February 04, 2022

பதிவு-11-செயற்கரிய- திருக்குறள்

 பதிவு-11-செயற்கரிய-

திருக்குறள்

 

நாடுகள்

மண்டியிடப் போகிறது

எதிரிகள்

அழிக்கப்படப்

போகிறார்கள்

மக்கள் ஆதரவு

தரப்போகிறார்கள்

 

நண்பர்கள்

துணையாக இருக்கப்

போகிறார்கள்

 

தோல்வி உன்னை

அணுகாது.

வெற்றி உன்னை

அணுகாமல் இருக்காது

.

இது வரை

யாரும் படைக்காத

புதிய வரலாற்றைப்

படைக்கப் போகிறாய்.

 

இன்று நீ

பெற்ற

வெற்றி தான்

உன்

வாழ்க்கையின்

தொடக்கம்

 

வெற்றியை

நோக்கி செல்

என்று

கூறிக்கொண்டே

தன் மகன்

அலெக்சாண்டரை

கட்டித் தழுவிக்

கொள்கிறான்

மன்னன் பிலிப்

 

மன்னன் பிலிப்

சொன்னது போல

பியூசிபேலஸ்

குதிரையை வாங்கி

அலெக்சாண்டரிடம்

கொடுக்கிறான்.

பியூசிபேலஸ்

குதிரை

அலெக்சாண்டருக்கு

உரிமையானது

சொந்தம் ஆனது

 

அலெக்சாண்டர்

எங்கு எல்லாம்

சென்றானோ

அங்கு எல்லாம்

பியூசிபேலஸ்

குதிரை

அலெக்சாண்டரை

சுமந்து சென்றது.

அலெக்சாண்டருடன்

பல போர்களில்

கலந்து கொண்டது

 

அலெக்சாண்டர்

பியூசிபேலஸ்

குதிரையுடன்

இணைந்து பல

போர்களை

வென்றான்.

பியூசிபேலஸ்

இறுதிக்

காலம் வரை

அலெக்சாண்டரை

சுமந்து சென்றது

 

கிமு.326 ஜுலை

மாதம்

இந்தியாவின்

ஜீலம் நதிக்கும்

சீனாப் நதிக்கும்

இடைப்பட்ட

பகுதியான

தற்போதைய

பஞ்சாப் என்று

அழைக்கப்படும்

பகுதியை ஆண்ட

அரசனான

போரஸ் என்கிற

புருஷோத்தமன்

எது வந்தாலும்

சரி அந்நியனுக்கு

அடிபணிய

மாட்டேன்.

என்று

அலெக்சாண்டரை

எதிர்த்துப் போர்

புரிந்தான்

 

அலெக்சாண்டர்

தன்னுடைய

வாழ்க்கையிலேயே

அப்போது தான்

முதன் முதலாக

ஒரு உண்மையான

வீரனைப் பார்த்தான்

 

இந்தப் போரில் தான்

பியூசிபேலஸ்

குதிரை பலத்த

காயங்களுடன்

மரணம் அடைந்தது

 

பியூசிபேலஸ்

மறைந்த

பிறகு தான்

அலெக்சாண்டரை

விட்டுப் பிரிந்தது.

 

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-------04-02-2022

.//////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment