March 05, 2023

ஜபம்-பதிவு-937 மரணமற்ற அஸ்வத்தாமன்-69 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-937

மரணமற்ற

அஸ்வத்தாமன்-69

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துருபதன் ஆசியரிடம்

கல்வி கற்றுக் கொண்டு

விளக்கம்

பெற்றதை விட

நான் அவனுக்கு

கல்வியை விளக்கியது

தான் அதிகம்

அதனால் தான்

பாஞ்சால நாட்டிற்கு

அவன் மன்னனான

பிறகு ராஜ்ஜியத்தில்

பாதியை எனக்கு

அளிப்பதாக சொன்னான்

அப்படி சொன்ன

அந்தத் துருபதனனின்

மகன் தான்

இந்தத் திருஷ்டத்யும்னன்

 

நாம் கஷ்டப்பட்டபோது

ராஜ்ஜியத்தில்

பாதியைத் தருகிறேன்

என்று சொன்னாயே

அந்த ராஜ்ஜியம்

வேண்டாம்

பிழைப்பதற்கு இரண்டு

பசுக்களை கொடு

என்று நான்

துருபதனிடம்

கேட்ட போது என்னை

அவமானப்படுத்தி

அனுப்பிய

அந்தத் துருபதனின்

மகன் தான்

இந்தத் திருஷ்டத்யும்னன்

 

நான் கல்வி

கற்றுக் கொடுத்த

என்னுடைய சீடர்களான

கௌரவர்கள்

பாண்டவர்களில்

சிறந்தவர்கள்

பாஞ்சால நாட்டின்

மீது படை எடுத்து

துருதபனை போரில்

தோற்கடித்து

அவனை கைதியாக்கி

தேர்க்காலில்

கட்டி வைத்து

இழுத்து வந்து

என் முன்னால்

மண்டியிட்டு

அமர வைத்தனர்

இவ்வாறு என்

முன்னால் மண்டியிட்டு

அமர வைக்கப்பட்ட

அந்தத் துருபதனின்

மகன் தான்

இந்தத் திருஷ்டத்யும்னன்

 

தனக்கு ஏற்பட்ட

அவமானத்தைத்

துடைப்பதற்காக

கசியப குலத்தில்

உதித்துப்

பழம் பெரும்

கல்விகளைக்

கற்றவர்களாகவும்,

கடும் நோன்புகளை

நோற்றவர்களாகவும்

பிராமணர்களில்

சிறந்தவர்களாகவும்,

இருந்த

யாஜர் மற்றும்

உபயாஜர் ஆகிய

இருவரையும் அணுகி

அவர்கள் மூலம்

மிகப்பெரும்

வேள்வி செய்து

வேள்வி நெருப்பின்

தழல்களிலிருந்து

வெளியே

கொண்டு வரப்பட்ட

துருபதனின்

மகன் தான்

இந்தத் திருஷ்டத்யும்னன்

 

அஸ்வத்தாமன் :

அனைத்தும் தெரிந்துமா

அவனுக்குக் கல்வி

கற்றுக் கொடுக்கிறீர்கள்

 

துரோணர் :

நான் பதிலை சொல்லி

முடிப்பதற்குள் அடுத்த

கேள்வியைக்

கேட்டு விட்டாய்

 

நான் பதிலை
சொல்லி முடிக்கும்

வரை நீ காத்துக்

கொண்டு இருந்திருந்தால்

அடுத்த கேள்வியைக்

கேட்டிருக்க வேண்டிய

அவசியமே

ஏற்பட்டிருக்காது

 

என்னிடமிருந்து பதிலை

எதிர்பார்த்து நீ

கேள்வியைக்

கேட்கவில்லை

என்னை சோதித்துப்

பார்க்கவே கேள்வியைக்

கேட்டு இருக்கிறாய்

 

அஸ்வத்தாமன் :

உங்களையா

நானா

 

துரோணர் :

ஆமாம் நீ

மட்டுமல்ல இந்த

உலகமும் அப்படித்தான்

 

எதிரே இருப்பவரிடம்

இருந்து

பதிலைத் தெரிந்து

கொள்ள வேண்டும்

என்ற எண்ணத்தில்

யாரும்

கேள்விகளைக்

கேட்பதில்லை

எதிரே இருப்பவருக்கு

என்ன தெரிந்திருக்கிறது

என்பதை

சோதித்துப் பார்க்க

வேண்டும் என்ற

எண்ணத்தில் தான்

கேள்விகளையே

கேட்கிறார்கள்

 

பதில் தெரிந்து

கொள்ள வேண்டும்

என்ற எண்ணத்தில்

கேட்கப்படும்

கேள்விகளை விட

சோதித்துப் பார்க்க

வேண்டும் என்ற

எண்ணத்தில்

கேட்கப்படும்

கேள்விகள் தான்

இந்த உலகத்தில்

அதிகம்

 

-------ஜபம் இன்னும் வரும்

 

-------K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர் &

    பேச்சாளர்

 

-------27-02-2023

------திங்கட் கிழமை

/////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment