March 05, 2023

பதிவு-6- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-6- ஆய பதிதான்-

-திருமூலர்

 

இளமை ராகம் இதய வீணையில் ஏற்றி வைக்கப்பட்ட தீபம் !

பருவ ராகம் பள்ளி யறையில் எழுதி வைக்கப்பட்ட கவிதை !

கன்னி ராகம் கண்களின் ஓரத்தில் காட்டப் பட்ட காட்சி !

அழகு ராகம் ஆசையின் பிம்பத்தில் வார்க்கப் பட்ட நிழல் !

அன்பு ராகம் ஆசையின் அரவணைப்பில் பொறித்து வைக்கப்பட்ட பொதிகைச்சாரல் !

இசை ராகம் இளமை ஊஞ்சலில் மாட்டி வைக்கப்பட்ட காவியம் !

சோக ராகம் துன்பத்தின் சுமையில் முடித்து வைக்கப்பட்ட இன்பம் !

ஆசை ராகம் அழகின் ஆராதனையில் அனுபவிக்கப்பட்ட உண்மை நிஜம் !

கல்வி ராகம் அறிவின் சிகரத்தில் நாட்டப்பட்ட ஞானக் கொடி !

சுதந்திர ராகம் புரட்சியின் முடிவில்  பெற்றுக் கொண்ட தாகம் !

அறிவு ராகம் சிந்தனையின் ஓரத்தில் எழுதப் பட்ட வரலாறு !

உழைப்பு ராகம் இரத்தத்தின் இடையில் தெறிக்கப் பட்ட சுயமரியாதை !

அடிமை ராகம் இல்லாமையின் கண்களில் சுடர்விடும் கனல் !

புரட்சி ராகம் எரியும் நெருப்புக்கு ஊற்றப்படும் அழியாத தன்மானம் !

முதுமை ராகம் முடிந்து போனவைக்கு இருப்பிடம் நாடும் குடில் !

கவிதை ராகம் கவிஞனின் கற்பனையில் நடமாடும் ஞானக் கிடங்கு !

சீர்திருத்த ராகம் சிந்தனையின் முடிவில் பொறிக்கப் படும் கல்வெட்டு !

நட்பு ராகம் துன்பத்தின் தொடக்கத்தில்   பெறப்படும் அனுபவ முத்திரை !

அரசியல் ராகம் அறிவின் உழைப்பில் எழுதப்படும் முடியாத இலக்கியம் !

என்பதை உணர்ந்து

சிற்றின்பத்திற்கும் - பேரின்பத்திற்கும் உள்ள வேறுபாட்டையும்,

நிரந்தரமான - தற்காலிகமான தன்மைக்குள்ள வேறுபாட்டையும் ,

ஜீவாத்மா - பரமாத்மாவுக்குள்ள வேறுபாட்டையும் ,

நிரந்தரத்திற்கும் தற்காலிகத்திற்கும் உள்ள வேறுபாட்டையும்,

எது நிரந்தர நிம்மதி எது,  எது தற்காலிக நிம்மதி என்பதுக்குள்ள வேறுபாட்டையும்,

எது நிரந்தர இன்பம்,  எது தற்காலிக இன்பம், என்பதுக்குள்ள வேறுபாட்டையும்

பதி-பசு-பாசம் என்ற மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பையும்

தத்துவத்தையும் ரகசியத்தையும் யார்ஒருவர் அறிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு மரணம் என்பது இல்லை பிறப்பு இறப்பு என்ற சுழலில் சிக்காமல் பிறவிப் பெருங்கடலில் சிக்கி துன்புறாமல் ஞானம் அடைவர் என்கிறார் திருமூலர்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

பதிவு-5- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-5- ஆய பதிதான்-

-திருமூலர்

 

ஆதியும் நீ , அந்தமும் நீ,  அந்தத்தின் அருளும் நீ !

எண்ணும் நீ ,எழுத்தும் நீ , எழுத்தின் இலக்கணம் நீ !

எண்ணமும் நீ , சொல்லும் நீ, சொல்லின் செயலும் நீ !

கண்ணும் நீ , காட்சியும் நீ, காட்சியின் யதார்த்தம் நீ !

அறிவும் நீ , ஆற்றலும் நீ ,ஆற்றலின் இயல்பு நீ !

ஆள்பவனும் நீ , ஆளப்படுபவனும் நீ, ஆளுமையின் பிராணனும் நீ !

