ஜபம்-பதிவு-842
(சாவேயில்லாத
சிகண்டி-176)
சிகண்டி :
வணங்குகிறேன்
என்னை அழைத்த
காரணத்தை
நான் தெரிந்து
கொள்ளலாமா
யுதிஷ்டிரன் :
உன்னிடம்
ஒரு பணியை
ஒப்படைக்கப் போகிறேன்
அதை நீ தான்
செய்ய வேண்டும்
சிகண்டி :
சொல்லுங்கள்
என்னால் முடிந்தால்
கண்டிப்பாக செய்கிறேன்
யுதிஷ்டிரன் :
உன்னால் முடியும்
அதனால் தான் உன்னை
அழைத்திருக்கிறேன்
சிகண்டி :
என்ன விஷயம்
என்பது
தெரிந்தால் மட்டுமே
என்னால் அதைச்
செய்ய முடியுமா
அல்லது
செய்ய முடியாதா
என்பதைச்
சொல்ல முடியும்
யுதிஷ்டிரன் :
கடந்த ஒன்பது
நாட்களாக
தாத்தா பீஷ்மர்
அவர்கள்
குருக்ஷேத்திரத்தில்
மிகப்பெரிய
போரையே
நடத்தியிருக்கிறார்
இதனால்
பாண்டவர் படையில்
உயிர் இழப்பு
பொருள் இழப்பு
என்று மிகப்பெரிய
இழப்பே ஏற்பட்டு
இருக்கிறது
தொடர்ந்து வரும்
நாட்களில்
இதே நிலை
நீடித்தால் பாண்டவர்
படையே இருக்காது
இத்தகைய ஒரு
நிலை ஏற்படாமல்
இருக்க வேண்டுமானால்
தாத்தா பீஷ்மரை
வீழ்த்த வேண்டும்
விரும்பும் போது
தான் மரணம்
என்று
வரம் பெற்ற
தாத்தா பீஷ்மரை
வீழ்த்த முடியாது
அவரை வீழ்த்தி
இயங்க விடாமல்
செய்து விட்டால்
அவரால் தொடர்ந்து
போர் செய்ய முடியாது
ஆனால் அதற்கான
வழி இங்குள்ளவர்கள்
யாருக்கும் தெரியாது
தாத்தா பீஷ்மரை
வீழ்த்தும் வழி
தெரியாமல்
அவரை
இப்போரிலிருந்து
விலக்க முடியாது
அதனால் தான்
தாத்தா பீஷ்மரிடம்
சென்றேன்
அவரை வீழ்த்துவது
எப்படி என்று
எனக்கு சொல்ல
வேண்டும் என்று
கேட்டுக் கொண்டேன்
சிகண்டி :
எதிரியை வீழ்த்துவது
எப்படி என்று
தெரிந்து கொள்வதற்கு
எதிரியிடமே சென்று
இருக்கிறீர்கள்
நீங்கள் கேட்டதற்கு
அவர் பதில்
சொன்னாரா
யுதிஷ்டிரன் :
சொன்னார்
சிகண்டி :
என்ன சொன்னார்
யுதிஷ்டிரன் :
போர்க்களத்தில்
அவருடன் போர்
செய்வதற்கு
அவருக்கு முன்னால்
பெண் வந்தால்
அவர் ஆயுதங்களைக்
கீழே போட்டு
விடுவாராம்
போர் செய்ய
மாட்டாராம்
அந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்தி
அவரை வீழ்த்தலாம்
என்று சொன்னார்
சிகண்டி :
அவரை எப்படி
வீழ்த்தப் போகிறீர்கள்
யுதிஷ்டிரன் :
அதற்காகத்தான்
உன்னை அழைத்தேன்
நீ பெண்ணிலிருந்து
ஆணாக மாறியவன்
அல்லவா
உனக்குள் ஒரு பெண்
இருக்கிறாள் அல்லவா
தாத்தா பீஷ்மருக்கு
எதிராக போர்
செய்வதற்கு
அவருக்கு முன்னால்
நீ போய்
நிற்க வேண்டும்
அவரை போருக்கு
அழைக்க வேண்டும்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----11-08-2022
-----வியாழக் கிழமை
/////////////////////////////////////////////////
No comments:
Post a Comment