பதிவு-5- ஆய பதிதான்-
-திருமூலர்
ஆதியும்
நீ , அந்தமும் நீ, அந்தத்தின்
அருளும் நீ !
எண்ணும்
நீ ,எழுத்தும் நீ , எழுத்தின் இலக்கணம் நீ !
எண்ணமும்
நீ , சொல்லும் நீ, சொல்லின் செயலும் நீ !
கண்ணும்
நீ , காட்சியும் நீ, காட்சியின் யதார்த்தம் நீ !
அறிவும்
நீ , ஆற்றலும் நீ ,ஆற்றலின்
இயல்பு நீ !
ஆள்பவனும்
நீ , ஆளப்படுபவனும் நீ, ஆளுமையின் பிராணனும் நீ !
விண்ணும்
நீ , மண்ணும் நீ , மண்ணின்
மூலம் நீ !
அன்பும்
நீ , ஆசியும் நீ , ஆசியின்
கருணையும் நீ !
ஓசையும்
நீ , ஓம்காரமும் நீ, ஓம்காரத்தின்
உருவமும் நீ !
ஒளியும்
நீ , வளியும் நீ , வளியின்
விதியும் நீ !
மதியும்
நீ , மனதும் நீ, மனதின் பிறப்பும்
நீ !
அண்டமும்
நீ , அகிலமும் நீ, அகிலத்தின்
சான்று நீ !
உரையும்
நீ , உள்ளும் நீ , உள்ளின்
உருவகமும் நீ !
பாடலும்
நீ , பொருளும் நீ ,பொருளின்
மெய்யும் நீ !
இறப்பும்
நீ , அழிவும் நீ , அழிவின்
ஆக்கமும் நீ !
சான்று
நீ , சன்மார்க்கம் நீ , சன்மார்க்கத்தின்
விழி நீ !
பார்ப்பவன்
நீ , பார்க்கப்படுபவன் நீ, பார்க்கப்படுபவனின்
பாதை நீ !
இதயம்
நீ , இல்லறம் நீ , இல்லறத்தின்
நல்லறம் நீ !
சாந்தம்
நீ , சித்தம் நீ , சித்தத்தின்
சிந்தை நீ !
பாரும்
நீ , பகலவனும் நீ, பகலவனின் தோற்றம் நீ !
இம்மையும்
நீ ,மறுமையும்
நீ, மறுமையின் சாரம் நீ !
முதலும்
நீ , முடிவும் நீ, முடிவின் முதலும் நீ !
என்பதில்
தெளிவு பெற்று யாருக்கு அறிவு ரேகை திறந்து கொள்கிறதோ
அவருக்கு
பதி பசு பாசம் இவற்றுக்கு இடையே உள்ள
ஒற்றுமை
வேற்றுமை தெரியும்
------K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்
&பேச்சாளர்
------05-03-2023
----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////////////
No comments:
Post a Comment