March 05, 2023

பதிவு-6- ஆய பதிதான்- -திருமூலர்

 பதிவு-6- ஆய பதிதான்-

-திருமூலர்

 

இளமை ராகம் இதய வீணையில் ஏற்றி வைக்கப்பட்ட தீபம் !

பருவ ராகம் பள்ளி யறையில் எழுதி வைக்கப்பட்ட கவிதை !

கன்னி ராகம் கண்களின் ஓரத்தில் காட்டப் பட்ட காட்சி !

அழகு ராகம் ஆசையின் பிம்பத்தில் வார்க்கப் பட்ட நிழல் !

அன்பு ராகம் ஆசையின் அரவணைப்பில் பொறித்து வைக்கப்பட்ட பொதிகைச்சாரல் !

இசை ராகம் இளமை ஊஞ்சலில் மாட்டி வைக்கப்பட்ட காவியம் !

சோக ராகம் துன்பத்தின் சுமையில் முடித்து வைக்கப்பட்ட இன்பம் !

ஆசை ராகம் அழகின் ஆராதனையில் அனுபவிக்கப்பட்ட உண்மை நிஜம் !

கல்வி ராகம் அறிவின் சிகரத்தில் நாட்டப்பட்ட ஞானக் கொடி !

சுதந்திர ராகம் புரட்சியின் முடிவில்  பெற்றுக் கொண்ட தாகம் !

அறிவு ராகம் சிந்தனையின் ஓரத்தில் எழுதப் பட்ட வரலாறு !

உழைப்பு ராகம் இரத்தத்தின் இடையில் தெறிக்கப் பட்ட சுயமரியாதை !

அடிமை ராகம் இல்லாமையின் கண்களில் சுடர்விடும் கனல் !

புரட்சி ராகம் எரியும் நெருப்புக்கு ஊற்றப்படும் அழியாத தன்மானம் !

முதுமை ராகம் முடிந்து போனவைக்கு இருப்பிடம் நாடும் குடில் !

கவிதை ராகம் கவிஞனின் கற்பனையில் நடமாடும் ஞானக் கிடங்கு !

சீர்திருத்த ராகம் சிந்தனையின் முடிவில் பொறிக்கப் படும் கல்வெட்டு !

நட்பு ராகம் துன்பத்தின் தொடக்கத்தில்   பெறப்படும் அனுபவ முத்திரை !

அரசியல் ராகம் அறிவின் உழைப்பில் எழுதப்படும் முடியாத இலக்கியம் !

என்பதை உணர்ந்து

சிற்றின்பத்திற்கும் - பேரின்பத்திற்கும் உள்ள வேறுபாட்டையும்,

நிரந்தரமான - தற்காலிகமான தன்மைக்குள்ள வேறுபாட்டையும் ,

ஜீவாத்மா - பரமாத்மாவுக்குள்ள வேறுபாட்டையும் ,

நிரந்தரத்திற்கும் தற்காலிகத்திற்கும் உள்ள வேறுபாட்டையும்,

எது நிரந்தர நிம்மதி எது,  எது தற்காலிக நிம்மதி என்பதுக்குள்ள வேறுபாட்டையும்,

எது நிரந்தர இன்பம்,  எது தற்காலிக இன்பம், என்பதுக்குள்ள வேறுபாட்டையும்

பதி-பசு-பாசம் என்ற மூன்றுக்கும் இடையே உள்ள தொடர்பையும்

தத்துவத்தையும் ரகசியத்தையும் யார்ஒருவர் அறிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு மரணம் என்பது இல்லை பிறப்பு இறப்பு என்ற சுழலில் சிக்காமல் பிறவிப் பெருங்கடலில் சிக்கி துன்புறாமல் ஞானம் அடைவர் என்கிறார் திருமூலர்

 

------K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

 

&பேச்சாளர்

 

------05-03-2023

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////////////

 

No comments:

Post a Comment