ஜபம்-பதிவு-879
மரணமற்ற
அஸ்வத்தாமன்-11
(கடவுளுக்கே சாபம்
கொடுத்தவனின் கதை)
இந்த ஆறு
குணங்களும்
மனிதனுள் மறைந்து
தானே இருக்கிறது
வெளிப்படையாக
இல்லையே
பேச்சிலோ
உருவத்திலோ
இவை
வெளிப்படுவதில்லையே
பஞ்சமா பாதகங்களை
செய்யும் போது
தானே வெளிப்படுகிறது
அப்படி இருக்கும்
போது
ஒருவரை
நல்லவரா
அல்லது
கெட்டவரா
என்று எப்படி
தீர்மானிக்க முடியும்
மறைவாக
உள்ளுக்குள்
இருப்பதை எப்படி
கண்டுபிடிக்க முடியும்
பேச்சையும்
உருவத்தையும் வைத்து
ஒருவரை நல்லவரா
கெட்டவரா என்பதைத்
தீர்மானிக்க முடியாது
நாட்டில் நிறைய
பேர்கள் இவ்வாறு
தான்
நல்லவர்களை
கெட்டவர்களாகவும்
கெட்டவர்களை
நல்லவர்களாகவும்
நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள்
நல்லவர்கள் என்று
நினைத்துக் கொண்டு
கெட்டவர்களிடம்
மாட்டிக் கொள்கிறார்கள்
கெட்டவர்கள் என்று
நினைத்துக் கொண்டு
நல்லவர்களிடம் பழகாமல்
விட்டு விடுகிறார்கள்
கிருபி :
ஒருவர்
நல்லவரா அல்லது
கெட்டவரா என்று
எப்படி
கண்டுபிடிப்பது
துரோணர் :
பழகிப்
பார்க்க
வேண்டும்
கிருபி :
பழகிப்
பார்த்தால்
தெரியுமா
துரோணர் :
தெரியாது
கிருபி :
பிறகு
துரோணர் :
நெருக்கமாகப்
பழக வேண்டும்
என்னிடம்
நெருக்கமாகப்
பழகிப் பார்
நான் நல்லவன்
என்பதைத்
தெரிந்து கொள்வாய்
என்னுடைய
காதலைப் புரிந்து
கொள்வாய்
கிருபி :
இது எப்போது
உண்டானது
துரோணர் :
இப்போது தான்
கிருபி :
பார்த்ததும் காதலா
துரோணர் :
பார்த்ததால் தான்
காதலே உண்டானது
கிருபி :
காதல் தோன்றுவதற்கு
கால நேரம்
இல்லையா
துரோணர் :
காதல்
எப்போது தோன்றும்
எந்த இடத்தில்
தோன்றும்
எந்த சூழ்நிலையில்
தோன்றும்
யாரைப் பார்த்து
தோன்றும்
என்று சொல்ல
முடியாது
கிருபி :
முதல் பார்வையிலேயா
காதல் வந்து
விட்டது
துரோணர் :
காதல் தோன்றுவதற்கு
பல தடவை
பார்க்க வேண்டும்
என்ற அவசியம்
இல்லை
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----24-10-2022
----திங்கட் கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment