August 24, 2022

ஜபம்-பதிவு-865 (சாவேயில்லாத சிகண்டி-199)

 ஜபம்-பதிவு-865

(சாவேயில்லாத

சிகண்டி-199)

 

கிருஷ்ணன் :

யாராலும் வீழ்த்த

முடியாத பீஷ்மரை

வீழ்த்தி இருக்கிறானே

அது ஒன்று

போதாதா

யாராலும் செய்ய

முடியாததைத் தான்

சிகண்டி செய்து

இருக்கிறான் என்று

 

பீமன் :

சென்ற பிறவியில்

அம்பையாகப் பிறந்து

சிவனிடம் வரம்

பெற்றதால் தான்

இந்தப் பிறவியில்

சிகண்டியாகி

பீஷ்மரை

வீழ்த்தியிருக்கிறான்

 

கிருஷ்ணன் :

சிவனிடம்வரம்

வாங்குவது

அவ்வளவு

எளிதான காரியம்

என்று

நினைத்தாயா பீமா

 

வாழ்க்கையில்

அனைத்தையும்

இழந்த பிறகு

இனி இழப்பதற்கு

எதுவும் இல்லை

என்ற நிலை

வந்த பிறகு

ஆன்மாவில்

உள்ள கர்மாக்கள்

அனைத்தும் கழிந்த

பிறகுதான் சிவன்

தோன்றுவார்

வரம் தருவார்

 

கர்மாக்கள்

கழிந்தால்

மட்டுமே

சிவன்

தோன்றுவார்

 

ஆன்மாவில் பதிந்துள்ள

கர்மாக்களைக் கழித்து

சிவனை நேரில்

வரவழைத்து

வரத்தைப்

பெறுவதற்கு

அம்பை எவ்வளவு

கஷ்டப்பட்டிருக்க

வேண்டும்எவ்வளவு

அவமானங்களை

பார்த்திருக்க வேண்டும்

எவ்வளவு

அசிங்கங்களைச்

சந்தித்திருக்க வேண்டும்

எவ்வளவு

இழிவுகளை

ஏற்றிருக்க வேண்டும்

எவ்வளவு

இழப்புகளை

கடந்திருக்க வேண்டும்

எவ்வளவு

இன்பங்களை

இழந்திருக்க வேண்டும்

 

அத்தனையும்

அனுபவித்து

விட்டுத் தான்

அம்பை தன்னுடைய

ஆன்மாவில் உள்ள

கர்மாக்களைக்

கழித்து

சிவனை நேரில்

வரவழைத்து

பீஷ்மரைக்

கொல்வதற்கான

வரத்தை சிவனிடம்

இருந்து பெற்றாள்

 

சிவனிடம்

இருந்து வரத்தை

அம்பை

எளிதாக பெற்று

விடவில்லை

 

பேராடித் தான்

பெற்றாள்

 

பீமன் :

இவ்வளவு

கஷ்டப்பட்ட அம்பை

சிவனிடம் முக்தியைக்

கேட்டிருக்கலாமே

 

ஏன் தாத்தா பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்ற வரத்தைக்

கேட்டாள்

அம்பை

 

கிருஷ்ணன் :

அம்பை மட்டும்

பீஷ்மரைக்கொல்ல

வேண்டும் என்ற

வரத்தைக் கேட்காமல்

முக்தி வேண்டும்

என்ற வரத்தைக்

கேட்டிருந்தால்

குருக்ஷேத்திரப்போரில்

பீஷ்மரை யாராலும்

வீழ்த்தியிருக்க

முடியாது

 

பாண்டவர்களால்

குருக்ஷேத்திரப்

போரில்

வெற்றி பெற்று

இருக்கவே முடியாது

 

பாண்டவர்கள்

குருக்ஷேத்திரப்

போரில்

வெற்றி

பெறுவதற்கு

முக்கிய

காரணமாக

இருந்ததே

அம்பை தான்

 

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment