பதிவு-5-செயற்கரிய-
திருக்குறள்
மைதானத்தில்
அமர்ந்து
இருந்தவர்கள்
அனைவருமே
குரல் வந்த
திசையை நோக்கி
திரும்பினர்.
நான் அடக்குகிறேன்
என்று மீண்டும்
குரல் எழுப்பினான்
அலெக்சாண்டர்.
அனைவரும் அந்த
12-வயது சிறுவனை
ஆச்சரியத்துடன்
பார்த்து
அலெக்சாண்டர் வாழ்க
என்று குரல்
எழுப்பினர்.
அப்பா நான் அந்த
குதிரையை
அடக்குகிறேன்
எனக்கு அனுமதி
கொடுங்கள் என்று
அலெக்சாண்டர்
கேட்ட போது
மன்னன் பிலிப்
ஆச்சரியத்தால்
உறைந்து போனான்.
அவனுடைய தாயார்
தன் மகனையே
பார்த்துக்
கொண்டிருந்தார்.
அந்த மைதானம்
முழுவதும்
அலெக்சாண்டர்
வாழ்க
என்ற பெயரே
எதிரொலித்துக்
கொண்டிருந்தது.
குதிரையை அடக்க
அலெக்சாண்டரை
அனுப்பலாம்.
தோல்வியுற்றாலும்
பரவாயில்லை
காயம் பட்டாலும்
பரவாயில்லை
போராடினான்
என்று எடுத்துக்
கொள்ளலாம்.
அலெக்சாண்டர்
உயிருக்கு ஏதேனும்
ஆபத்து ஏற்பட்டால்
என்ன செய்வது
என்று யோசித்துக்
கொண்டு இருந்தான்.
மன்னன் பிலிப்
ஒலிம்பியஸ்
தன் மகன்
அலெக்சாண்டரையே
பார்த்துக் கொண்டு
இருந்தாள்.
அமைதியாக
இருந்தாள்,
அலெக்சாண்டர்
வாழ்க என்ற
குரல்கள்
மைதானத்தில்
தொடர்ந்து
எதிரொலித்துக்
கொண்டு இருந்த
காரணத்தினால்
மன்னன் பிலிப்
பியூசிபேலஸ்
குதிரையை
அடக்குவதற்காக
மகன்
அலெக்சாண்டருக்கு
அனுமதி
கொடுத்தான்.
இந்த
விலையுயர்ந்த
குதிரையை நீ
அடக்கி விட்டால்
இந்த குதிரையை
விலைக்கு வாங்கி
உனக்கே கொடுத்து
விடுகிறேன்.
செல்வாயாக
குதிரையை
அடக்குவாயாக
வெல்வாயாக என்று
அனுமதி
கொடுத்தான்
மன்னன் பிலிப்.
அனுமதி பெற்ற
அலெக்சாண்டர்
தன்னுடைய தாயைப்
பார்த்தான்.
மகனைப் பார்த்து
கண்களால் சம்மதம்
தெரிவித்து விட்டு
தலையையும்
அசைத்தாள்
ஒலிம்பியஸ்.
------என்றும் அன்புடன்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-------04-02-2022
.//////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment