பதிவு-3- ஆய பதிதான்-
-திருமூலர்
இந்துக்கள் குறிப்பிடும் பதி-பசு-பாசம் என்பதை
கிறிஸ்தவர்கள் பிதா-பரிசுத்த ஆவி-சுதன் என்று குறிப்பிடுகின்றனர்
அதாவது பதியை பிதா என்றும், பசுவை பரிசுத்த ஆவி
என்றும்,
பாசத்தை சுதன் என்றும் குறிப்பிடுகின்றனர்
பதி-பசு-பாசம் என்ற மூன்றை அவரவர் உணர்ந்த
நிலைக்கேற்ப குறிப்பிடுகின்றனர்
இருப்பு நிலை-இயக்க நிலை -உணர்வு நிலை
-சித்தாந்தவாதிகள்
பிதா-பரிசுத்த ஆவி-சுதன்-கிறிஸ்தவர்கள்
முதல் நிலை மூலநிலை ஆதிநிலை என்று
சொல்லப்படக்கூடிய
அனைத்தையும் தாங்கிக் கொண்டிருப்பதும்
அனைத்திற்குள்ளும் இருப்பதும்
அனைத்தையும் படைத்துக் கொண்டிருப்பதும்
அனைத்தையும் காத்துக் கொண்டிருப்பதும்
அனைத்தையும் அழித்துக் கொண்டிருப்பதும் ஆகிய
சர்வவல்லமை படைத்த
இந்துக்கள் குறிப்பிடும் பதியை சிந்தாந்தவாதிகள்
இருப்பு நிலை என்றும்
கிறிஸ்தவர்கள் பிதா என்றும் குறிப்பிடுகின்றனர்
------K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்
&பேச்சாளர்
------05-03-2023
----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////////////
No comments:
Post a Comment