August 11, 2022

ஜபம்-பதிவு-848 (சாவேயில்லாத சிகண்டி-182)

 ஜபம்-பதிவு-848

(சாவேயில்லாத

சிகண்டி-182)

 

யுதிஷ்டிரன் :

சிகண்டி

நாளை அர்ஜுனனுடைய

தேரில் ஏறிக்கொள்

அர்ஜுனன் உனக்கு

துணைக்கு வருவான்

தேரோட்டியாக

கிருஷ்ணர் வருவார்

 

நாளை நீ பீஷ்மரை

வீழ்த்தியே

ஆக வேண்டும்

 

சிகண்டி :

நாளை

குருக்ஷேத்திரத்தில்

நடக்கப் போகும்

பத்தாம் நாள் போரில்

பீஷ்மரை வீழ்த்துவேன்

 

நாளை

இந்த சிகண்டிக்கும்

பீஷ்மருக்கும்

இடையே நடக்கப்போகும்

போர் தான்

பீஷ்மன் தன்

வாழ்நாளில்

செய்யப்போகும்

கடைசிப் போர்

 

யுதிஷ்டிரன் :

பீஷ்மர் வீழ்ந்தார் என்ற

செய்திக்காகக் காத்துக்

கொண்டிருப்பேன்

 

சிகண்டி :

சிகண்டி கையால்

பீஷ்மன் வீழ்ந்தான்

என்ற செய்தி

உங்களுக்குக்

கிடைக்கும்

விடை பெறுகிறேன்

 

என்று சொல்லி

விட்டு சிகண்டி

பாண்டவர்கள்

கூடாரத்தை விட்டு

வெளியேறினான்)

 

குருக்ஷேத்திரத்தில்

பத்தாம் நாள் போர்

 

அர்ஜுனனுடைய தேரில்

அர்ஜுனனும்

சிகண்டியும் ஒரே

தேரில் ஏறிக் கொண்டு

போர்க்களத்தில்

அனைத்துத்

தடைகளையும்

கடந்து சென்று

பீஷ்மரை நெருங்கிக்

கொண்டிருக்கும்

காரணத்தைத்

தெரிந்து கொண்ட

துரியோதனன்

 

சிகண்டியும் பீஷ்மரும்

பீஷ்மரை மேலும்

நெருங்காமல் இருக்க

வேண்டும் என்பதற்காக

அதிக அளவில்

பாதுகாப்பை

பலப்படுத்தினான்

 

துரியோதனனால்

உண்டாக்கப்பட்ட

பாதுகாப்பு

ஏற்பாடுகளையும்

தகர்த்தெறிந்து

அர்ஜுனனும்

சிகண்டியும் பீஷ்மரை

நோக்கி முன்னேறி

சென்றனர்

 

கிருஷ்ணன்

தேரை பீஷ்மருக்கு

நேருக்கு நேராக

கொண்டு சென்று

நிறுத்தினார்

 

பீஷ்மர் :

ஜென்மங்கள்

கடந்து வந்தும்

உன்னுடைய கோபம்

இன்னும்

தணியவில்லையா

அம்பையே

 

சிகண்டி :

பாதிக்கப்பட்டவளின்

கோபம்

பழிவாங்காமல்

தணியாது

 

பீஷ்மர் :

கோபத்தால் உனக்கு

என்ன கிடைத்தது

வாழ்க்கையை வாழாமல்

வாழ்க்கையை

இழந்து நிற்கிறாய்

 

சிகண்டி :

கோபத்தால்

என்னுடைய வாழ்க்கையை

நான் இழக்கவில்லை

வாழ்க்கையை

இழந்ததால் தான்

எனக்கு

கோபமே வந்தது

 

பீஷ்மர் :

கோபத்தால்

எதை எல்லாம்

செய்யக்கூடாதோ

அதை எல்லாம் செய்து

கொண்டிருக்கிறாய்

 

சிகண்டி :

எதை செய்ய

வேண்டும் என்று

நினைத்தேனோ

அதை என்னால்

செய்ய முடியவில்லையே

 

பீஷ்மர் :

இப்போது என்ன

செய்ய வந்திருக்கிறாய்

 

சிகண்டி :

உன்னுடன் போர்

புரிந்து உன்னை

வீழ்த்த வந்திருக்கிறேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

No comments:

Post a Comment