November 06, 2022

ஜபம்-பதிவு-893 மரணமற்ற அஸ்வத்தாமன்-25 (கிருஷ்ணனுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-893

மரணமற்ற

அஸ்வத்தாமன்-25

(கிருஷ்ணனுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துரோணர் :

அதர்மம் நடந்தால்

தான் நீங்கள்

சிவ அவதாரம்

எடுப்பீர்களா

 

அதர்மம் எதுவும்

இனி நடக்காமல்

இருக்க வேண்டும்

என்பதற்காக

சிவ அவதாரம்

எடுக்கலாமே

 

அனைவருக்கும்

நன்மைகளை

அளிப்பதற்காக

சிவ அவதாரம்

எடுக்கலாமே

 

அதற்கு

என்னுடைய

வரத்தைப்

பயன்படுத்திக்

கொள்ளலாமே

 

என்னுடைய

வரத்தைப்

பயன்படுத்தி

நீங்கள்

சிவஅவதாரம்

எடுக்கலாமே

 

சிவன் :

நான் சிவ

அவதாரம்

எடுக்க வேண்டியது

காலத்தின்

கட்டளையாகக்

கூட இருக்கலாம்

 

அதற்கான

சூழ்நிலை

தற்போது

உருவாகிக்

கூட

இருக்கலாம்

 

நீங்கள் கேட்ட

வரத்தில் உள்ள

வார்த்தைகளில்

பிரபஞ்ச ரகசியங்கள்

அடங்கிக் கூட

இருக்கலாம்

 

நடக்க வேண்டியதை

நடக்க வைப்பது

என்னுடைய

கடமையாக்

கூட இருக்கலாம்

 

துரோணர் :

சிவ அவதாரம்

எடுப்பீர்களா

 

சிவன் :

எடுக்கிறேன்

சிவ அவதாரம்

எடுக்கிறேன்

 

நான் துவாபர

யுகத்தில்

சிவ அவதாரம்

எடுக்கிறேன்

 

துரோணர் :

அப்படி என்றால்

நான் கேட்ட

வரத்தை எனக்கு

அளிப்பீர்கள்

என்று தானே

அர்த்தம்

 

சிவன் :

ஆமாம்

நீங்கள்

கேட்ட

வரத்தை

உங்களுக்கு

அளிக்கிறேன்

 

மனித குலத்தின்

கடைசி மனிதன்

இறந்த பிறகு

இறக்கக்

கூடியவனாக

நானே உங்களுக்கு

மகனாகப் பிறப்பேன்

என்ற வரத்தை

உங்களுக்கு

வரமாக

அளிக்கிறேன்

 

துரோணர் :

நான் கேட்ட

வரத்தை

வழங்கியதில்

எனக்கு

மகிழ்ச்சியே

 

இருந்தாலும்

எனக்கு நீங்கள்

மகனாகப் பிறந்து

இருக்கிறீர்கள்

என்பதை நான்

எப்படி தெரிந்து

கொள்வது

 

சிவன் :

நீங்கள் மட்டும்

இல்லை

இந்த உலகமே

தெரிந்து

கொள்ளும்

 

துரோணர் :

எப்படி

 

சிவன் :

சிவனுடைய

சிறப்பம்சமே

சிவனுடைய

நெற்றியில்

இருக்கும்

மூன்றாவது

கண் தான்

 

அந்த மூன்றாவது

கண்ணைப் போல

உங்களுக்கு பிறக்கப்

போகும் மகனுக்கும்

நெற்றியில்

ஸ்யமந்தகமணி

என்ற ஒரு

மணி இருக்கும்

 

அந்த மணி அவன்

பிறக்கும் போதே

அவனுடன் பிறந்தது

 

அதை வைத்து

நீ மட்டும் அல்ல

இந்த உலகமே

உனக்குப்

பிறந்த மகன்

சிவனின் அவதாரம்

என்பதைத் தெரிந்து

கொள்ளும்

 

 

-------ஜபம் இன்னும் வரும்

 

------என்றும் அன்புடன்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

------06-11-2022

------ஞாயிற்றுக் கிழமை

 

/////////////////////////////////////////////////

No comments:

Post a Comment