August 24, 2022

ஜபம்-பதிவு-860 (சாவேயில்லாத சிகண்டி-194)

 ஜபம்-பதிவு-860

(சாவேயில்லாத

சிகண்டி-194)

 

கதாயுதப் போரில்

இடுப்புக்குக் கீழே

தொடையில்

அடிக்கக் கூடாது 

என்ற

விதிமுறைகளை மீறி

துரியோதனனை

இடுப்புக் கீழே

தொடையில்

அடித்து அவனை

வீழ்த்தினானே

அந்த பீமன்

அவன்

நேர்மையாகவா

செயல்பட்டான்

 

போர்

விதிமுறைகளைமீறி

துச்சாதனனின்

அடி வயிற்றில்

ஓங்கி மிதித்து

அவனுடைய கையை

அவனுடைய

தோளில்இருந்து

பிய்த்து எடுத்தும்

மற்றொரு கையை

வெட்டி விட்டும்

இதயத்தைக் கிழித்து

இரத்தத்தைக் குடித்தும்

துச்சாதனனைக்

கொன்றானே

அந்த பீமன்

அவன்

நேர்மையாகவா

செயல்பட்டான்

 

ஆயுதங்கள் ஏதும்

இல்லாமல்

நிராயுதபாணியாக

நின்று கொண்டு

சகதியில் சிக்கிய

தேரை மேலே

ஏற்றுவதற்கான

செயல்களைச் செய்து

கொண்டிருந்த

கர்ணன் மீது

அம்பு எய்தி

கொன்றானே

அந்த அர்ஜுனன்

அவன்

நேர்மையாகவா

செயல்பட்டான்

 

சூரியன்

அஸ்தமித்தபிறகு

துரியோதனனின்

தங்கை

துச்சலையின்

கணவன்

ஜெயத்ரதனை

கொன்று விட்டு

சூரியன்

அஸ்தமிக்கும் முன்பே

கொன்றேன்

என்று பொய்

சொன்னானே

அந்த அர்ஜுனன்

அவன்

நேர்மையாகவா

செயல்பட்டான்

 

சிகண்டி :

தர்மம் தழைத்தோங்க

வேண்டும் என்றால்

சில விஷயங்கள்

நடந்து தான்

ஆக வேண்டும்

அது தவிர்க்க

முடியாதது

 

அஸ்வத்தாமன் :

தர்மத்தைத்

தழைத்தோங்கச்

செய்யப்போவது யார்

 

சிகண்டி :

வேறுயார்

பாண்டவர்கள் தான்

 

அஸ்வத்தாமன் :

பாண்டவர்கள் என்ன

தர்மத்தைக் காக்கப்

பிறந்தவர்களா

 

தர்மம் என்ன

பாண்டவர்களின்

வீட்டுச் சொத்தா

 

பாண்டவர்களும்

அஸ்தினாபுரத்தின்

அரியணைக்காகத்தான்

போரிட்டார்கள்

கௌரவர்களும்

அஸ்தினாபுரத்தின்

அரியணைக்காகத் தான்

போரிட்டார்கள்

ஆனால்

பாண்டவர்களால்

மட்டும் எப்படி

தர்மத்தை

தழைத்தோங்கச்

செய்ய முடியும்

 

சிகண்டி :

பாண்டவர்கள்

அஸ்தினாபுரத்தின்

அரியணைக்காகப் போர்

செய்யவில்லை

திரௌபதிக்கு

நேர்ந்த

அவமானத்தைத்

துடைப்பதற்காகப்

போரிட்டார்கள்

 

குருக்ஷேத்திரப் போர்

திரௌபதிக்கு

நேர்ந்த

அவமானத்தை

துடைப்பதற்காகப்

பாண்டவர்களால்

நடத்தப்பட்டபோர்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

 

 

No comments:

Post a Comment