ஜபம்-பதிவு-856
(சாவேயில்லாத
சிகண்டி-190)
பாண்டு
இறந்த பிறகு
திருதராஷ்டிரனை
அரியணையில்
அமர வைத்து
அஸ்தினாபுரத்தை
அழிவிலிருந்து
மீட்டேனே
அது தவறா
யுதிஷ்டிரனை
இளவரசனாக்கி
முறைப்படி
அவனுக்கு கிடைக்க
வேண்டியதை
கிடைக்கும் படிச்
செய்தேனே
அது தவறா
அஸ்தினாபுரத்தை
இரண்டாகப்
பிரித்து
அஸ்தினாபுரத்தை
துரியோதனனுக்கும்
இந்திரப்
பிரஸ்தத்தை
யுதிஷ்டிரனுக்கும்
பிரித்துக் கொடுத்து
பகை மூளாமல்
பார்த்துக்
கொண்டேனே
அது தவறா
அன்று முதல்
இன்று வரை
அஸ்தினாபுரத்தின்
அரியணையை
பாதுகாக்கவே
என்னுடைய
வாழ்க்கையை
செலவிட்டேனே
அது தவறா
எனக்கென்று
தனிப்பட்ட
இன்பங்கள் கூட
இல்லாமல்
குடும்பம் என்ற
ஒன்றுஇல்லாமல்
சொந்தமாக வீடு
கூட இல்லாமல்
ஊசி முனை
நிலம் கூட
இல்லாமல்
செல்வங்கள்
எதுவும் இல்லாமல்
நாட்டுக்காகவும்
நாட்டு
மக்களுக்காகவும்
என்னுடைய
வாழ்க்கையையே
அர்ப்பணித்தேனே
அது தவறா
எனக்கென்று
சொந்தமாக
எந்த ஒன்றையும்
வைத்துக்
கொள்ளாமல்
சுயநலத்துடன்
வாழாமல்
பொது நலத்துடன்
பிறருக்காகவே
வாழ்ந்தேனே
அது தவறா
என் மேல்
என்ன
தவறு கண்டாய்
சிகண்டி :
தவறு தான்
நீ செய்த
அனைத்துமே
தவறு தான்
அன்பென்றால்
என்ன என்று
தெரியாதவர்களுக்காக
அன்பைக்
காட்டியிருக்கிறாய்
தியாகம் என்றால்
என்ன என்று
தெரியாதவர்களுக்காக
தியாகத்தைச்
செய்திருக்கிறாய்
உறவின் மதிப்பு
தெரியாதவர்களுடன்
உறவாடியிருக்கிறாய்
சுயநலத்துடன்
வாழ்ந்தவர்களுடன்
பொதுநலத்துடன்
வாழ்ந்து இருக்கிறாய்
தனது குடும்பம்
தனது பிள்ளைகள்
என்று
வாழ்ந்தவர்களுக்காக
பிரம்மச்சரியம் ஏற்று
அவர்களை வாழ
வைத்திருக்கிறாய்
உன்னைச் சார்ந்து
வாழ்ந்த
அனைவருமே
ஏதோ ஒரு
தேவைக்காக
உன்னுடன் வாழ்ந்து
இருக்கிறார்கள்
அவர்களது தேவை
முடிந்தவுடன்
நீ தேவையில்லை
என்று தூக்கி
எறிந்து விட்டார்கள்
எவைகளை எல்லாம்
வேண்டாம் என்று
நீ ஒதுக்கி
தள்ளி விட்டு
வாழ்ந்தாயோ
அவைகள் எல்லாம்
வேண்டும் என்று
நினைத்தவர்கள்
தானே
நீ வீழ்த்தப்பட்டு
இங்கே
கிடப்பதற்குக்
காரணமாக
இருந்திருக்கிறார்கள்
பீஷ்மர் :
பாண்டவர்களும்
கௌரவர்களும்
என்னைப் பார்த்து
கண்ணீர சிந்தி
வருத்தப்பட்டு
விட்டுத் தானே
சென்றனர்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----16-08-2022
-----செவ்வாய்க் கிழமை
/////////////////////////////////////////////////
No comments:
Post a Comment