August 11, 2022

ஜபம்-பதிவு-844 (சாவேயில்லாத சிகண்டி-178)

 ஜபம்-பதிவு-844

(சாவேயில்லாத

சிகண்டி-178)

 

பீமன் :

சரியாகத் தான்

சொல்கிறான் சிகண்டி

 

சகாதேவன்:

ஆமாம்

சிகண்டி சொல்வதும்

சரியானது தான்

 

நானும்

போர்க்களத்தில்

என்னுடன் போரிடுவதற்கு

ஒரு பெண் வந்தால்

ஆயுதங்களைப்

போட்டு விடுவேன்

போர் செய்ய

மாட்டேன்

 

நகுலன் :

சிகண்டி சொல்வதை

நானும் ஏற்றுக்

கொள்கிறேன்

 

சிகண்டி :

பீஷ்மன்

சொல்வதைப் பார்த்தால்

ஒருவரைக்

கொல்ல வேண்டும்

என்றால்

அவர் முன்னால்

ஒரு பெண்ணை

நிறுத்தினால் போதுமே

 

யுதிஷ்டிரன் :

தாத்தா பீஷ்மரை

வீழ்த்தும் வழி

தெரியவில்லை

என்றால்அவரை

எப்படி வீழ்த்துவது

 

அவரை வீழ்த்தும் வழி

தெரியவில்லை

என்ற காரணத்தினால்

தானே அவரைப்

போய் சந்தித்தேன்

 

அவரை வீழ்த்தும்

வழியை

எப்படி தெரிந்து

கொள்வது

 

சிகண்டி :

அதை நான்

சொல்கிறேன்

 

யுதிஷ்டிரன் :

உனக்கு எப்படி தெரியும்

 

சிகண்டி :

ஏனென்றால்

அவரை

வீழ்த்தப்போவதே

நான் தான்

 

என்னைத் தவிர

இந்த உலகத்தில்

உள்ள யாராலும்

பீஷ்மரை வீழ்த்த

முடியாது

 

சகாதேவன் :

ஏன்

 

சிகண்டி :

வரம் வாங்கி

வந்திருக்கிறேன்

 

நகுலன் :

என்ன வரம்

 

சிகண்டி :

பீஷ்மரைக்

கொல்வதற்கான வரம்

 

திருஷ்டத்யும்னன் :

யாரிடம்

 

சிகண்டி :

சிவனிடம்

 

பீமன் :

எப்போது

 

சிகண்டி :

போன ஜென்மத்தில்

 

யுதிஷ்டிரன் :

என்ன போன

ஜென்மத்திலா

 

சிகண்டி :

போன ஜென்மத்தில்தான்

போன ஜென்மத்தின்

‘தொடர்ச்சி தான் நான்

 

போன ஜென்மத்தில்

நிறைவேற்ற முடியாமல்

விட்டு விட்டு

வந்ததை

இந்த ஜென்மத்தில்

நிறைவேற்ற

வந்திருப்பவன் நான்

 

காசி நாட்டின்

மன்னன்

பீமதேவனுக்கும்

புராதேவிக்கும்

பிறந்த மூன்று

மகள்களான

அம்பை

அம்பிகை

அம்பாலிகை

ஆகியோரில்

மூத்த மகளாக

இருக்கும்

என்னுடைய பெயர்

தான் அம்பை

 

பீஷ்மன் எங்கள்

மூவரையும்

சிறை எடுத்தான்

 

என்னுடைய சகோதரிகள்

இருவரும்

தங்களுக்குரிய

வாழ்க்கையைத் தாங்களே

தேர்ந்து எடுத்துக்

கொண்டனர்

விசித்திர வீர்யனை

திருமணம் செய்து

கொண்டனர்

 

என்னுடைய

இரு சகோதரிகள்

வழி வந்தவர்கள் தான்

நீங்கள் அனைவரும்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----11-08-2022

-----வியாழக் கிழமை

 

/////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment