பதிவு-1- ஆய பதிதான்-
-திருமூலர்
”"""ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடலே
றெனநிற்கும்
ஆய பலிபீட
மாகுநற் பாசமாம்
ஆய அரனிலை
யாய்ந்துகொள் வார்கட்கே”””
-----திருமூலர்-
ஆன்மீக உலகில் பயன்படுத்தப்படும் மிகவும்
முக்கியமான ஒரு வார்த்தை
பதி - பசு -பாசம் ஆகும்
பதி என்றால் கடவுள் அதாவது பரமாத்மா என்று பொருள்
பசு என்றால் ஆன்மா உயிர் அதாவது ஜீவாத்மா என்று பொருள்
பாசம் என்றால் ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் இணைய
விடாமல் தடுக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் என்று பொருள்
சிவன் கோயிலின் கருவறையில் சிவன் சிலை
இருக்கும்
சிவன் சிலைக்கு நேர் எதிராக நந்தி சிலை இருக்கும்
நந்தி சிலைக்கு பின்புறம்
பலிபீடம் அமைக்கப்பட்டு இருக்கும்
சிவன் நந்தி பலிபீடம் என்ற வரிசையில் இந்த மூன்றும்
அமைக்கப்பட்டு இருக்கும்
அனைத்து கோயில்களிலும் இந்த அமைப்பு தான்
இருக்கும்
”””ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்”””
சிவன் கோயிலின் கருவறையில் உள்ள சிவலிங்கங்கத்தைத் தான் பதி என்கிறோம்.
அதாவது சிவலிங்கம் தான் பதி ஆகும்
இதைத் தான் பரமாத்மா என்கிறோம் இதைத் தான் கடவுள் என்கிறோம்
”””ஆய பசுவும் அடலே றெனநிற்கும்”””
சிவன் கோயிலின் கருவறையில் உள்ள
சிவலிங்கத்துக்கு எதிராக உள்ள வலிமை மிக்க காளை உள்ளது இது தான்
ஜீவாத்மாவாகிய பசு ஆகும்
இதைத் தான் நந்தி என்கிறோம்
”””ஆய பலிபீட மாகுநற் பாசமாம்”””
இந்த காளையாகிய நந்திக்குப் பின்னாக வட்ட
வடிவில் கல் ஒன்று அமைந்திருக்கும்
அது தான் பலிபீடம் எனப்படும் இந்த பலிபீடமே
பாசம் ஆகும்
------K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்
&பேச்சாளர்
------05-03-2023
----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////////////
No comments:
Post a Comment