ஜபம்-பதிவு-859
(சாவேயில்லாத
சிகண்டி-193)
சிகண்டி :
இரவு நேரத்தில்
உறங்கிக்
கொண்டிருக்கும்
ஆண்கள் பெண்கள்
சிறுவர்கள் சிறுமிகள்
என்ற பேதம்
இல்லாமல்
அனைவர்
மீதும்
கொலைவெறி
தாக்குதல் நடத்தி
அனைவரையும்
கொன்று குவித்துக்
கொண்டிருக்கிறாயே
நீயெல்லாம்
ஒரு வீரனா
போர்வீரர்களை
போர்க்களத்தில் தான்
போரிட்டுக் கொல்ல
வேண்டும்.
உறங்கிக்
கொண்டிருக்கும்
போர் வீரர்களை
கொல்லக்கூடாது
என்பது கூட
உனக்குத் தெரியாதா
பிராமணனாக
இருந்து கொண்டு
இப்படிப்பட்ட ஒரு
மனிதத்தன்மையற்ற
செயலைச் செய்து
கொண்டிருக்கிறாயே
இதைத் தான் நீ
கற்ற நீதி நூல்கள்
உனக்குச் சொல்லிக்
கொடுத்திருக்கிறதா
உறங்கிக்
கொண்டிருப்பவர்களைக்
கொல்வது தான்
வீரம் என்று
சாஸ்திர
நூல்களிலிருந்து நீ
கற்றுக் கொண்டாயா
பரசுராமர் போன்ற
வீரம் நிறைந்த
பிராமணர்கள்
வாழ்ந்த நாட்டில்
பிராமணர்களின்
பரம்பரையில்
ஒரு அவமானச்
சின்னமாக நீ
பிறப்பெடுத்திருக்கிறாய்
பிராமணர்களுக்கு
களங்கத்தை
ஏற்படுத்தும்
வகையில் நீ
பிறப்பெடுத்திருக்கிறாய்
பிராமணர்களை
இழிவு படுத்தும்
வகையில் நீ
பிறப்பெடுத்திருக்கிறாய்
கோழைத் தனமாக
செயல்பட்டு
பிராமணர்களின்
பெயரையே
கெடுத்திருக்கிறாய்
வீரத்துடன்
போர்க்களத்தில்
போரிட்டு மடிந்த
உன் தந்தை
உறங்கிக்
கொண்டிருப்பவர்களைக்
கொல்வது தான்
வீரம் என்று
உனக்குச் சொல்லிக்
கொடுத்தாரா
போர்க்கலைகளைக்
கற்றுக் கொண்டவன்
எந்தக் காலத்திலும்
எந்த நேரத்திலும்
எந்த இடத்திலும்
தான் கற்றுக் கொண்ட
போர்க் கலையை
தவறான விதத்தில்
பயன்படுத்தக் கூடாது
நேர்மையாக
மட்டுமே
பயன்படுத்த
வேண்டும்
என்பதை
உன்னுடைய தந்தை
துரோணர் உனக்குச்
சொல்லித்
தரவில்லையா
அஸ்வத்தாமன் :
என் தந்தை
எனக்கு மட்டுமா
சொல்லிக் கொடுத்தார்
பாண்டவர்களுக்கும்
தானே சொல்லிக்
கொடுத்தார்
அவர்கள்
நேர்மையாகவா
செயல்பட்டார்கள்
என் தந்தைக்கு
எதிராக
நேர்மையற்றுத் தானே
செயல்பட்டார்கள்
உண்மையை
மட்டுமே பேசுவான்
பொய்யே பேச
மாட்டான்என்று
உலகமே நம்பிக்
கொண்டிருக்கும்
யுதிஷ்டிரன்
என் தந்தை
துரோணரிடம்
அஸ்வத்தாமன்
இறந்து விட்டான்
என்று பொய்
சொல்லி என்
தந்தை துரோணர்
இறப்பதற்குக்
காரணமாக
இருந்தானே
அந்த யுதிஷ்டிரன்
அவன் நேர்மையாகவா
செயல்பட்டான்
சல்லியனை
பின்னாலிருந்து
கோழைத்தனமாக
எறி வேலை
எறிந்துகொன்றானே
அந்த
யுதிஷ்டிரன்
அவன்
நேர்மையாகவா
செயல்பட்டான்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----21-08-2022
-----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////////////////////
No comments:
Post a Comment