பதிவு-4- ஆய பதிதான்-
-திருமூலர்
இருப்பு நிலையிலிருந்து விண் என்று சொல்லப்படக்கூடிய உயிரான ஜீவாத்மா இயக்க
நிலை பெற்று உருவாகிறது. இந்த விண் என்று சொல்லப்படக்கூடிய உயிரான ஜீவாத்மா கூடியே
பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படக்கூடிய நிலம் நீர் நெருப்பு காற்று விண் ஆகியவை
தோன்றுகிறது. இந்த பஞ்ச பூதங்கள்
ஒன்றுடன் ஒன்று சரியான விகிதத்தில்
இணைந்து உலகத்தில் உள்ள மனிதன் உட்பட அனைத்து உயிர்கள் மற்றும் உலகத்தில் உள்ள
தோற்றங்கள் அனைத்தும் தோன்றுகிறது.
உலகத்தில் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும்
தோன்றுவதற்கு காரணமாக இருப்பதும் உலகத்தோற்றங்கள் அனைத்தும் தோன்றுவதற்கு காரணமாக
இருப்பதும்
அனைத்து இயக்கங்களுக்கு காரணமாக இருப்பதும்
அனைத்து இயக்கங்களுக்கு மூலமாக இருப்பதும்
அனைத்து இயக்கங்களுக்கு அடிப்படையாக இருப்பதும்
அனைத்து இயக்கங்களுக்கு ஆதாரமாக இருப்பதுமாகிய
விண் என்ற உயிராகிய ஜீவாத்மாவை அதாவது
இந்துக்கள் குறிப்பிடும் பசுவை
சித்தாந்தவாதிகள் இயக்க நிலை என்றும்
கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவி என்றும்
குறிப்பிடுகின்றனர்
மனிதனுடைய உயிரானது படர்க்கை நிலை எய்தி
மனமாகிறது என்பதையும்
ஒடுக்க நிலை அடையும் போது அறிவாகிறது என்பதையும்
மனம் என்றால் என்ன என்பதையும் அறிவு என்றால்
என்ன என்பதையும்
மனதிற்கும் அறிவிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை
என்ன என்பதையும்
அறிவை எவ்வாறு அறிவது என்பதையும் மனதை எவ்வாறு
அறிவது என்பதையும்
எதை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்
என்பதையும்
எதை அறிய வேண்டும் என்பதையும் அறிவதற்காக ஓடும்
மனிதன்
பாசத்திற்குள் கட்டுண்டு விட்டதால் எதையும் அறிய
முடியாமல் தவிக்கிறான்
பாசவிலங்குகளை அறுக்கும் போது உண்மை என்ன என்பதை
உணர்ந்து கொள்கிறான்
இந்துக்கள் சொல்லக்கூடிய இந்த பாசத்தை
சிந்தாந்தவாதிகள் உணர்வு நிலை என்றும்
கிறிஸ்தவர்கள் சுதன் என்றும் குறிப்பிடுகின்றனர்
இந்துக்கள் குறிப்பிடும் பதி – பசு -பாசம்
கோயில்களில் சிவன் – நந்தி – பலிபீடம் என்றும்
சித்தாந்தவாதிகள் இருப்பு நிலை – இயக்க நிலை –
உணர்வு நிலை என்றும்
கிறிஸ்தவர்கள் பிதா-பரிசுத்த ஆவி – சுதன்
என்றும் குறிப்பிடுகின்றனர்
------K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்
&பேச்சாளர்
------05-03-2023
----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////////////
No comments:
Post a Comment