பதிவு-7-செயற்கரிய-
திருக்குறள்
ஏன் அடங்காமல்
இருக்கிறாய்
ஏன் யாரையும்
உன் அருகில்
வர விடாமல்
தடுக்கிறாய்
ஏன் உன் மேல்
சவாரி செய்ய
விடாமல் தடுக்கிறாய்
உனக்கு
என்ன ஆனது
உனக்கு என்ன
தான் பிரச்சினை
ஏன்
பயப்படுகிறாய்
எதற்காகப்
பயப்படுகிறாய்
எதைப் பார்த்து
பயப்படுகிறாய்
என்று
பேசிக் கொண்டே
அதன் கண்ணருகில்
வந்து
குதிரையின்
கண்களைப்
பார்த்தான்.
குதிரையின்
கண்களில்
பயம் தெரிந்தது.
எதற்காக குதிரை
பயப்படுகிறது என்று
அதன் கண்களை
உற்று நோக்கினான்
அலெக்சாண்டர்
குதிரை
எதைப் பார்த்து
பயப்படுகிறது
என்பதைக்
கண்டறிவதற்காக
மேலே வானத்தைப்
பார்த்தான்.
கீழே பூமியைப்
பார்த்தான்
சுற்றும் முற்றும்
பார்த்தான்.
குதிரையைச்
சுற்றிலும் பார்த்தான்.
சிறிது நேரம்
யோசித்தான்.
கண்டு பிடித்து
விட்டான்
அலெக்சாண்டர்.
சூரியனின்
எதிர்த்திசையில்
குதிரை
நிறுத்தப்பட்டுள்ளதால்
உண்டான
தன்னுடைய
நிழலைப் பார்த்தே
குதிரை
பயப்படுகிறது
பார்ப்பதற்கு
கருமையான
நிறத்தில் இருக்கும்
அச்சத்தை
ஏற்படுத்தக்கூடிய
வகையில் இருக்கும்
தன்னுடைய
நிழலைப் பார்த்தே
குதிரை பயப்படுகிறது.
அந்த நிழல்
ஏதோ ஒரு
பயங்கரமான
கருமை
நிறம் கொண்ட
கொடிய மிருகம்
என்று அந்தக்
குதிரை நினைக்கிறது
அந்த
கொடிய மிருகம்
தன்னை
பின்தொடர்கிறது
தன்னை கொல்ல
முயற்சி செய்கிறது
தன்னை அழிக்க
நினைக்கிறது
என்று
நினைப்பதால்
குதிரை பயப்படுகிறது.
சூரியனுக்கு
எதிர்த் திசையில்
குதிரை
இருக்கின்றது
என்ற
காரணத்தினால்
குதிரையின்
கருமையான
நிறம் கொண்ட
நிழல் தரையில்
விழுகிறது
அந்த நிழலைப்
பார்த்துத் தான்
தன்னுடைய
நிழலைப்
பார்த்துத் தான்
குதிரை
பயப்படுகிறது
------என்றும் அன்புடன்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-------04-02-2022
.//////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment