ஜபம்-பதிவு-852
(சாவேயில்லாத
சிகண்டி-186)
பீஷ்மர் :
பெண்ணிலிருந்து
ஆணாக மாறிய
ஒரு மாற்றுப்
பாலினத்தவரிடம்
வீழ்த்துப்பட்டு சாக
வேண்டுமா என்று
நினைத்து
வருத்தப்பட்டேன்
உன்னுடைய
வில்லிலிருந்து
புறப்பட்ட அம்பு
என்னுடைய நெஞ்சைத்
துளைக்கும் போதே
தெரிந்து கொண்டேன்
நீ ஒரு சிறந்த
வீரன் என்று
நீ பழி வாங்கும்
எண்ணத்துடனேயே
அலையாமல்
இருந்திருந்தால்
அர்ஜுனனை விட
சிறந்த வில் வீரன்
என்பதை
இந்த உலகம்
உன்னை ஏற்றுக்
கொண்டிருக்கும்
என்னை வீழ்த்துவது
ஒன்றே
உன்னுடைய
குறிக்கோளாகக் கொண்டு
அலைந்ததால்
உன்னுடைய
திறமையை
வீணாக்கி விட்டாய்
உன்னுடைய திறமையை
இந்த உலகத்திற்கு
வெளிப்படுத்தாமலேயே
இருந்து விட்டாய்
என்னை விட
போர்த்திறனில்
வல்லவனான
உன்னுடைய கையால்
இறப்பதை
நான் பெருமையாகவே
கருதுகிறேன்
அம்பை விடு
அம்பையே
அம்பை விடு
(தொடர்ந்து சரமாரியாக
அம்பை விட்டான்
சிகண்டி
பீஷ்மரின் உடலில்
இடைவெளியே
இல்லாத அளவிற்கு
தொடர்ச்சியாக
அம்புகள் பாய்ந்ததால்
அம்புகளால் துளைக்கப்பட்ட
உடலுடன்
கீழே விழுந்த
பீஷ்மரின் உடல்
பூமியைத் தொடவில்லை
பீஷ்மர்
அம்புப் படுக்கையில்
படுத்தவுடன்
அம்பு விடுவதை
நிறுத்தி விட்டான்
சிகண்டி
பீஷ்மர் அம்புப்
படுக்கையில் படுத்ததும்
அர்ஜுனன் தேரில்
இருந்து இறங்கி
பீஷ்மரைக் காண
சென்று விட்டான்
சிகண்டி பீஷ்மரை
வீழ்த்தி விட்டான்
என்ற செய்தியைக்
கேட்டதும்
உடனடியாக போர்
நிறுத்தப்பட்டது
கௌரவர் படை
வீரர்கள் அனைவரும்
பீஷ்மர் வாழ்க
என்ற கோஷத்தை
எழுப்பினர்
பாண்டவர் படை
வீரர்கள் பீஷ்மர்
அழிந்தார்
பீஷ்மரை வீழ்த்திய
சிகண்டி வாழ்க என்ற
கோஷத்தை எழுப்பிய
வண்ணம் இருந்தனர்
தேரிலிருந்து இறங்கிய
சிகண்டி நேராக
கிருஷ்ணனிடம்
சென்றான்)
சிகண்டி :
ஒரு வீரனை
ஒரு வீரனால் தான்
புரிந்து கொள்ள
முடியும்
என்னுடைய எதிரியாக
இருந்தாலும்
பீஷ்மன் மிகச்
சிறந்த வீரன்
யாராலும் வெல்ல
முடியாத வீரன்
அவருக்கு இணையாக
இதுவரை யாரும்
பிறந்ததும் இல்லை
இனி யாரும்
பிறக்கப் போவதும்
இல்லை
சிவனிடம் வரம்
பெற்றதால் தான்
என்னாலேயே பீஷ்மரை
வீழ்த்த முடிந்தது
இல்லை என்றால்
பீஷ்மரை என்னால்
நெருங்கி
இருக்கவே முடியாது
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----11-08-2022
-----வியாழக் கிழமை
/////////////////////////////////////////////////
No comments:
Post a Comment