ஜபம்-பதிவு-864
(சாவேயில்லாத
சிகண்டி-198)
உயிர் உடலை
விட்டு கொஞ்சம்
கொஞ்சமாக சென்று
கொண்டிருக்கிறது
என்று தெரிந்த
பின்னும் சண்டை
போட்டுக்
கொண்டிருந்தான்
சிகண்டி
மரணமற்றவனான
அஸ்வத்தாமன்
தன்னுடைய
வாளை சிகண்டியின்
இதயத்தினுள்
ஆழமாகச்
செருகினான்
சிகண்டி இறந்து
விட்டான் என்பது
உறுதியாகத் தெரியும்
வரை தன்னுடைய
வாளால் சிகண்டியை
குத்திக் கொண்டே
இருந்தான்
அஸ்வத்தாமன்
பெண்ணிலிருந்து
ஆணாக மாறி
மாபெரும்
சரித்திரத்தைப்
படைத்த சிகண்டி
இறந்து விட்டான்
யாராலும்
செய்ய முடியாத
சாதனையைப்
படைத்த
சிகண்டி
இறந்து விட்டான்
உறங்கிக் கொண்டிருந்த
திருஷ்டத்யும்னன்
திரௌபதியின்
ஐந்து மகன்கள்
சிகண்டி மற்றும்
பலரை
அஸ்வத்தாமன்
கொன்று விட்டான்
என்ற செய்தி கேட்டு
பஞ்ச பாண்டவர்கள்,
கிருஷ்ணன்
ஆகியோர்
வருவதற்குள்
அனைத்தும்
முடிந்து விட்டது
அந்த இடமே
தீயினால் கருகி
பொட்டல் வெளியாக
மாறி
விட்டிருந்தது
பிணங்கள் குவிந்து
கிடந்தன
அழுகைக் குரல்
மட்டுமே எங்கும்
ஒலித்துக்
கொண்டிருந்தது
அஸ்வத்தாமனின்
கொலைவெறித்
தாக்குதலினால்
அந்த இடமே
போர்க்களம் போல்
காட்சியளித்துக்
கொண்டிருந்தது
சிகண்டியின் உடல்
மீது விறகுக்
கட்டைகளை
அடுக்கி வைத்து
எரிப்பதற்காக
கிருஷ்ணன்
காத்துக்
கொண்டிருந்த போது
பஞ்ச
பாண்டவர்களும்
அங்கு வந்து
சேர்ந்தனர்
பீமன் :
சிகண்டியின் மீது
ஏன் இவ்வளவு
அக்கறை
காட்டுகிறீர்கள்
தனிப்பட்ட
முறையில்
தாங்களே அவனுக்கு
மரியாதை
செலுத்துகிறீர்களே
அதற்குத்
தகுதியுடையவனா
அந்த சிகண்டி
கிருஷ்ணன் :
தனிப்பட்ட முறையில்
மரியாதை
செலுத்துவதற்கு
தகுதியுடையவன் தான்
அந்த சிகண்டி
தகுதியுடையவர்களுக்குரிய
மரியாதையை
நாம் செலுத்தாத
காரத்தினால் தான்
தகுதியற்றவர்கள்
இந்த உலகத்தில்
அதிக அளவில்
தோன்றி விட்டார்கள்
பீமன் :
தனிப்பட்ட மரியாதை
செலுத்தும் அளவிற்கு
சிகண்டி
அப்படி என்ன
செய்து விட்டான்
யாராலும் செய்ய
முடியாததையா
செய்து விட்டான்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----21-08-2022
-----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////////////////////
No comments:
Post a Comment