February 04, 2022

பதிவு-2-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-2-செயற்கரிய-

திருக்குறள்

 

உலக வரலாற்றை

எடுத்துக்

கொண்டாலும்

எந்தத் துறையை

எடுத்துக்

கொண்டாலும்

வெற்றி

பெற்றவர்கள்,

வரலாறு

படைத்தவர்கள்,

சாதனை

நிகழ்த்தியவர்கள்,

காலத்தை

வென்றவர்கள்,

மக்களால்

போற்றப்படுபவர்கள்,

அறிவாளியாக

ஏற்றுக்

கொள்ளப்பட்டவர்கள்

சிறந்தவராகக்

கருதப்படுபவர்கள்,

புத்திசாலியாகக்

ஒத்துக்

கொள்ளப்பட்டவர்கள்,

யாராக இருந்தாலும்

அவர்கள்

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச்

செய்திருப்பர்

 

யாரும் செய்யாத

யாராலும்

செய்ய முடியாத

செயலைச் செய்பவர்

வரலாற்றைப்

படைத்து காலத்தை

வென்று நிற்பர்

 

தெஸ்ஸாலி

நாட்டைச் சார்ந்த

ஒருவன்

பிலிப் மன்னனிடம்

விற்பதற்காக

ஒரு குதிரையைக்

கொண்டு வந்தான்.

அந்தக் குதிரை

யாருக்கும்

அடங்காத குதிரை.

யாராலும்

அடக்க முடியாத

குதிரை.

அந்தக் குதிரையின்

பெயர்

பியூசிபேலஸ்.

 

தெஸ்ஸாலி நாட்டு

முரட்டு குதிரையை

யாராலும்

அடக்க முடியாத

குதிரையைக்

காண வேண்டும்

என்ற ஆவல்

பிலிப் மன்னனுக்கு

ஏற்பட்டதால்

மன்னன் பிலிப்

அவரது மனைவி

ஒலிம்பியஸ்

மற்றும்

அவர்களுடைய

மகன்

அலெக்சாண்டர்

ஆகியோர்

அந்தக் குதிரையைக்

காண்பதற்காக

அரண்மனை

மைதானம்

நோக்கிச் சென்றனர்.

 

மன்னன் பிலிப்

அவரது மனைவி

ஒலிம்பியஸ்

மற்றும்

அவர்களுடைய

மகன்

அலெக்சாண்டர்

ஆகியோர் அந்தக்

குதிரையைக்

காண்பதற்காக

அரண்மனை

மைதானம்

நோக்கிச்

செல்கின்றனர் என்ற

செய்தியைக்

கேள்விப்பட்ட

அந்நாட்டின்

தளபதிகளும்,

காவலர்களும்,

வீரர்களும், மக்களும்

அந்த அரண்மனை

மைதானத்தில்

அடங்காத

குதிரையைப்

பார்ப்பதற்காக

அனைவரும்

ஒன்றாகக் கூடி

விட்டனர்.

 

மைதானம் சென்ற

அலெக்சாண்டர்

தனது அப்பா

பிலிப் மன்னன்

அருகில் அமர்ந்து

கொள்கிறான்

அலெக்சாண்டரின்

அம்மா

ஒலிம்பியஸ்

சிறிது தொலைவில்

அமர்ந்து

கொள்கிறாள்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment