August 24, 2022

ஜபம்-பதிவு-866 (சாவேயில்லாத சிகண்டி-200)

 ஜபம்-பதிவு-866

(சாவேயில்லாத

சிகண்டி-200)

 

அம்பை மட்டும்

இல்லாவிட்டால்

பீஷ்மரைக் கொல்ல

வேண்டும் என்ற

வரத்தை சிவனிடம்

இருந்து அம்பை

மட்டும்

பெற்றிருக்காவிட்டால்

பாண்டவர்களால்

குருக்ஷேத்திரப்

போரில்

வெற்றி

பெற்றிருக்கவே

முடியாது

 

வாழ்க்கையில்

எதிர்ப்பட்ட

கஷ்டங்களினால்

பாதிக்கப்பட்டு

மேற்கொண்ட

கொள்கையைத்

துறந்து விட்டு

வாழ்பவர்கள் மத்தியில்

எவ்வளவோ கஷ்டங்கள்

வாழ்க்கையில்

எதிர்ப்பட்ட போதும்

அந்த கஷ்டங்களை

எல்லாம் எதிர்த்து

நின்று போராடி

வெற்றி பெற்று

தன்னுடைய

கொள்கையான

பீஷ்மரைக் கொல்ல

வேண்டும் என்பதையே

சிவனிடம் இருந்து

வரமாகக் கேட்டுப்

பெற்றவள் தான்

அம்பை

 

உலகத்திலேயே

மிக உயர்ந்த

விஷயமான

முக்தியை நோக்கி

இந்த உலகமே

ஓடிக்கொண்டிருக்கும்

வேளையில்

தனக்கு வரமாக

அந்த முக்தியே

கிடைக்கவிருந்தும்

அதை ஏற்றுக்

கொள்ளாமல்

வேண்டாம் என்று

சொல்லி விட்டு

தன்னுடைய

கொள்கையான

பீஷ்மரைக் கொல்ல

வேண்டும் என்பதையே

சிவனிடம் இருந்து

வரமாகக் கேட்டுப்

பெற்றவள் தான்

அம்பை

 

பீஷ்மரைக்கொல்ல

வேண்டும் என்ற

அம்பையின்

கொள்கையின்

முன்னால்

சிவனால்

அளிக்கப்படும்

முக்தி ஒன்றும்

அம்பைக்குப்

பெரியதாகத்

தெரியவில்லை

 

கொள்கையை

தங்கள்

வாழ்க்கையில்

மேற்கொண்டவர்கள்

எப்படி இருக்க

வேண்டும் என்பதை

தன்னுடைய

வாழ்க்கையில்

வாழ்ந்து காட்டி

விட்டு சென்று

இருப்பவள் தான்

அம்பை

 

தனக்கு முக்தி

வேண்டாம்

தன்னுடைய

கொள்கையான

பீஷ்மரை கொல்லும்

வரம் தான்

வேண்டும் என்று

சிவனிடம்

வரம் பெற்று

அதை நிறைவேற்ற

வேண்டும் என்பதற்காக

அதற்காகவே ஒரு

பிறப்பெடுத்து

பெண்ணிலிருந்து

ஆணாக

சிகண்டியாக மாறி

பீஷ்மரை வீழ்த்தி

தன்னுடைய

எண்ணத்தை

நிறைவேற்றியவள்

தான் அம்பை

 

அம்பையின்

வாழ்க்கையில்

இருந்துநாம் கற்றுக்

கொள்ள வேண்டியது

நிறைய இருக்கிறது

 

அம்பையின்

வாழ்க்கையை

உற்று நோக்கினால்

நாம் நிறைய

விஷயங்களைத்

தெரிந்து கொள்ளலாம்

நிறைய உண்மைகளை

அறிந்து கொள்ளலாம்

நிறைய நீதிகளைத்

தெரிந்து கொள்ளலாம்

நிறைய தர்மங்களை

உணர்ந்து கொள்ளலாம்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----21-08-2022

-----ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment