டுமானால்
சூரிய
அஸ்தமனம்
நிகழ்ந்தால்
மட்டுமே
முடியும்
என்பதையும்;
ஏதேனும்
அதிசயம்
நிகழ்ந்தால்
மட்டுமே
தன்னால்
தப்பிக்க
முடியும்
என்பதையும்;
அர்ஜுனன்
உணர்ந்து
கொண்டான்)
(தோல்வியின்
எல்லையை
நோக்கி
சென்று
கொண்டிருந்தான்
அர்ஜுனன்
கர்ணனின்
உருவத்தில்
இறப்பு
தன்னை
கொஞ்சம்
கொஞ்சமாக
நெருங்கிக்
கொண்டிருப்பதை
உணர்ந்து
கொண்டான்
அர்ஜுனன்)
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
30-06-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment