March 05, 2023

பதிவு-2- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-2- ஆய பதிதான்-

-திருமூலர்

 

”””ஆய அரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே”””

நம்முடைய உலக பந்தங்களை அதாவது பாசத்தை பலிபீடத்தில் வைத்து அழித்து விட்டால் அல்லது எரித்து விட்டால் ஜீவாத்மாவாகிய பசு பரமாத்வாகிய பதி எனப்படும் சிவனுடன் இணைகிறது

 

பதியாகிய சிவனை பசுவாகிய ஜீவாத்மா இணைய வேண்டும் என்றால் பாசமாகிய மும்மலங்கள் விலக வேண்டும் என்பதைக் குறிக்க அமைக்கப் பட்டதே சிவன்- நந்தி - பலிபீடம்

 

சிவன் கோயிலின் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு எதிராக உள்ள நந்தியின் காதுகளில் சிலர் ஏதோ முணுமுணுப்பார்கள் நமக்கு என்ன தேவையோ அதை   நந்தியின் காதுகளில் சொல்ல வேண்டும் அவ்வாறு நந்தியின் காதுகளில் நமக்கு என்ன தேவையோ அதை சொன்னால் நமக்கு தேவையானவை கிடைக்கும் என்பது ஐதிகம்

 

இதன் அர்த்தம் என்னவென்றால்

நாம் பிராணாயாமம் வாசியோகம் போன்ற மூச்சுப் பயிற்சிகளைச் செய்து மூலாதாரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபானன் எனப்படும் மலக்காற்றோடு உள்ளே இழுக்கப்படும் பிராணன் எனப்படும் உயிர்க் காற்றைக் கலந்து ஆற்றல் மிக்க காற்றாக்கி மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறாதாரங்களைத் துளைத்து மேலேற்றி பிரம்மரந்திரத்தில் உள்ள சிவனுடன் இணைக்க வேண்டும்

 

அவ்வாறு இணைக்கும் போது பாசங்கள் அனைத்தும் பலி கொடுக்கப்பட்டு விடும்

அதாவது பாசங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி விடும்

நம்மிடம் உள்ள பாசங்கள் அனைத்தும் விலகிய பின் ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் இணைந்தால் நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நடக்கும் என்பது தான்

சிவன்-நந்தி-பலிபீடம் அதில் உள்ள அர்த்தம்

 

இந்துக்கள் குறிப்பிடும் பதி-பசு-பாசம் என்பதை

சித்தாந்தவாதிகள் இருப்பு நிலை -இயக்க நிலை – உணர்வு நிலை என்று குறிப்பிடுகின்றனர்

அதாவது பதியை இருப்பு நிலை என்றும், பசுவை இயக்க நிலை என்றும்

பாசத்தை உணர்வு நிலை என்று குறிப்பிடுகின்றனர்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

No comments:

Post a Comment