August 11, 2022

ஜபம்-பதிவு-846 (சாவேயில்லாத சிகண்டி-180)

 ஜபம்-பதிவு-846

(சாவேயில்லாத

சிகண்டி-180)

 

யுதிஷ்டிரன் :

அர்ஜுனன் உன்னுடன்

உன்னுடைய தேரில் ஏறி

வருவதில் உனக்கு

ஆட்சேபனையேதும்

இல்லையே

 

சிகண்டி :

ஆட்சேபனை இருக்கிறது

 

யுதிஷ்டிரன் :

எதற்காக ஆட்சேபனை

செய்கிறாய்

 

சிகண்டி :

என்னுடைய தேரில்

அர்ஜுனன் ஏறிக்கொள்ள

வேண்டாம் என்கிறேன்

அர்ஜுனனுடைய தேரில்

நான் ஏறிக்கொள்கிறேன்

என்கிறேன்

 

தேரோட்டியாக

கிருஷ்ணரே வர

வேண்டும் என்கிறேன்

 

கிருஷ்ணன் :

நீ செய்யும் தவறில்

என்னை ஏன்

சேர்த்துக் கொள்கிறாய்

 

சிகண்டி :

குருக்ஷேத்திரத்தில்

இருப்பவர்களில்

இரண்டே இரண்டு

பேர் தான்

சிறந்த தேரோட்டிகள்

ஒன்று கிருஷ்ணன்

இரண்டு சல்லியன்

 

சல்லியன் கௌரவர்கள்

பக்கத்தில் இருக்கிறார்

 

அதனால் தான்

நான் கிருஷ்ணரை

எனக்கு தேரோட்டியாக

வரச் சொல்கிறேன்

 

கிருஷ்ணன் :

சிகண்டி

உனக்கும் நான்

தான் தேரோட்டியா

 

உனக்கு நான்

தேரோட்ட வேண்டுமா

 

சிகண்டி :

உலகத்திலேயே சிறந்த

வில் வீரனான

அர்ஜுனனுக்குத் தான்

தேரோட்டுவீர்களா

 

எனக்காகத்

தேரோட்ட மாட்டீர்களா

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறிய

மாற்றுப் பாலினமான

எனக்கு

தேரோட்ட வேண்டுமா

என்று நினைக்கிறீர்களா

 

எனக்குத் தேரோட்டுவதை

இழிவாகக் கருதுகிறீர்களா

 

அறிவு அழகு

திறமை இருந்தும்

மாற்றுப் பாலினமாக

இருக்கும் எங்களை

மனிதர்களில்

ஒருவராகவே

ஏற்றுக் கொள்ள

இந்த மக்கள்

மறுக்கிறார்கள் என்றால்

கடவுளாகிய

நீயுமா எங்களை

ஏற்றுக் கொள்ள

மறுக்கிறாய்

 

மனிதர்கள் எங்களை

ஏற்றுக் கொள்ள

மறுத்தாலும்

கடவுளாக இருக்கும் நீ

எங்களைக்

காப்பாற்றுவாய்

என்று நம்பித் தானே

உங்களை நாங்கள்

வணங்கிக்

கொண்டிருக்கிறோம்

 

மனிதர்கள் எங்களைக்

கைவிட்டாலும்

கடவுளாக இருந்து

காப்பாற்ற வேண்டிய

நீயே எங்களை

கைவிட்டால் எப்படி

 

பாண்டவர்கள் போரில்

வெற்றி பெற வேண்டும்

என்பதற்காக

தன்னுடைய

தலையைத்

தானே வெட்டி

காளிக்குப் படைத்து

களப்பலியான

அரவானுக்காக

ஆணிலிரு;ந்து

பெண்ணாக

திருநங்கையாக

மாறினாயே

 

பெண்ணிலிருந்து

ஆணாக மாறிய

எனக்காகத்

தேரோட்ட மாட்டாயா

 

பீஷ்மனைக்

கொல்வதற்கு

எனக்கு வழியை

ஏற்படுத்தித்

தர மாட்டாயா

 

என்னுடைய சபதத்தை

நிறைவேற்ற

உதவ மாட்டாயா

 

போன ஜென்மத்துப்

பகையை இந்த

ஜென்மத்துடன் முடித்து

வைக்க மாட்டாயா

 

கிருஷ்ணன் :

சிகண்டியே

ஆண் பெண்

மாற்றுப் பாலினம்

என்ற வேறுபாடும்

உயர்ந்தவர் தாழ்ந்தவர்

என்ற பிரிவும்

நல்லவர் கெட்டவர்

என்ற பாகுபாடும்

எனக்குக் கிடையாது

 

என்னை நம்பி

பக்தியுடன்

வணங்குகிறவர்களுக்கு

அவர்களுடைய

கர்மவினைகளுக்கு ஏற்ப

அருளைக்

கொடுப்பவன் நான்

 

என்னையே நம்பி

சரணாகதி

அடைந்தவர்களுக்கு

அவர்களுடைய கர்ம

வினைகளைக் கடந்து

அருளைக்

கொடுப்பவன் நான்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

 

No comments:

Post a Comment