விண்ணும் நீ , மண்ணும் நீ , மண்ணின் மூலம் நீ !

அன்பும் நீ , ஆசியும் நீ , ஆசியின் கருணையும் நீ !

ஓசையும் நீ , ஓம்காரமும் நீ,  ஓம்காரத்தின் உருவமும் நீ !

ஒளியும் நீ , வளியும் நீ , வளியின் விதியும் நீ !

மதியும் நீ , மனதும் நீ,  மனதின் பிறப்பும் நீ !

அண்டமும் நீ , அகிலமும் நீ,  அகிலத்தின் சான்று நீ !

உரையும் நீ , உள்ளும் நீ , உள்ளின் உருவகமும் நீ !

பாடலும் நீ , பொருளும் நீ ,பொருளின் மெய்யும் நீ !

இறப்பும் நீ , அழிவும் நீ , அழிவின் ஆக்கமும் நீ !

சான்று நீ , சன்மார்க்கம் நீ , சன்மார்க்கத்தின் விழி நீ !

பார்ப்பவன் நீ , பார்க்கப்படுபவன் நீ,  பார்க்கப்படுபவனின் பாதை நீ !

இதயம் நீ , இல்லறம் நீ , இல்லறத்தின் நல்லறம் நீ !

சாந்தம் நீ , சித்தம் நீ , சித்தத்தின் சிந்தை நீ !

பாரும் நீ , பகலவனும் நீ, பகலவனின் தோற்றம் நீ !

இம்மையும் நீ  ,மறுமையும் நீ, மறுமையின் சாரம் நீ !

முதலும் நீ , முடிவும் நீ, முடிவின் முதலும் நீ !

என்பதில் தெளிவு பெற்று யாருக்கு அறிவு ரேகை திறந்து கொள்கிறதோ

அவருக்கு பதி பசு பாசம் இவற்றுக்கு இடையே உள்ள

ஒற்றுமை வேற்றுமை தெரியும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

பதிவு-4- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-4- ஆய பதிதான்-

-திருமூலர்

 

இருப்பு நிலையிலிருந்து விண் என்று சொல்லப்படக்கூடிய உயிரான ஜீவாத்மா இயக்க நிலை பெற்று உருவாகிறது. இந்த விண் என்று சொல்லப்படக்கூடிய உயிரான ஜீவாத்மா கூடியே பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படக்கூடிய நிலம் நீர் நெருப்பு காற்று விண் ஆகியவை தோன்றுகிறது.  இந்த பஞ்ச பூதங்கள் ஒன்றுடன்  ஒன்று சரியான விகிதத்தில் இணைந்து உலகத்தில் உள்ள மனிதன் உட்பட அனைத்து உயிர்கள் மற்றும் உலகத்தில் உள்ள தோற்றங்கள் அனைத்தும் தோன்றுகிறது.

 

உலகத்தில் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதும் உலகத்தோற்றங்கள் அனைத்தும் தோன்றுவதற்கு காரணமாக இருப்பதும்

அனைத்து இயக்கங்களுக்கு காரணமாக இருப்பதும்

அனைத்து இயக்கங்களுக்கு மூலமாக இருப்பதும்

அனைத்து இயக்கங்களுக்கு அடிப்படையாக இருப்பதும்

அனைத்து இயக்கங்களுக்கு ஆதாரமாக இருப்பதுமாகிய

விண் என்ற உயிராகிய ஜீவாத்மாவை அதாவது இந்துக்கள் குறிப்பிடும் பசுவை

சித்தாந்தவாதிகள் இயக்க நிலை என்றும்

கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவி என்றும் குறிப்பிடுகின்றனர்

 

மனிதனுடைய உயிரானது படர்க்கை நிலை எய்தி மனமாகிறது என்பதையும்

ஒடுக்க நிலை அடையும் போது அறிவாகிறது என்பதையும்

மனம் என்றால் என்ன என்பதையும் அறிவு என்றால் என்ன என்பதையும்

மனதிற்கும் அறிவிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதையும்

அறிவை எவ்வாறு அறிவது என்பதையும் மனதை எவ்வாறு அறிவது என்பதையும்

எதை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும் என்பதையும்

எதை அறிய வேண்டும் என்பதையும் அறிவதற்காக ஓடும் மனிதன்

பாசத்திற்குள் கட்டுண்டு விட்டதால் எதையும் அறிய முடியாமல் தவிக்கிறான்

பாசவிலங்குகளை அறுக்கும் போது உண்மை என்ன என்பதை உணர்ந்து கொள்கிறான்

இந்துக்கள் சொல்லக்கூடிய இந்த பாசத்தை

சிந்தாந்தவாதிகள் உணர்வு நிலை என்றும்

கிறிஸ்தவர்கள் சுதன் என்றும் குறிப்பிடுகின்றனர்

 

இந்துக்கள் குறிப்பிடும் பதி – பசு -பாசம்

கோயில்களில் சிவன் – நந்தி – பலிபீடம் என்றும்

சித்தாந்தவாதிகள் இருப்பு நிலை – இயக்க நிலை – உணர்வு நிலை என்றும்

கிறிஸ்தவர்கள் பிதா-பரிசுத்த ஆவி – சுதன் என்றும் குறிப்பிடுகின்றனர்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

பதிவு-3- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-3- ஆய பதிதான்-

-திருமூலர்

 

இந்துக்கள் குறிப்பிடும் பதி-பசு-பாசம் என்பதை

கிறிஸ்தவர்கள் பிதா-பரிசுத்த ஆவி-சுதன் என்று குறிப்பிடுகின்றனர்

அதாவது பதியை பிதா என்றும், பசுவை பரிசுத்த ஆவி என்றும்,

பாசத்தை சுதன் என்றும் குறிப்பிடுகின்றனர்

 

பதி-பசு-பாசம் என்ற மூன்றை அவரவர் உணர்ந்த நிலைக்கேற்ப குறிப்பிடுகின்றனர்

இருப்பு நிலை-இயக்க நிலை -உணர்வு நிலை -சித்தாந்தவாதிகள்

பிதா-பரிசுத்த ஆவி-சுதன்-கிறிஸ்தவர்கள்

 

முதல் நிலை மூலநிலை ஆதிநிலை என்று சொல்லப்படக்கூடிய

அனைத்தையும் தாங்கிக் கொண்டிருப்பதும்

அனைத்திற்குள்ளும் இருப்பதும்

அனைத்தையும் படைத்துக் கொண்டிருப்பதும்

அனைத்தையும் காத்துக் கொண்டிருப்பதும்

அனைத்தையும் அழித்துக் கொண்டிருப்பதும் ஆகிய சர்வவல்லமை படைத்த

இந்துக்கள் குறிப்பிடும் பதியை சிந்தாந்தவாதிகள் இருப்பு நிலை என்றும்

கிறிஸ்தவர்கள் பிதா என்றும் குறிப்பிடுகின்றனர்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

 

 

 

பதிவு-2- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-2- ஆய பதிதான்-

-திருமூலர்

 

”””ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே”””

நம்முடைய உலக பந்தங்களை அதாவது பாசத்தை பலிபீடத்தில் வைத்து அழித்து விட்டால் அல்லது எரித்து விட்டால் ஜீவாத்மாவாகிய பசு பரமாத்வாகிய பதி எனப்படும் சிவனுடன் இணைகிறது

 

பதியாகிய சிவனை பசுவாகிய ஜீவாத்மா இணைய வேண்டும் என்றால் பாசமாகிய மும்மலங்கள் விலக வேண்டும் என்பதைக் குறிக்க அமைக்கப் பட்டதே சிவன்- நந்தி - பலிபீடம்

 

சிவன் கோயிலின் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு எதிராக உள்ள நந்தியின் காதுகளில் சிலர் ஏதோ முணுமுணுப்பார்கள் நமக்கு என்ன தேவையோ அதை   நந்தியின் காதுகளில் சொல்ல வேண்டும் அவ்வாறு நந்தியின் காதுகளில் நமக்கு என்ன தேவையோ அதை சொன்னால் நமக்கு தேவையானவை கிடைக்கும் என்பது ஐதிகம்

 

இதன் அர்த்தம் என்னவென்றால்

நாம் பிராணாயாமம் வாசியோகம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைச் செய்து மூலாதாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபானன் எனப்படும் மலக்காற்றோடு உள்ளே இழுக்கப்படும் பிராணன் எனப்படும் உயிர்க் காற்றைக் கலந்து ஆற்றல் மிக்க காற்றாக்கி மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறாதாரங்களைத் துளைத்து மேலேற்றி பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைக்க வேண்டும்

