ஜபம்-பதிவு-857
(சாவேயில்லாத
சிகண்டி-191)
சிகண்டி :
உன்னைச் சுற்றி
இருப்பவர்களைப்
பற்றி
நான் புரிந்து
கொண்ட
அளவிற்குக் கூட
நீபுரிந்து
கொள்ளவில்லையே
உன்னைப் பார்த்து
கண்ணீர் விட்டது
உன் மேல் உள்ள
அன்பாலோ
நீ வீழ்ந்து கிடக்கும்
நிலையைப்
பார்த்தோ அல்ல
ஒவ்வொருவருடைய
கண்ணிலிருந்தும்
சிந்திய
கண்ணீருக்கும்
பின்னால் ஒரு
காரணம் மறைந்து
இருக்கிறது
காரணத்தோடு தான்
அனைவரும்
அழுது விட்டுச்
சென்றிருக்கின்றனர்
துரியோதனன்
கண்ணீர் சிந்தியது
எதற்காக என்றால்
கௌரப்படையை
வழிநடத்திச் சென்று
பாண்டவர்களை
எதிர்ப்பதற்கு
மரணமற்ற ஒருவர்
தங்களைப் போல்
கிடைக்க
மாட்டாரே என்ற
காரணத்தினால்
தான்
பாண்டவர்கள்
அழுதது
எதற்காக என்றால்
தாத்தா என்று
கூட பார்க்காமல்
நாட்டுக்காக
ஆசைப்பட்டு
உங்களை வீழ்த்தி
விட்டோமே
என்றகுற்ற
உணர்ச்சியினால்
தான்
பாண்டவர்களும்
பாண்டவர்களைச்
சார்ந்தவர்களும்
கௌரவர்களும்
கௌரவர்களைச்
சார்ந்தவர்களும்
அழுதார்கள்
என்றால்
எல்லோரும்
சுயநலத்துடன்
தான் அழுதார்கள்
யாரும் உனக்காக
அழவில்லை
அவர்களுக்காக
நீ வாழ்ந்து தான்
ஆக வேண்டுமா
பீஷ்மர் :
வாழ்ந்து தான்
ஆக வேண்டும்
எனக்காக அல்ல
இந்த
நாட்டுக்காக நான்
வாழ்ந்து தான்
ஆக வேண்டும்
உயிரோடு
இருந்து தான்
ஆக வேண்டும்
அஸ்தினாபுரத்தின்
அரியணை
பாதுகாப்பாக
இருக்கிறது
என்பதை நான்
பார்க்கும் வரை
மரணம் என்னை
நெருங்கவும்
முடியாது
தீண்டவும்
முடியாது
தழுவவும்
முடியாது
என்னுடைய உயிர்
என்னுடைய
உடலை விட்டு
பிரிந்து செல்லவும்
முடியாது
இந்த உலகத்திற்கு
நீ வந்த
வேலையை
முடித்து விட்டாய்
அதனால்
நீ எங்கு
வேண்டுமானாலும்
செல்லலாம்
ஆனால் நான்
இந்தஉலகத்திற்கு
வந்த வேலையை
முடிக்கவில்லை
அதனால்
என்னால் இந்த
உலகத்தை
விட்டு செல்ல
முடியாது
சிகண்டி :
நீ எங்கேயும்
செல்ல வேண்டாம்
இங்கேயே இரு
நான் செல்கிறேன்
(என்று
சொல்லி விட்டு
சிகண்டி செல்ல
முற்பட்ட போது
பீஷ்மர் அம்பையே
நில் என்று
கூப்பிட்ட
குரலைக் கேட்டு
சிகண்டி
நின்றான்)
பீஷ்மர் :
அம்பையே
என்னுடைய
ஒரே ஒரு
கேள்விக்கு பதிலை
மட்டும் சொல்லி
விட்டு செல்
உன்னுடைய
கோபம் தணிந்ததா
சிகண்டி :
(சிகண்டிக்குள்
இருக்கும்அம்பை
அமைதியாகச்
சொன்னாள்)
அது
உங்களுக்கே
தெரியும்
(என்று சொல்லி
விட்டு சிகண்டி
அந்த இடத்தை
விட்டு சென்று
விட்டாள்
இது தான் அவர்கள்
இருவரும் கடைசியாக
சந்தித்தது)
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----16-08-2022
-----செவ்வாய்க் கிழமை
No comments:
Post a Comment