ஜபம்-பதிவு-854
(சாவேயில்லாத
சிகண்டி-188)
பீஷ்மர்
வீழ்த்தப்பட்டு
அம்புப்
படுக்கையில்
படுத்துக்
கொண்டிருந்தார்.
அவரை
ஒவ்வொருவராகப்
பார்த்து விட்டு
சென்று
கொண்டிருந்தனர்
பீஷ்மரை சிகண்டி
தனிமையில்
சந்தித்துப்
பேசினான்
பீஷ்மர் :
நான் இறந்து
விட்டேனா
என்பதை
உறுதி செய்ய
வந்தாயா
சிகண்டி :
சிகண்டியின்
வில்லிலிருந்து
ஒரு அம்பு
புறப்பட்டு அது
ஒருவருடைய
நெஞ்சைத்
துளைத்து
விட்டால்
அவருக்கு
மரணம்
என்பது
நிச்சயம் என்பது
எனக்குத் தெரியும்
அதை உறுதி
செய்ய வேண்டிய
அவசியம் இல்லை
பீஷ்மர் :
பிறகு எதற்காக
வந்திருக்கிறாய்
சிகண்டி :
இறுதி அஞ்சலி
செலுத்துவதற்காக
வந்திருக்கிறேன்
பீஷ்மர் :
இறந்த பிறகு
அல்லவா
இறுதி அஞ்சலி
செலுத்துவார்கள்
சிகண்டி :
நீ இறந்த பிறகு
உனக்கு
இறுதி அஞ்சலி
செலுத்தினால்
உனக்குத்
தெரியாது அல்லவா
அதனால் நீ
உயிரோடு
இருக்கும் போதே
இறுதி அஞ்சலி
செலுத்தலாம்
என்று வந்தேன்
பீஷ்மர் :
அம்பையே
நான் என்ன
தவறு
செய்தேன்
என்னைப் பழிவாங்க
வேண்டும் என்று
ஜென்மங்களைக்
கடந்து
வந்திருக்கிறாய்
சிகண்டி :
தவறைச்
செய்தவர்களுக்கு
தாங்கள் என்ன
தவறு செய்தோம்
என்று தெரியாது
தவறால்
பாதிக்கப்பட்டவர்களுக்குத்
தான் அதனுடைய
வலி தெரியும்
பீஷ்மர் :
அம்பையே
உன்னுடைய
வாழ்க்கை
பாதிக்கப்பட்டதற்கு
நான் காரணம்
கிடையாது
உன்னுடைய
வாழ்க்கையைப்
பாழாக்க வேண்டும்
என்றுநான்
தெரிந்து
எந்த ஒரு
செயலையும்
செய்யவில்லை
நான் செய்த
செயலால் உன்
வாழ்க்கை
பாதிக்கப்பட்டது
தெரியாமல்
நடந்தது
தெரியாமல்
நடந்த தவறுக்கு
நான் எப்படி
பொறுப்பாக
முடியும்
சிகண்டி :
தெரிந்து
தவறைச் செய்தாலும்
தெரியாமல்
தவறைச் செய்தாலும்
செய்த தவறுக்கு
பாவம் என்பது
உண்டாகத் தான்
செய்யும்
உண்டான
பாவத்திற்குரிய
தண்டனையை
அனுபவித்துத்
தான் ஆக
வேண்டும்
என்பதற்கு
வீழ்ந்து கிடக்கும்
நீயே சாட்சி
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----16-08-2022
-----செவ்வாய்க் கிழமை
/////////////////////////////////////////////////
No comments:
Post a Comment