 

அவ்வாறு இணைக்கும் போது பாசங்கள் அனைத்தும் பலி கொடுக்கப்பட்டு விடும்

அதாவது பாசங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி விடும்

நம்மிடம் உள்ள பாசங்கள் அனைத்தும் விலகிய பின் ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் இணைந்தால் நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நடக்கும் என்பது தான்

சிவன்-நந்தி-பலிபீடம் அதில் உள்ள அர்த்தம்

 

இந்துக்கள் குறிப்பிடும் பதி-பசு-பாசம் என்பதை

சித்தாந்தவாதிகள் இருப்பு நிலை -இயக்க நிலை – உணர்வு நிலை என்று குறிப்பிடுகின்றனர்

அதாவது பதியை இருப்பு நிலை என்றும், பசுவை இயக்க நிலை என்றும்

பாசத்தை உணர்வு நிலை என்று குறிப்பிடுகின்றனர்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

பதிவு-1- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-1- ஆய பதிதான்-

-திருமூலர்

 

”"""ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்

        ஆய பசுவும் அடலே றெனநிற்கும்

        ஆய பலிபீட மாகுநற் பாசமாம்

        ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே”””

   

-----திருமூலர்-

 

 

ஆன்மீக உலகில் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான ஒரு வார்த்தை

பதி - பசு -பாசம் ஆகும்

பதி என்றால் கடவுள் அதாவது பரமாத்மா என்று பொருள்

பசு என்றால் ஆன்மா உயிர் அதாவது ஜீவாத்மா என்று பொருள்

பாசம் என்றால் ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் இணைய விடாமல் தடுக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் என்று பொருள்

 

 

சிவன் கோயிலின் கருவறையில் சிவன் சிலை இருக்கும்

சிவன் சிலைக்கு நேர் எதிராக நந்தி சிலை இருக்கும்

நந்தி சிலைக்கு பின்புறம் பலிபீடம் அமைக்கப்பட்டு இருக்கும்

சிவன் நந்தி பலிபீடம் என்ற வரிசையில் இந்த மூன்றும் அமைக்கப்பட்டு இருக்கும்

அனைத்து கோயில்களிலும் இந்த அமைப்பு தான் இருக்கும்

 

 

”””ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்”””

சிவன் கோயிலின் கருவறையில் உள்ள சிவலிங்கங்கத்தைத் தான் பதி என்கிறோம்.

அதாவது சிவலிங்கம் தான் பதி ஆகும்

 

இதைத் தான் பரமாத்மா என்கிறோம் இதைத் தான் கடவுள் என்கிறோம்

 

”””ஆய பசுவும் அடலே றெனநிற்கும்”””

சிவன் கோயிலின் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு எதிராக உள்ள வலிமை மிக்க காளை உள்ளது இது தான் ஜீவாத்மாவாகிய பசு ஆகும்

இதைத் தான் நந்தி என்கிறோம்

 

 

”””ஆய பலிபீட மாகுநற் பாசமாம்”””

இந்த காளையாகிய நந்திக்குப் பின்னாக வட்ட வடிவில் கல் ஒன்று அமைந்திருக்கும்

அது தான் பலிபீடம் எனப்படும் இந்த பலிபீடமே பாசம் ஆகும்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

ஜபம்-பதிவு-941 மரணமற்ற அஸ்வத்தாமன்-73 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-941

மரணமற்ற

அஸ்வத்தாமன்-73

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணராகிய நான்

கற்றுக் கொடுத்ததை

வைத்துத் தான்

என்னைக்

கொல்ல முடியும்

என்பதையும்

வேறு யார்

கற்று கொடுத்ததை

வைத்தும் என்னை

கொல்ல முடியாது

என்பதையும்

 

என்னுடைய சீடர்களால்

மட்டுமே என்னைக்

கொல்ல முடியும்

என்பதையும்

என்னுடைய

சீடர்களைத்

தவிர்த்து வேறு

யாராலும் என்னைக்

கொல்ல முடியாது

என்பதையும்

இந்த உலகம்

உணர்ந்து கொள்ளும்

 

அஸ்வத்தாமா

எப்போதுமே

நிகழ்காலத்தில் நடக்கும்

நிகழ்ச்சிகளை மட்டுமே

கணக்கில் கொண்டு

எந்த ஒரு

முடிவையும்

எடுக்கக் கூடாது

 

எதிர்காலத்தைக்

கணக்கில் கொண்டு

தான் நிகழ்காலத்தில்

முடிவுகள்

எடுக்க வேண்டும்

 

நிகழ்காலத்தை

மட்டும் கணக்கில்

கொண்டு

எடுக்கப்படும்

எந்த ஒரு முடிவும்

சரியாக இருக்காது

 

எதிர்காலத்தை

கணக்கில் கொண்டு

நிகழ்காலத்தில்

எடுக்கப்படும்

முடிவே

சரியானதாக

இருக்கும்

 

எந்த ஒரு

விஷயத்தையும்

தொலைநோக்குப்

பார்வையுடன்

யோசித்துப் பார்க்க

முயற்சி செய்

 

எந்த ஒரு

விஷயத்தையும்

தொலைநோக்கு

பார்வையுடன்

யோசிக்கும்

போது தான்

உண்மை எது

பொய் எது

என்பது தெரியும்

 

நல்லது எது

கெட்டது எது

என்பது தெரியும்

 

திருஷ்டத்யும்னனுக்கு

நான் கல்வி

கற்றுக் கொடுப்பதை

தொலைநோக்கு

பார்வையுடன் பார்

நான் செய்வது

சரியானது

என்பது தெரியும்

 

ஒவ்வொருவரும்

அவரவருக்கு என்று

நிர்ணயிக்கப்பட்ட

பணியை செய்ய

வேண்டும்

 

எனக்கென்று

நிர்ணயிக்கப்பட்ட

பணியை என்னைச்

செய்ய விடு

 

அஸ்வத்தாமா

நீ என் அருகில்

இருக்கும் போது

திருஷ்டத்யும்னன்

என்னைக்

கொல்ல முடியுமா

என்னுடைய

உயிரைப் பறிக்க

முடியுமா

 

என்னைக் கொன்றாலும்

அவனை நீ சும்மா

விட்டுவிடுவாயா

 

அஸ்வத்தாமன் :

உங்களைக்

கொன்றவனை

அணு அணுவாகச்

சித்திரவதை

செய்துகொல்வேன்

 

ஏன் இந்தச்

செயலைச்

செய்தோம் என்று

எண்ணும்படி

கொல்வேன்

 

கொடிய முறையில்

கொல்வேன்

 

யாரும் நினைத்துகூட

பார்க்க முடியாத

அளவுக்கு

அவனைக்

கொல்வேன்

 

இதுவரை இந்த

உலகம் பார்த்திராத

அளவுக்கு அவனைக்

கொல்வேன்

 

துரோணர் :

எனக்கு அது

போதுமே

 

நான் செல்கிறேன்

 

அஸ்வத்தாமன் :

எங்கு செல்கிறீர்கள்

 

துரோணர் :

மரணத்திற்கே பாடம்

எடுக்க செல்கிறேன்

 

அஸ்வத்தாமன் :

திருஷ்டத்யும்னனை

சொல்கிறீர்களா

 

துரோணர் :

அஸ்வத்தாமா

மரணத்திற்கே பாடம்

எடுக்கும் வல்லமை

எனக்கு இருக்கின்றன

காரணத்தினால் தான்

மரணமற்ற

அஸ்வத்தாமன்

என்று நீ

எனக்கு மகனாகப்

பிறந்திருக்கிறாய்

என்பதை

நினைவில் கொள்

 

(என்று சொல்லி

விட்டு துரோணர்

செல்கிறார்)

 

மரணமற்ற

அஸ்வத்தாமன்

மரணத்திற்கே பாடம்

எடுக்கச் செல்லும்

தன்னுடைய

தந்தை துரோணர்

செல்வதையே

பார்த்துக்

கொண்டிருக்கிறான்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

-------K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர் &

    பேச்சாளர்

 

-------27-02-2023

------திங்கட் கிழமை

/////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-940 மரணமற்ற அஸ்வத்தாமன்-72 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-940

மரணமற்ற

அஸ்வத்தாமன்-72

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

கர்மவினையின்

பாதிப்பிலிருந்து

நம்மைக் காத்துக்

கொள்வதற்கும்

கர்மவினையின்

பாதிப்பை குறைத்துக்

கொள்வதற்கும்

மட்டுமே நாம்

முயற்சி

செய்ய வேண்டும்

 

