ஜபம்-பதிவு-845
(சாவேயில்லாத
சிகண்டி-179)
பீஷ்மன் என்னை
சிறை எடுத்ததால்
காதலன் என்னை
புறக்கணித்தான்
என்னை ஏற்றுக்
கொள்ளவில்லை
பீஷ்மனுக்குப் பயந்து
பெற்றோர்கள் எனக்கு
ஆதரவு அளிக்கவில்லை
என்னுடைய வாழ்க்கை
பாதிக்கப்பட்டதுக்கு
காரணமான
பீஷ்மனை திருமணம்
செய்து கொள்ளச்
சொன்னேன்
மறுத்து விட்டான்
என்னுடைய வாழ்க்கை
பாதிக்கப்பட்டதற்கு
காரணமான பீஷ்மனைக்
கொல்வதற்காக முடிவு
எடுத்து சிவனை
நோக்கித் தவம்
இருந்தேன்
இந்தப் பிறவியில்
உன்னால் பீஷ்மனைக்
கொல்ல முடியாது
அடுத்தப் பிறவியில்
தான் பீஷ்மனைக்
கொல்ல முடியும்
என்று சிவன் எனக்கு
வரத்தைத் தந்ததால்
பீஷ்மனைக்
கொல்ல முடியாத
இந்தப் பிறவி
எனக்கு வேண்டாம்
என்று நெருப்பில்
இறங்கி என்னை
மாய்த்துக் கொண்டேன்
இந்தப் பிறவியில்
பாஞ்சால நாட்டை
ஆளும் துருபதனின்
மகளாக
சிகண்டினியாகப்
பிறந்தேன்
பெண்ணிலிருந்து
ஆணாக மாறினேன்
சிகண்டினியிலிருந்து
சிகண்டியாக
மாறினேன்
பீஷ்மனைக்
கொல்வதற்காகவே
பிறந்திருக்கிறேன்
இப்போது புரிகிறதா
என்னைத் தவிர
பீஷ்மனை
இந்த உலகத்தில்
உள்ள வேறு யாராலும்
கொல்ல முடியாது
என்று
யுதிஷ்டிரன் :
இதை ஏன்
எங்களிடம் முன்பே
சொல்லவில்லை
நிறைய இழப்புகளைத்
தடுத்து இருக்கலாமே
சிகண்டி :
என்னிடம் யாரும்
கேட்கவேயில்லையே
யுதிஷ்டிரன் :
கேட்டால் தான்
சொல்வாயா
சிகண்டி :
பதில் வேண்டும்
என்றால்
கேள்வி கேட்கப்படத்
தானே வேண்டும்
யுதிஷ்டிரன் :
போரில் பீஷ்மரைக்
கொல்வதற்கு ஏதேனும்
முயற்சி செய்தாயா
சிகண்டி :
கடந்த ஒன்பது
நாட்களாக பீஷ்மனைக்
கொல்வதற்கான
அனைத்து
முயற்சிகளையும்
எடுத்துக் கொண்டு
தான் இருக்கிறேன்
என்னால் அவரை
நெருங்கவே முடியவில்லை
யுதிஷ்டிரன் :
நாளை பீஷ்மரை
உன்னால் வீழ்த்த முடியுமா
சிகண்டி :
வீழ்த்த முடியும்
நான் சொல்வதை
நீங்கள் செய்தால்
யுதிஷ்டிரன் :
நாங்கள் என்ன
செய்ய வேண்டும்
சிகண்டி :
நான் பீஷ்மரை
நெருங்குவதற்கு வழி
ஏற்படுத்தித் தர வேண்டும்
நான் பீஷ்மருடன்
போரிடும் போது
வேறு யாரும்
இடையில் வந்து
இடைஞ்சல் செய்யாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்
யுதிஷ்டிரன் :
நாளை அர்ஜுனன்
உன்னுடன் உன்னுடைய
தேரில் ஏறி வருவான்
சிகண்டி :
இது தவறில்லையா
சகாதேவன் :
தவறானவர்களுக்கு எதிராக
தவறைச் செய்தால்
தவறில்லை
அப்படி செய்யப்படும்
எந்தத் தவறும்
சரியானதாகத் தான்
இருக்கும்
என்று நீதி நூல்கள்
சொல்கின்றன
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----11-08-2022
-----வியாழக் கிழமை
/////////////////////////////////////////////////
No comments:
Post a Comment