August 11, 2022

ஜபம்-பதிவு-853 (சாவேயில்லாத சிகண்டி-187)

 ஜபம்-பதிவு-853

(சாவேயில்லாத

சிகண்டி-187)

 

பீஷ்மனை

அவமானப்படுத்தும்

வகையில்

எழுப்பப்படும்

எந்த ஒரு கோஷமும்

அந்த வீரனின்

வீரத்தை கொச்சைப்

படுத்துவது போல்

ஆகிவிடும்

அதை நான்

விரும்பவில்லை

 

பீஷ்மர் என்ற மிகச்

சிறந்த வீரனுக்கு

உரிய

மரியாதையைக்

கொடுங்கள்

 

கௌரவர்கள்

எழுப்பும்

பீஷ்மர் வாழ்க

என்ற கோஷத்தை

மட்டும் எழுப்புங்கள்

அது தான்

வீழ்த்தப்பட்டு

கிடக்கும் ஒரு

வீரனுக்கு

நாம் செய்யும்

மரியாதை

 

உலகத்திலேயே

சிறந்த வீரனை

ஈடு இணை

சொல்ல முடியாத

வீரனை

எக்காலத்திலும்

காண முடியாத

வீரனை

பெருமைப்படுத்துங்கள்

 

மாபெரும் சகாப்தத்தை

படைத்திருக்கும்

பீஷ்மர் என்ற அந்த

மாபெரும் மனிதனின்

மாபெரும் ஆற்றலை

மாபெரும் வீரத்தை

மாபெரும் தியாகத்தை

மாபெரும் திறமையை

மாபெரும் அறிவை

வாழ்த்துங்கள்

 

நான் சொல்வதை

உடனே

நிறைவேற்றுங்கள்
பரந்தாமா

 

ஒரு வீரனைப்

பெருமைப்படுத்துங்கள்

 

(கிருஷ்ணன்

ஒருவரை அழைத்து

பேசுகிறார்

சிறிது நேரத்தில்

பாண்டவர் படையில்

உள்ளவர்களும்

பீஷ்மர் வாழ்க என்ற

கோஷத்தை எழுப்பினர்

 

கௌரவர் படையில்

உள்ளவர்களும்

பாண்டவர் படையில்

உள்ளவர்களும்

எழுப்பிய

பீஷ்மர் வாழ்க

என்ற கோஷம்

அந்த குருக்ஷேத்திரம்

முழுவதும்

எதிரொலித்தது

 

அந்த கோஷத்தைக்

கேட்ட பிறகு

அந்த இடத்தை விட்டு

நகர்ந்து கொண்டிருந்த

சிகண்டியைப் பார்த்து

கிருஷ்ணன்

பேசத் தொடங்கினார்

 

கிருஷ்ணன் :

சிகண்டி

உன்னைப் புரிந்து

கொள்ளவே

என்னால்

முடியவில்லை

 

(சிகண்டி எதுவும்

சொல்லாமல்

நடந்து சென்று

கொண்டிருந்தான்

 

பீஷ்மர் வீழ்ந்து

கிடந்த இடத்தைச்

சுற்றி கௌரவர்கள்

பாண்டவர்கள்

அனைவரும்

கண்ணீர் வடித்தபடி

நின்று கொண்டு

இருந்தனர்

 

குருக்ஷேத்திரத்தில்

இரத்தக் கடலுக்கு

பதிலாக கண்ணீர்க்

கடலே ஓடியது

 

இந்தச் சிறப்பு

குருக்ஷேத்திரத்தில்

பீஷ்மருக்கு மட்டுமே

கிடைத்தது

 

அந்த இடத்தில்

இல்லாத ஒரே

ஒருவர் சிகண்டி

மட்டுமே

 

சிகண்டி

குருக்ஷேத்திரத்தை

விட்டு விலகி

சென்று விட்டான்)

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

No comments:

Post a Comment