பதிவு-9-செயற்கரிய-
திருக்குறள்
இப்போது
நான் உன் மேல்
ஏறப்போகிறேன்
ஏறி உட்காரப்
போகிறேன்
உன் மேல்
உட்கார்ந்து
சவாரி செய்யப்
போகிறேன்
என்று
அலெக்சாண்டர்
அதன் காதுகளில்
பேசியதை
குதிரை
புரிந்தது போல்
தலை ஆட்டியது
மூச்சை
இழுத்து விட்டது
குதிரை விட்ட
மூச்சு அந்த
மைதானத்தில்
எதிரொலித்தது
குதிரையின் மேல்
ஏறுவதற்கு
குதிரை சம்மதம்
தெரிவித்து விட்டது
சவாரி செய்வதற்கு
சம்மதம்
தெரிவித்து விட்டது
என்பதை
உணர்ந்து கொண்ட
12 வயது
சிறுவனான
அலெக்சாண்டர்
அந்தக்
குதிரையின்
மேல் ஏறி
அமர்கிறான்.
அலெக்சாண்டாரை
தோளில் சுமந்தபடி
அந்தக் குதிரை
தன்னுடைய
இரண்டு
முன்னங்கால்களை
வானத்தை நோக்கியும்
இரண்டு
பின்னங்கால்களை
தரையில் வைத்தும்
நின்றபடி
கனைத்தது
தான்
அனைத்திற்கும்
தயார் என்று
தன்னுடைய
செய்கையின் மூலம்
உணர்த்தியதை
புரிந்து கொண்ட
அலெக்சாண்டர்
குதிரையின்
மேல் அமர்ந்து
கொண்டு சவாரி
செய்ய ஆரம்பித்தான்
குதிரையின் மேல்
அமர்ந்து கொண்டு
அந்த
மைதானத்தை
சுற்றி
சுற்றி வந்தான்
குதிரையானது
தன்னைப்
புரிந்து
கொள்ளும் வரை
குதிரையின்
மேல் ஏறி
சவாரி செய்து
கொண்டே
இருக்கிறான்
அலெக்சாண்டர்
குதிரையானது
தன்னை
ஏற்றுக் கொண்டது
தன்னைப்
புரிந்து கொண்டது.
தன்னுடைய
சொல் கேட்டு
நடக்கிறது
என்று
தெரிந்தவுடன்
குதிரையை
விட்டு கீழே
இறங்கி நின்றான்.
அலெக்சாண்டர்
பியூசிபேலஸ்
குதிரையை
இது வரை யாரும்
அடக்கியதில்லை.
முதன் முறையாக
அலெக்சாண்டர்
அந்தக் குதிரையை
அடக்கினான்
பியூசிபேலஸ்
குதிரையின் மேல்
இது வரை யாரும்
ஏறியதில்லை.
முதன் முறையாக
அலெக்சாண்டர்
அதன் மேல்
ஏறினான்.
பியூசிபேலஸ்
குதிரையின்
மேல் ஏறி
இது வரை
யாரும் சவாரி
செய்ததில்லை
முதன் முறையாக
அலெக்சாண்டர்
அதன் மேல்
ஏறி. சவாரி
செய்தான்
------என்றும் அன்புடன்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-------04-02-2022
.//////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment