August 24, 2022

ஜபம்-பதிவு-855 (சாவேயில்லாத சிகண்டி-189)

 ஜபம்-பதிவு-855

(சாவேயில்லாத

சிகண்டி-189)

 

ஒரு பாவத்தைச்

செய்து விட்டு

அதிலிருந்து

யாரும்

தப்ப முடியாது

 

எவ்வளவு

காலமானாலும்

செய்த

பாவத்திற்குரிய

தண்டனையை

அனுபவித்துத் தான்

ஆக வேண்டும்

என்பதற்கு

வீழ்ந்து கிடக்கும்

நீயே சாட்சி

 

அறிவிற்

சிறந்தவராக

இருந்தாலும்

 

ஆளுமையில்

உயர்ந்தவராக

இருந்தாலும்

 

நல்லவராக

வாழ்பவராக

இருந்தாலும்

 

உழைப்புக்கு

உதாரணமாக

இருப்பவராக

இருந்தாலும்

 

உலகமே

போற்றக்

கூடியவராக

உயர்ந்த

குணங்களைக்

கொண்டவராக

இருந்தாலும்

 

யாராலும் வீழ்த்த

முடியாத சிறந்த

வீரராக

இருந்தாலும்

 

அனைவராலும்

போற்றி

வணங்கக்

கூடியவராக

இருந்தாலும்

 

யாரும் செய்ய

முடியாத

சாதனைகளைச்

செய்தவராக

இருந்தாலும்

 

தனக்காக

வாழாமல்

பிறருக்காக

வாழ்பவராக

இருந்தாலும்

 

செய்த

பாவத்திற்குரிய

தண்டனையை

அனுபவித்துத்

தான் ஆக

வேண்டும்

 

என்பதற்கு

வீழ்ந்து கிடக்கும்

நீயே சாட்சி

 

பீஷ்மர் :

அவரவர் செய்த

பாவத்திற்குரிய

தண்டனையை

அவரவர் தான்

அனுபவிக்க

வேண்டும்

என்றால்

செய்த

பாவத்திற்குரிய

தண்டனையை

நான் தான்

அனுபவிக்கப்

போகிறேனே

பிறகு எதற்காக

என்னை வீழ்தத

வேண்டும் என்று

பிறப்பெடுத்து

வந்திருக்கிறாய்

 

சிகண்டி :

நீ செய்த

பாவத்திற்குரிய

தண்டனையை

உனக்கு நான்

தானே வழங்க

வேண்டும்

 

அதற்காகத் தான்

பிறப்பெடுத்து

வந்திருக்கிறேன்

 

பீஷ்மர் :

என்னை

வீழ்த்துவது

ஒன்றையே

குறிக்கோளாகக்

கொண்டு

பிறப்பெடுத்து

வந்திருக்கிறாயே

எனக்காக

வாழாமல்

பிறக்காகவே

வாழ்ந்தேனே

அது தவறா

 

என் தந்தை

சந்தனு தாய்

சத்தியவதியை

திருமணம் செய்து

கொள்வதற்காக

பிரம்மச்சரியம்

விரதம்

மேற்கொண்டு

அனைத்தையும்

துறந்தேனே

அது தவறா

 

விசித்திர வீர்யனை

அரியணையில்

அமர வைத்து

ஆட்சி செய்ய

வைத்தேனே

அது தவறா

 

திருதராஷ்டிரனுக்கு

கண் தெரியாது

என்ற

காரணத்தினால்

பாண்டுவை

அரியணையில்

அமர வைத்து

நாட்டைக்

காப்பாற்றினேனே

அது தவறா

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----16-08-2022

-----செவ்வாய்க் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment