பதிவு-10-செயற்கரிய-
திருக்குறள்
அலெக்சாண்டரின்
வீரத்தைப் பார்த்த
அந்த
மைதானத்தில்
கூடியிருந்த மக்கள்
அனைவரும்
ஆச்சரியப்பட்டனர்
தங்கள்
மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினர்.
தங்களுடைய
மகிழ்ச்சியை
வெளிப்படுத்தும்
விதமாக
அலெக்சாண்டரை
வாழ்த்தினர்
அந்த
மைதானத்தில்
கூடி இருந்த
மக்கள்
அனைவரும்
எழுந்து நின்று
கை தட்டி
ஆரவாம்
செய்தனர்
அலெக்சாண்டர்
வாழ்க
என்ற கோஷம்
அந்த
மைதானத்தையே
அதிரச் செய்தது.
யாரும்
செய்யாத செயலை,
யாராலும்
செய்ய
முடியாத செயலை
அலெக்சாண்டர்
செய்து காட்டினான்.
குதிரையை
அடக்கிய
அலெக்சாண்டர்
தனது தந்தையை
நோக்கி வந்தான்.
மன்னன் பிலிப்
அலெக்சாண்டரை
கட்டித் தழுவினான்.
என்ன சொல்வது
என்று தெரியாமல்
வார்த்தைகளின்றி
தவித்துக் கொண்டு
இருந்த மன்னன்
பிலிப் தன்னுடைய
மகனைப் பார்த்து
பேசத் தொடங்கினான்.
என் மகனே
அலெக்சாண்டர்
அடங்காத
குதிரையை
அடக்கியதன் மூலம்
நீ ஒரு திறமையான
வீரன் என்பதை
நிரூபித்து
இருக்கிறாய்.
வெற்றி பெறுவதற்கு
வீரம் மட்டும்
போதாது
அறிவும் வேண்டும்
என்று
நிரூபித்து
இருக்கிறாய்
எத்தகைய
பிரச்சினையையும்
உன்னால் சமாளித்து
வெற்றி பெற
முடியும் என்பதை
நிரூபித்து
இருக்கிறாய்
யாரும் செய்யாததை
யாராலும்
செய்ய முடியாததை
உன்னால் செய்ய
முடியும் என்பதை
நிரூபித்து
இருக்கிறாய்
இவைகளை நீ
மக்கள்
முன்னிலையில்
நிரூபித்து
இருக்கிறாய்
மக்கள் அனைவரும்
ஏற்றுக் கொள்ளும்
வகையில்
நிரூபித்து
இருக்கிறாய்
உனக்குக் கிடைத்த
இந்த வெற்றி
இந்தக் குதிரையுடன்
முடிந்து
விடப்போவதில்லை
உன்னுடைய
வெற்றிப் பயணம்
இன்று தான்
தொடங்கி இருக்கிறது
பல
போர்க்களங்களைக்
காணப் போகிறாய்.
பல வெற்றிகளைக்
குவிக்கப் போகிறாய்.
------என்றும் அன்புடன்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-------04-02-2022
.//////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment