ஜபம்-பதிவு-858
(சாவேயில்லாத
சிகண்டி-192)
கௌரவர்
படைத் தளபதியாக
இருந்த பீஷ்மர்
வீழ்த்தப்பட்ட பிறகு,
கௌரவர்களின்
படைத் தளபதிகளாக
அடுத்தடுத்து
பொறுப்பேற்றுக்
கொண்ட
துரோணர்
கர்ணன்
சல்லியன்
ஆகியோர்
ஒருவர் பின்
ஒருவராக
கொல்லப்பட்ட பிறகு
பீமன்
துரியோதனனின்
இடுப்புக்குக் கீழே
தாக்கி அவனுடைய
தொடையை
கோழைத்தனமாகப்
பிளந்து இழிவான
செயலைச் செய்து
துரியோதனனை
நிலத்தில் விழச்
செய்த பிறகு
நிலத்தில் விழுந்த
நிலையில்இருந்த
துரியோதனன்
துரோணரின்மகன்
அஸ்வத்தாமனை
கௌரவப்படைக்குத்
தளபதியாக்கினான்
அஸ்வத்தாமன்
கௌரவப் படைக்கு
தளபதியாக
நியமிக்கப்பட்ட போது
கௌரவப் படையில்
இருந்தவர்கள்
மூன்றே மூன்று
பேர்கள் தான்
அஸ்வத்தாமன்
கிருபர்
கிருதவர்மன்
ஆகியோர் மட்டுமே
இவர்கள் மூவரும்
பாண்டவர்கள்
முகாமை
அடைந்தனர்
அஸ்வத்தாமன்
பாண்டவர்கள்
முகாமிற்கு
உள்ளே நுழைந்து
ஒவ்வொரு
கூடாரத்திலும்
உறங்கிக்
கொண்டிருந்தவர்களை
வெட்டி கொன்றான்
முகாமின்
வெளியில் நின்று
கொண்டிருந்த
கிருபரும்
கிருதவர்மனும்
சாவுக்குப் பயந்து
உயிரைக்
காப்பாற்றிக்
கொள்வதற்காக
பாண்டவர்
முகாமில் இருந்து
தப்பியோடி
வந்தவர்களை
கொன்று குவித்துக்
கொண்டிருந்தனர்
ஒரு கூடாரத்தில்
உறங்கிக்
கொண்டிருந்த
திருஷ்டத்யும்னனின்
அடி வயிற்றில்
எட்டி உதைத்து
மூக்கை அறுத்து
விரல்களை பின்னோக்கி
வளைத்து
கொடுமையான
சித்திரவதைகளைச்
செய்து
கழுத்தை முறித்துக்
கொன்று தன்
தந்தை துரோணரின்
இறப்பிற்குப்பழி
வாங்கினான்
அஸ்வத்தாமன்
உயிருக்குப்
பயந்து ஓடிய
திரௌபதியின்
ஐந்து
மகன்களையும்
ஓட ஓட விரட்டி
கொஞ்சம்
கொஞ்சமாக
வெட்டி கதறக்
கதறக் கொன்றான்
அஸ்வத்தாமன்
அந்தக் கூடாரத்தில்
பஞ்ச பாண்டவர்கள்
கிருஷ்ணன்,
சாத்யகி
ஆகியோர் வெளியே
செல்லாமல்
இருந்திருந்திருந்தால்
அஸ்வத்தாமன்
நடத்திய
கொலை வெறித்
தாக்குதலில்
அவர்களும்
இறந்திருப்பார்கள்
என்று சொல்லத்தக்க
வகையில் இருந்தது
அஸ்வத்தாமனின்
செயல்
அஸ்வத்தாமன்
பாண்டவர்கள்
முகாமில்
இருந்தவர்களை
கொலை வெறித்
தாக்குதல் நடத்தி
வெறித்தனமாக
கொன்று குவித்துக்
கொண்டுஇருந்தான்
தான் தங்கியிருந்த
கூடாரத்தை விட்டு
வெளியே வந்த
சிகண்டி
அஸ்வத்தாமன்
நடத்திக்
கொண்டிருக்கும்
மனிதத் தன்மையற்ற
செயலைக் கண்டு
கோபமுற்றான்
அவனுடைய
கண்கள் சிவந்தன
கோபத்தின் உச்சத்தில்
சென்ற சிகண்டி
அஸ்வத்தாமனை
நோக்கிபேசத்
தொடங்கினான்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----21-08-2022
-----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////////////////////
No comments:
Post a Comment