கர்மவினையை

மாற்ற முயற்சி

செய்யக்கூடாது

 

மனிதன்

எப்போது எப்படி

எந்த இடத்தில்

எந்த நேரத்தில்

எந்த காலத்தில்

எந்த சூழ்நிலையில்

யாரால் இறப்பான்

என்பது

யாருக்கும் தெரியாது

ஆனால்

எனக்கு யாரால்

இறப்பேன்

என்பது தெரியும்

எப்போது எப்படி

எந்த இடத்தில்

எந்த நேரத்தில்

எந்த காலத்தில்

எந்த சூழ்நிலையில்

இறப்பேன் என்பது

மட்டும் தெரியாது

 

மனிதனுக்கு

இறக்கும்

தேதி தெரியாத

காரணத்தினால் தான்

நம்பிக்கையுடன்

வாழ்ந்து

கொண்டிருக்கிறான்

 

இறக்கும் தேதி

தெரிந்து விட்டால்

மனிதனால்

நம்பிக்கையுடன்

வாழ முடியாது

 

மனிதன்

நம்பிக்கையுடன்

வாழ்வதற்கு

முக்கிய காரணமே

மனிதனுக்கு

இறக்கும் தேதி

தெரியாத

காரணத்தினால் தான்

 

சூரிய உதயத்தைக்

காண்போம் என்ற

நினைப்பில்தான்

ஒவ்வொருவரும்

இரவில் உறங்கவே

செல்கிறோம்

 

காலையில் உயிரோடு

எழுந்திருப்போம் என்ற

நம்பிக்கையில் தான்

நாம் நம்

கடமையையே

செய்கிறோம்

 

நம்பிக்கையில் தானே

வாழ்க்கையே

ஒடிக் கொண்டு

இருக்கிறது

நம்பிக்கை இல்லை

என்றால் வாழ்க்கையை

ஓட்ட முடியுமா

 

அஸ்வத்தாமன் :

இருந்தாலும் உங்களைக்

கொல்வதற்காகவே

பிறந்தவனுக்கு கல்வி

கற்றுக்கொடுப்பது

என்பது

 

துரோணர் :

தேவையானது தான்

 

என்னைக்

கொல்வதற்காகப்

பிறந்தவன்

நான் கல்வி

கற்றுக் கொடுத்தாலும்

என்னைக்

கொல்லத்தான்

போகிறான்

நான் கல்வி கற்றுக்

கொடுக்கவில்லை

என்றாலும் என்னைக்

கொல்லத்தான்

போகிறான்

 

அவன் யாரிடமாவது

கல்வி கற்றுக்

கொண்டு வந்து

என்னைக் கொன்றால்

என்னைவிட

சிறந்த குரு இந்த

உலகத்தில்

இருக்கிறார்கள்

என்பதும்

என்னைவிட

திருஷ்டத்யும்னன்

திறமைசாலி

என்பதும் இந்த

உலகம் ஏற்றுக்

கொண்டு விடும்

 

திருஷ்டத்யும்னனுக்கு

நான் கல்வியைக்

கற்றுக் கொடுத்தால்

துரோணரைக்

கொல்லப் பிறந்தவன்

திருஷ்டத்யும்னன்

என்று தெரிந்தும்

துரோணர்

திருஷ்டத்யும்னனுக்கு

கல்வியைக்

கற்றுக் கொடுத்தார்

என்று இந்த உலகம்

என்னை வாழ்த்தும்

 

திருஷ்டத்யும்னனுக்கு

கல்வியைக்

கற்றுக் கொடுத்தால்

நான் கற்றுக்

கொடுத்த கல்வியை

வைத்துத்தான்

அவனால் என்னைக்

கொல்ல முடியும்

 

நான் கற்றுக்

கொடுத்த கல்வியை

வைத்துத்தான்

அவன் என்னைக்

கொல்வான் என்றால்

குருவையே

சீடன் கொன்றான்

என்று இந்த உலகம்

அவனை பழிக்கும்

குருத் துரோகி

என்று இந்த

உலகம் அவனை

இழித்துரைக்கும்

 

 

-------ஜபம் இன்னும் வரும்

 

-------K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர் &

    பேச்சாளர்

 

-------27-02-2023

------திங்கட் கிழமை

/////////////////////////////////////////////////