ஜபம்-பதிவு-894
மரணமற்ற
அஸ்வத்தாமன்-26
(கிருஷ்ணனுக்கே சாபம்
கொடுத்தவனின் கதை)
துரோணர்
:
ஸ்யமந்தகமணியின்
சிறப்பம்சம்
என்ன
என்று
நான் தெரிந்து
கொள்ளலாமா
ஐயனே
சிவன்
:
ஸ்யமந்தகமணி
உன்னுடைய
மகனின்
நெற்றியில்
இருக்கும்
வரைக்கும்
தேவர்
கந்தர்வர்
மனிதர்
அரக்கர்
ரிஷிகள்
யட்சர்கள்
மிருகங்கள்
ஆகிய
எந்த
உயிரினத்தாலும்
கொல்ல
முடியாது
எந்த
ஒரு
ஆயுதத்தாலோ
எந்த
ஒரு திவ்ய
அஸ்திரத்தாலோ
கொல்ல
முடியாது
எந்த
ஒரு
நோயும்
தீண்டாது
எளிமையாகச்
சொல்ல
வேண்டும்
என்றால்
ஸ்யமந்தகமணி
உன்னுடைய
மகனின்
நெற்றியில்
இருக்கும்
வரைக்கும்
அவனை
எந்த
ஒரு உயிரினத்தாலும்
கொல்ல
முடியாது
எந்த
ஒரு ஆயுதத்தாலும்
கொல்ல
முடியாது
எந்த
ஒரு
நோயும்
தீண்டாது
துரோணர்
:
இத்தகைய
சிறப்பைப்
பெற்ற
என்னுடைய
மகன்
வருங்காலத்தில்
அன்பை
வெளிப்படுத்தி
நல்லவனாக
இருப்பானா
அல்லது
கோபத்தை
வெளிப்படுத்தி
கெட்டவனாக
இருப்பானா
சிவன்
:
அன்பை
வெளிப்படுத்துபவர்களை
நல்லவர்கள்
என்றும்
கோபத்தை
வெளிப்படுத்துபவர்களை
கெட்டவர்கள்
என்றும்
அன்பையும்
கோபத்தையும்
வெளிப்படுத்துபவர்களை
வைத்து
நல்லவர்கள்
கெட்டவர்கள்
என்று
தீர்மானிக்கக்
கூடாது
அன்பையும்
கோபத்தையும்
ஏற்றுக்
கொண்டு
திருப்பி
கொடுப்பவர்கள்
எதை
கொடுப்பார்கள்
என்பதை
வைத்துத்
தான்
நல்லவர்கள்
யார்
கெட்டவர்கள்
யார்
என்பதைத்
தீர்மானிக்க
வேண்டும்
இரத்த
சம்பந்தம்
உள்ள
உறவில்
தாயும்
இரத்த
சம்பந்தம்
இல்லாத
உறவில்
மனைவியும்
மட்டும்
தான்
அன்பை
வெளிப்படுத்தினாலும்
கோபத்தை
வெளிப்படுத்தினாலும்
ஏற்றுக்
கொண்டு
அன்பை
மட்டுமே
திருப்பி
கொடுப்பவர்கள்
மற்ற
அனைவரும்
அன்பை
வெளிப்படுத்தினால்
அதை
ஏற்றுக்
கொண்டு
அன்பையும்
கோபத்தை
வெளிப்படுத்தினால்
அதை
ஏற்றுக்
கொண்டு
கோபத்தையும்
திருப்பி
கொடுப்பவர்கள்
அப்படி
பார்த்தால்
தாயும்
மனைவியும்
மட்டும்
தான்
நல்லவர்கள்
மற்ற
அனைவரும்
கெட்டவர்கள்
தானே
துரோணர்
:
புதியதாக
இருக்கிறதே
சிவன்
:
புதியது
இல்லை
புரியாமல்
இருந்ததை
புரிய
வைத்திருக்கிறேன்
புரிந்ததா
துரோணர்
:
புரிந்து
கொள்ள
முயற்சி
செய்கிறேன்
ஏற்றுக் கொண்டு
திருப்பிக்
கொடுப்பவர்களைப்
பற்றி
சொன்னீர்கள்
வெளிப்படுத்துபவர்களில்
யார் நல்லவர்
அன்பை
வெளிப்படுத்துபவரா
கோபத்தை
வெளிப்படுத்துபவரா
-------ஜபம்
இன்னும் வரும்
------என்றும்
அன்புடன்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
------06-11-2022
------ஞாயிற்றுக்
கிழமை
/////////////////////////////////////////////////
No comments:
Post a Comment