August 11, 2022

ஜபம்-பதிவு-840 (சாவேயில்லாத சிகண்டி-174)

 ஜபம்-பதிவு-840

(சாவேயில்லாத

சிகண்டி-174)

 

துரியோதனன் :

கௌரவர்கள்

102 பேர்கள் என்றாலும்

இந்த உலகம்

கௌரவர்கள்

100 பேர்கள் என்று

சொல்வதற்கு ஒரு

காரணம் இருக்கிறது

 

துச்சாதனன் :

என்ன காரணம்

 

துரியோதனன் :

தந்தை

திருதராஷ்டிரருக்கும்

தாய் காந்தாரிக்கும்

பிறந்த

100 பேர்களை

மட்டுமே

கௌரவர்கள் என்று

எடுத்துக் கொள்கிறது

இந்த உலகம்

 

திருதராஷ்டிரருக்கும்

பணிப்பெண்ணான

சுக்தாவுக்கும்

பிறந்த

யுயுத்சுவை

தாசி குலத்து

பெண்ணுக்குப்

பிறந்த

யுயுத்சுவை

தாழ்ந்த ஜாதிக்குப்

பிறந்த யுயுத்சுவை

கௌரவர்களில்

ஒருவராக ஏற்றுக்

கொள்ளவில்லை

இந்த உலகம்

 

துச்சாதனன் :

அண்ணா துச்சலை

 

துரியோதனன் :

அவள் பெண்

என்பதால்

இந்த உலகம்

அவளை கணக்கில்

எடுத்துக்

கொள்ளவில்லை

 

துச்சாதனன் :

அது சரி

விதுரருக்கும்

யுயுத்சுவுக்கும்

என்ன சம்பந்தம்

இருக்கிறது

 

சம்பந்தம் எதுவும்

இருப்பதாகத்

தெரியவில்லையே

 

துரியோதனன் :

மேலோட்டமாகப்

பார்த்தால் எந்த

ஒரு விஷயமும்

புரியாது தான்

ஆழ்ந்து

பார்த்துத்தான்

யோசிக்க வேண்டும்

 

நாம் எந்த ஒரு

விஷயத்தையும்

ஆழ்ந்து

யோசிக்காததால் தான்

நம்மைச் சுற்றி

நடக்கும்

விஷயங்களை

நம்மால்

புரிந்து கொள்ள

முடியாமல்

இருக்கிறோம்

 

விதுரர் யுயுத்சு

இருவருமே

பணிப்பெண்ணுக்குப்

பிறந்தவர்கள்

தாசிகுலத்துப்

பெண்ணுக்குப்

பிறந்தவர்கள்

தாழ்ந்த ஜாதி

பெண்ணுக்குப்

பிறந்தவர்கள்

ஷத்திரியர்களால்

ஒதுக்கி

வைக்கப்பட்டவர்கள்

சமுதாயத்தால்

புறக்கணிக்கப்

பட்டவர்கள்

அவர்களுக்குரிய

மரியாதை

கிடைக்காமல்

அவமானப்படுத்தப்

பட்டவர்கள்

அனைவராலும்

இழிவாக

நடத்தப்பட்டவர்கள்

 

விதுரரும் யுயுத்சுவும்

தனக்கும்

தன்னுடைய

தாய்க்கும் நடந்த

கொடுமைகளுக்குப்

பழிவாங்க வேண்டும்

என்ற

காரணத்திற்காக

கௌவர் படையில்

ஒன்றாக

சேர்ந்திருக்கும்

ஷத்திரியர்களுக்கு

ஆதரவாக போர்

செய்யக் கூடாது

என்ற முடிவை

எடுத்தவர்கள்

 

விதுரர்

வில்லை ஒடித்து

போர் செய்ய

மாட்டேன் என்று

சொல்லி விட்டு

சென்று விட்டார்

ஆனால்

யுயுத்சுவோ

பாண்டவர்களுடன்

இணைந்து

போர் செய்ய

கிளம்பி விட்டான்

 

துச்சாதனன் :

யுயுத்சு பாண்டவர்கள்

பக்கம் சென்றதில்

இவ்வளவு

அர்த்தங்கள்

இருக்கும் போது

யுயுத்சு

நீதியின் பக்கம்

சென்றான்

நியாயத்தின் பக்கம்

சென்றான்

தர்மத்தை நிலை

நாட்ட சென்றான்

என்று விவரம்

அறியாமல்

பிதற்றிக் கொண்டு

இருக்கிறது இந்த

உலகம்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

No comments:

Post a Comment